| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 491 | திருப்பாவை || 18 | உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி கடைதிறவாய் வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண் பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச் செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய். | உந்து மத களிற்றன், undhu math kalitran - (தன்னால் வென்று) தள்ளப்படுகின்ற மத யானைகளை யுடையவனும் தோள் வலியன், thol valiyan - புஜ பலத்தை யுடையவனுமான நந்தகோபாலன், Nandhagopalan - நந்த கோபானுக்கு மருமகளே, marumagale - மருமகளானவளே! நப்பின்னாய், nappinnaay - ஓ! நப்பின்னைப் பிராட்டியே! கந்தம் கமழும் குழலீ, kandham kamazhum kuzhali - பரிமளம் வீசா நின்றுள்ள கூந்தலுடையவளே கடை திறவாய், kadai thiravaay - தாழ்ப்பாளைத் திறந்திடு கோழி, kozhi - கோழிகளானவை எங்கும் வந்து, engum vandhu - எல்லா விடங்களிலும் பரவி அழைத்தன காண், azhaithana kaan - கூவா நின்றனகாண்’ (அன்றியும்) மாதவி பந்தல் மேல், maadhavi pandhal mel - குருக்கத்திக் கொடிகளாலாகிய பந்தலின் மேல் (உறங்குகிற) குயில் இனங்கள், kuyil inangal - குயிற் கூட்டங்கள் பல்கால், palkaal - பல தடவை கூவின காண், koovina kaan - கூவா நின்றன காண்’ ஓடாத, odaadha - (போர்க் களத்தில் முதுகு காட்டி) ஓடாத பந்து ஆர்விரலி, pandhu aarvirali - பந்து பொருந்திய விரலை யுடையவளே!(க்ருஷ்ணனோடு விளையாடு கைக்கு உபகரணமான) பந்து உன் மைத்துனன் பேர் பாட, un maiththunan per paada - உனது கணவனான கண்ண பிரானுடைய திரு நாமங்களை (நாங்கள்) பாடும்படியாக சீர் ஆர் வளை ஒலிப்ப வந்து, seer aar valai olippa vandhu - சீர்மை பொருந்திய (உன்) கை வளைகள் ஒலிக்கும் படி (நடந்து) வந்து செந்தாமரை கையால், sendhaamarai kaiyaal - செந்தாமரைப் பூப் போன்ற (உன்) கையினால் மகிழ்ந்து திறவாய், magizhndhu thiravaay - (எங்கள் மீது) மகிழ்ச்சி கொண்டு (தாழ்ப்பாளைத் திறந்திடு’) ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavaay - ஏல் ஓர் எம் பாவாய் |