| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 498 | திருப்பாவை || 25 | ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் | ஒருத்தி, oruththi - தேவகிப் பிராட்டியாகிற ஒருத்திக்கு மகன் ஆய், magan aay - பிள்ளையாய் பிறந்து, pirandhu - அவதரித்து ஓர் இரவில், oru iravil - (அவதார காலமாகிய அந்த) ஒரு ராத்திரியில் (திருவாய்ப்பாடியில் நந்தகோபர் திருமாளிகையில் வந்து சேர்ந்து) ஒருத்தி, oruththi - யசோதைப் பிராட்டியாகிற ஒருத்தி யினுடைய மகன் ஆய், magan aay - பிள்ளையாக ஒளித்து வளர, oli thuu valar - ஏகாந்தமாக வளருங் காலத்தில் தான், thaan - தான் (கம்ஸன்) தரிக்கிலான் ஆகி, tharikkilaan aagi - (அங்ஙனம் வளர்வதைப்) பொறாதவனாய் தீங்கு நினைந்த, theengu ninaindh - (இவனை எப்படியாகிலும் கொல்ல வேணும் என்று) தீங்கை நினைத்த கஞ்சன், kanjan - கம்ஸனுடைய கருத்தை, karuthai - எண்ணத்தை பிழைப்பித்து, pizhaippithu - வீணாக்கி வயிற்றில், vayitril - (அக் கஞ்சனுடைய) வயிற்றில்; நெருப்பு என்ன நின்ற, neruppu enna nindra - ‘நெருப்பு’ என்னும்படி நின்ற நெடு மாலே, nedu maale - ஸர்வாதிகனான எம்பெருமானே! உன்னை, unnai - உன்னிடத்தில் அருத்தித்து வந்தோம், arutthithu vandhom - (புருஷார்த்தத்தை) யாசியா நின்று கொண்டு வந்தோம்; பறை தருதி ஆகில், parai taruthi aagil - எங்களுடைய மநோ ரதத்தை நிறைவேற்றித் தருவாயாகில் திரு தக்க செல்வமும் , thiru thakka selvamum - பிராட்டி விரும்பத் தக்க ஸம்பத்தையும் சேவகமும், sevakamum - வீர்யத்தையும் யாம் பாடி , yaam paadi - நாங்கள் பாடி , வருத்தமும் தீர்ந்து, varuthamum theerndhu - உன்னைப் பிரிந்து படுகிற துயரம் நீங்கி மகிழ்ந்து, Magizhndhu - மகிழ்ந்திடுவோம்; ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavai - ஏல் ஓர் எம்பாவாய் |