| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 490 | திருப்பாவை || 17 | அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும் எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் அம்பரம் ஊடஅறுத்து ஓங்கி உளகுஅளந்த உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய் | அம்பரமே, ambaramae - வஸ்த்ரங்களையே தண்ணீரே, thanneerae - தீர்த்தத்தையே சோறே, soarae - சோற்றையே அறம் செய்யும், aram seyyum - தருமமாக அளிக்கின்ற எம்பெருமான் நந்தகோபாலா, emberumaan Nandhagopaalaa - எமக்கு ஸ்வாமியான நந்த கோபரே! எழுந்திராய், elundhiray - எழுந்திருக்க வேணும். கொம்பு அனார்க்கு எல்லாம், kombu anaarkku ellaam - வஞ்சிக் கொம்பு போன்ற மாதர்களுக்கெல்லாம் கொழுந்தே, kozhundhe - முதன்மை யானவளே! குலம் விளக்கே, kulam vilakkae - (இக்) குலத்திற்கு (மங்கள) தீபமாயிருப்பவளே எம்பெருமாட்டி, emberumaatti - எமக்குத் தலைவியானவளே! அசோதாய், yasodhaay - யசோதைப் பிராட்டியே! அறிவுறாய், arivuray - உணர்ந்தெழு’ அம்பாம் ஊடு அறுத்து, ambaam oodu aruthu - ஆகாசத்தை இடைவெளி யாக்கிக் கொண்டு ஓங்கி, oongi - உயர வளர்ந்து உலகு அளந்த, ulagu alandha - எல்லா) உலகங்களையும் அளந்தருளின உம்பர்கோமானே, umbarangomaanae - தேவாதி தேவனே! உறங்காது, urangadhu - இனிக்) கண்வளர்ந்தருளாமல் எழுந்திராய், elundhiray - எழுந்திருக்க வேணும் செம்பொன் கழல் அடி, sempon kazhal adi - சிவந்த பொன்னாற் செய்த வீரக் கழலை அணிந்துள்ள திருவடியை யடைய செல்வா, selva - சீமானே! பலதேவா!, paladheva! - பல தேவனே! உம்பியும் நீயும், umbiyum neeyum - உன் தம்பியாகிய கண்ணனும் நீயும் உறங்கேல், urangel - உறங்காதொழிய வேணும்’ |