Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 492 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
492திருப்பாவை || 19
குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்
குத்து விளக்கு, kuthu vilakku - நிலை விளக்குளானவை
எரிய, eriya - (நாற்புரமும்) எரியா நிற்க
கோடு கால் கட்டில் மேல், kodu kaal kattil mel - யானைத் தந்தங்களினாற் செய்த கால்களை யுடைய கட்டிலிலே
மெத்தென்ற, methendru - மெத்தென்றிருக்குமதாயும்
பஞ்ச சயனத்தின் மேல் ஏறி, panja sayanathin mel aeri - (அழகு குளிர்த்தி மென்மை பரிமளம் வெண்மை என்னும்) ஐந்து குணங்களையுடைய துமான படுக்கையின் மீதேறி
கொத்து அலர் பூ குழல், kothu alar poo kuzhal - கொத்துக் கொத்தாக அலர்கின்ற பூக்களை யணிந்த கூந்தலை யுடையளான
நப்பின்னை, nappinnai - நப்பின்னைப் பிராட்டியினுடைய
கொங்கை, kongai - திருமுலைத் தடங்களை
மேல் வைத்து, mel vaithu - தன் மேல் வைத்துக் கொண்டு
கிடந்த, kidandha - பள்ளி கொள்கின்ற
மலர் மார்பா, malar maarbaa - அகன்ற திருமார்பை யுடைய பிரானே!
வாய் திறவாய், vaai thiravaay - வாய் திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்
மை தட கண்ணினாய், mai thada kanninaay - மையிட்டு அலங்கரிக்கப் பெற்றதும் விசாலமுமான கண்ணை யுடைய நப்பினாய்!
நீ, nee - நீ
உன் மணாளனை, un manaalanai - உனக்குக் கணவனான கண்ண பிரானை
எத்தனை போதும், eththanai podhum - ஒரு நொடிப் பொழுதும்
துயில் எழ ஒட்டாய், thuyil ezh odaay - படுக்கையை விட்டு எழுந்திருக்க ஒட்டுகிறாயில்லை;’
எத்தனையேலும், eththanaiyaelum - க்ஷண காலமும்
பிரிவு ஆற்ற கில்லாய், pirivu aattra killaay - (அவளைப்) பிரிந்து தரித்திருக்க மாட்டுகிறாயில்லை;’
ஆல், aal - ஆ! ஆ!!.
தகவு அன்று, thagavu andru - நீ இப்படி இருப்பது உனக்குத்) தகுதியானது’
தத்துவம், thathuvam - (இஃது) உண்மை
ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavaay - ஏல் ஓர் எம் பாவாய்