திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 495 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
495திருப்பாவை || கீழ்ப்பாட்டில், “மாற்றாருனருக்கு வலி தொலைந்து” இத்யாதியால் தாங்கள் போக்கற்று வந்தவாறைக் கூறின விடத்தும், “இன்னமும் இவர்களுடைய அகவாயை அறியக் கடவோம்” என்று கண்ணபிரான் பேசாதே கிடக்க’ அது கண்ட ஆய்ச்சிகள், “பிரானே! இப்படியோ இன்னும் உன் திருவுள்ளத்தில் ஓடுவது? எமக்கு நீ தான் புகலாகாதொழிந்தாலும் வேறொரு புகலைத் தேடி ஓடாதபடி அநந்யார்ஹைகளாய் வந்து அடி பணியா நின்ற எங்களை நீ கடாக்ஷித்தருளவேணு” மென்று பிரார்த்திக்கும் பாசுரம், இது. 22
அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம் கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்
பதவுரை Show / Hide
அம் கண் மா ஞாலத்து அரசர், am kan maa nyaalathu arasar - அழகியதாய் விசாலமாய்ப் பெரிதாயுள்ள பூமியில் (அரசாட்சி செய்த ராஜாக்கள்)
அபிமான பங்கம் ஆய் வந்து, abimaana pangam aay vandhu - (தங்களுடைய) அஹங்காரமடங்கி வந்து
நின் பள்ளிக் கட்டில் கீழே, nin pallik kattil keezhe - உன் சிங்காசனத்தின் கீழ்
சங்கம் இருப்பார் போல், sangam iruppaar pol - திரள் திரளாக இருப்பது போலே
வந்து, vandhu - நாங்களும் உன் இருப்பிடத்தேற விடை கொண்டு
தலைப் பெய்தோம், thalai petrom - கிட்டினோம்
கிங்கிணி வாய்ச் செய்த, kingini vaai seidha - கிண்கிணியின் வாய்ப் போலிரா நின்ற (பாதிவிக ஸிதமான)
தாமரைப் பூ போலே, thaamarai poo polae - செந்தாமரைப் பூப்போன்ற
செம் கண், sem kan - சிவந்த திருக் கண்கள்
சிறுச்சிறிது, siru siridhu - கொஞ்சங்கொஞ்சமாக
எம் மேல், em mel - எங்கள் மேலே
விழியாவோ, vizhiyaavo - விழிக்க மாட்டாவோ?
திங்களும், thingalum - சந்திரனும்
ஆதித்யனும், aadityanum - ஸுர்யனும்
எழுந்தால் போல், ezhundhaal pol - உதித்தாற் போல
அம் கண் இரண்டும் கொண்டு, am kan irandum kondu - அழகிய திருக் கண்களிரண்டினாலும்
எங்கள் மேல் நோக்குதிஏல், engal mel nokkudhiyael - எங்களைக் கடாக்ஷித்தருள் வாயாகில்
எங்கள் மேல் சாபம், engal mel saabam - எங்கள் பக்கலிலுள்ள பாபம்
இழிந்து, izhindhu - கழிந்துவிடும்
ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavaay - ஏல் ஓர் எம்பாவாய்