| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 5 | திருப்பல்லாண்டு || 5 | அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி அசுரர் இராக்கதரை இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன் தனக்கு தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது ஆயிர நாமம் சொல்லிப் பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல் லாயிரத்தாண்டு என்மினே | அண்டக் குலத்துக்கு, Andak Kulathukku - அண்டங்களின் ஸமூஹத்துக்கு அதிபதி ஆகி, Adhipathi Aagi - நியமிப்பவனாகி அசுரர், Asurar - அஸுரர்களும் இராக்கதரை, Iraakkatharai - ராக்ஷஸர்களுமாகிற இண்டக் குலத்தை, Indak Kulathai - நெருக்கின கூட்டத்தை எடுத்து, Eduthu - திரட்டி களைந்த, Kalaindha - ஒழித்த இருடீகேசன் தனக்கு, Irudeekesan Thaankku - இந்திரியங்களுக்கு அதிபதியான எம்பெருமானுக்கு தொண்டக் குலத்தில் உள்ளீர், Thondak Kulathil - அடிமை செய்பவர்கள் குலத்திலே உள்ளீர், Ullireer - உள்ளவர்களான வந்து, Vandhu - எங்கள் கோஷ்டிக்கு வந்து அடி, Adi - அச்சுதனுடைய திருவடிகளை தொழுது, Thozhudhu - ஸேவித்து ஆயிர நாமம் , Ayira Naamam - அவனுடைய ஆயிரம் பெயர்களையும் சொல்லி, solli - வாயாரச்சொல்லி பண்டைக் குலத்தை, Pandai Kulathai - புருஷோத்தமனிடம் சென்று மற்றொரு பலனைப் பெற்று அகலுபவர்களாயிருந்த பழைய ஜன்மத்தை தவிர்ந்து, Thavirndhu - நீக்கி பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே, Pallaandu Pallaayiraththaandu Enmine - பலகால் மங்களாசாஸனம் செய்யுங்கள் |