Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 496 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
496திருப்பாவை || 23
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போருமா போலே நீ பூவைப்பூ வண்ணா
உன் கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து
யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்
மாரி, maari - மழைகாலத்தில்
மலை முழஞ்சில், malai muzhanjil - மலையிலுள்ள குஹைகளில்
மன்னி கிடந்து, manni kidandhu - (பேடையும் தானும் ஒரு வஸ்து என்னலாம்படி) ஒட்டிக் கொண்டு கிடந்து
உறங்கும், urangum - உறங்கா நின்ற
சீரிய சிங்கம், seeriya singam - (வீர்யமாகிற) சீர்மையை யுடைய சிங்கமானது
அறிவுற்று, arivurru - உணர்ந்தெழுந்து
தீ விழித்து, thee vizhithu - நெருப்புப் பொறி பறக்கும்படி கண்களை விழித்து
வேரி மயிர், vaeri mayir - (ஜாதிக்கு உரிய) பரிமள முள்ள உளைமயிர்களானவை
பொங்க, ponga - சிலும்பும்படி
எப்பாடும், epaadum - நாற் புறங்களிலும்
பேர்ந்து, perndhu - புடை பெயர்ந்து (அசைந்து)
உதறி, udhari - (சரிரத்தை) உதறி
மூரி நிமிர்ந்து, moori nimirthu - சோம்பல் முறித்து
முழங்கி, muzhangi - கர்ஜனை பண்ணி
புறப்பட்டு போதரும் ஆ போலே, purappattu podharum aa polae - வெளிப் புறப்பட்டு வருவது போல
பூவை பூ வண்ணா, poovai poo vanna - காயம் பூப்போன்ற உறத்தை யுடைய பிரானே!
நீ, nee - நீ
உன் கோயில் நின்று, un koyil ninru - உன்னுடைய திருக்கோயிலினின்றும்
இங்ஙனே போந்தருளி, ingganae poandharuli - இவ்விடத்தேற (ஆஸ்தாநத்தில்) எழுந்தருளி
உன் கோயில் நின்று, un koyil ninru - அழகிய ஸந்நிவேசத்தை யுடைய
கோப்பு உடைய, koppu udaiya - அழகிய ஸந்நிவேசத்தை யுடைய
சீரிய, seeriya - லோகோத்தரமான
சிங்காசனத்து, singaasanathu - எழுந்தருளியிருந்து
யாம் வந்த காரியம், yaam vandha kaariyam - நாங்கள் (மநோரதித்துக் கொண்டு) வந்த காரியத்தை
ஆராய்ந்து, aaraaindhu - விசாரித்து
அருள், arul - கிருபை செய்ய வேணும்’
ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavaay - ஏல் ஓர் எம்பாவாய்