Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 488 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
488திருப்பாவை || 15
எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.
இளம் கிளியே, Ilam kiliye - இளமை தங்கிய கிளி போன்றுள்ளவளே!
எல்லே, Elle - (இஃது) என்னே!
இன்னம், Innam - இத்தனை பெண் பிள்ளைகள் திறண்டுவந்த பின்பும்
உறங்குதியோ, Urangudhiyo - தூங்குகின்றாயோ? (என்று உணர்த்த வந்தவர்கள் கேட்க;)
நங்கைமீர், Nangaimeer - பெண்காள்!
போதர்கின்றேன், Podhargindrein - (இதோ) புறப்பட்டு வருகிறேன்
சில் என்று அழையேல்மின், Sil endru azhaiyelmin - சிலுகு சிலுகென்று அழையாதேயுங்கள் (என்று உறங்குகிறவள் விடைசொல்ல) இளங்கிளியே !
வல்லை, Vallai - (நீ வார்த்தை சொல்லுவதில்) வல்லமை யுடையவள்
உன் கட்டுரைகள், Un katturaigal - உனது கடுமையான சொற்களையும்
உன் வாய், Un vai - உன் வாயையும்
பண்டே, Pandae - நெடு நாளாகவே
அறிதும், Arithum - நாங்கள் அறிவோம் (என்று உணர்த்த வந்தவர்கள் சொல்ல)
நீங்கள் வல்லீர்கள், Neengal vallirkal - இப்படிச் சொல்லுகிற) நீங்கள் தான் (பேச்சில்) வல்லமை யுமையீர்(அன்றேல்)
நானே தான் ஆயிடுக, Naane thaan aiduga - (நீங்கள் செல்லுகிறபடி) நான் தான் (வல்லவளாய்) ஆகக் கடவேன் (உங்களுக்கு நான் செய்ய வேண்டுவதென்? என்று உள்ளுறங்குமவள் கேட்க
நீ, Nee - நீ
ஒல்லை, Ollai - சீக்கிரமாக
போதாய், Podhay - எழுந்து வா
உனக்கு, Unakku - (தனியே) உனக்கு மட்டும்
வேறு என்ன உடையை, Veru enna udaiyai - (நீ) வேறு என்ன (அதிசயத்தை) உடையையாயிரா நின்றாய்? என்று உணர்த்த வந்தவர்கள் கேட்க
எல்லாரும், Ellarum - (வர வேண்டியவர்கள்) எல்லாரும்
போந்தாரோ, Pontharo - வந்தனரோ? (என்று உறங்குமவள் கேட்க)
போந்தார், Pondhar - (எல்லோரும்) வந்தனர்
போந்து எண்ணிக்கை கொள், Pondhu ennikai kol - (நீ எழுந்துவந்து) எண்ணிப் பார்த்துக் கொள் (என்று உணர்த்த வந்தவர்கள் கூற)(என்னை ஏதுக்காக வரச் சொல்லுகிறீர்களென்று உறங்குமவள் கேட்க)
வல் ஆனை, Val aanai - (குவலயாபீட மென்னும்) வலிய யானையை
கொன்றானை, Konraanai - கொன்றொழித்தவனும்
மாற்றாரை, Maatraarai - சத்ருக்களான கம்ஸாதிகளை
மாற்று அழிக்க வல்லானை, Maatru azhikka vallaanai - மிடுக்கு அழிந்தவர்களாகச் செய்தருள வல்லவனும்
மாயனை, Maayanai - அற்புதனுமான கண்ணபிரானை
பாட, Paada - பாடுகைக்காக(ஒல்லை நீ போதாய் என்றழைக்கிறார்கள்)
ஏல் ஓர் எம்பாவாய், El or empavaay - ஏல் ஓர் எம்பாவாய்