Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 494 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
494திருப்பாவை || 21
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.
ஏற்ற கலங்கள், etra kalangal - (கரந்த பாலை) ஏற்றுக் கொண்ட கலங்களானவை
எதிர் பொங்கி, edhir pongi - எதிரே பொங்கி
மீது அளிப்ப, meedhu alippa - மேலே வழியும்படியாக
மாற்றாத, maatradha - இடை விடாமல்
பால் சொரியும், paal soriyum - பாலைச் சுரக்கின்ற
வள்ளல், vallal - (பெண்களும் பேதைகளும் அணைத்துக் கொள்ளும்படி) நற்சீலத்தை யுடைய
பெரு பசுக்கள், peru pasukkal - பெரிய பசுக்களை
ஆற்ற படைத்தான், aatra padaithaan - விசேஷமாகப் படைத்துள்ள நந்த கோபர்க்குப் பிள்ளை யானவனே!
அறிவுறாய், arivuray - திருப் பள்ளி யுணர வேணும்’
ஊற்றம் உடையாய், ootram udaiyaay - அடியாரைக் காப்பதில் ஸ்ரத்தை யுடையவனே!
பெரியாய், periyaai - பெருமை பொருந்தியவனே!
உலகினில், ulaginil - (இவ்) வுலகத்திலே
தோற்றம் ஆய் நின்ற, thoatram aay ninra - ஆவிர்பவித்த
சுடரே, sudarae - தேஜோ ரூபியானவனே! துயில் எழாய்
மாற்றார், maatraar - சத்ருக்கள்
உனக்கு வலி தொலைந்து, unakku vali tholaindhu - உன் விஷயத்தில் (தங்களுடைய) வலி மாண்டு (உபயோகமற்ற வலிவை யுடையராய்.)
உன் வாசல் கண், un vaasal kan - உன் மாளிகை வாசலில்
ஆற்றாது வந்து, aattraadhu vandhu - கதி யற்று வந்து
உன் அடி பணியும் ஆ போலே, un adi paniyum aa polae - உன் திருவடிகளில் சரணாகதி பண்ணிக் கிடப்பது போல்
யாம், yaam - நாங்கள்
புகழ்ந்து, pugazhndhu - (உன்னைத்) துதித்து
போற்றி, potri - (உனக்கு) மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு
வந்தோம், vandhom - (உன் திரு மாளிகை வாசலில்) வந்து சேர்ந்தோம்’
ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavaay - ஏல் ஓர் எம்பாவாய்