| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 500 | திருப்பாவை || 27 | கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். | கூடாரை, koodaarai - தன் அடி பணியாதவர்களை வெல்லும் சீர், vellum seer - வெல்லுகின்ற குணங்களை யுடைய கோவிந்தா, govindhaa - கண்ண பிரானே! உன் தன்னை, un thannai - உன்னை பாடி, paadi - (வாயாரப்)பாடி பறை கொண்டு, parai kondhu - (உன்னிடத்து யாம் வேண்டுகின்ற) பறையைப் பெற்று யாம் பெறு சம்மானம், yaam peru sammaanam - (பின்னும்) நங்கள் பெறும் படியான ஸம்மாநமாவது நாடு புகழும் பரிசினால், naadu pugazhum parisinaal - நாட்டார் புகழும்படியாக சூடகம், soodagam - (கையிலணியும் ஆபரணமான) சூடகங்களும் தோள் வளை, thol valai - தோள்வளைகளும் தோடு, thodu - (காதுக்கிடும் ஆபரணமான) தோடும் செவிப் பூ, sevi poo - கர்ணப் பூவும் பாடகம், paadagam - பாதகடகமும் என்றனையப் பல் கலனும், endranaiya pal kalenum - என்று சொல்லப்படும் இவ்வாபரணங்கள் போன்ற மற்றும் பல ஆபரணங்களும் (உன்னாலும் நப்பின்னைப் பிராட்டியினாலும் பூட்டப்பட) யாம் நன்றாக அணிவோம் ஆடை, aadai - சேலைகளை உடுப்போம், uduppom - (நீ உடுத்த) உடுத்துக் கொள்வோம்; அதன் பின்னே, adhan pinne - அதற்குப் பின்பு பால் சோறு, paal soru - பாற் சோறானது (க்ஷிராந்நம்) மூட, mooda - மறையும் படியாக நெய் பெய்து, nei peythu - நெய் பரிமாறி முழங்கை வழி, muzhangai vazhi - முழங்கையால் வழியும் படியாக (உண்டு) கூடி, koodi - (நீயும் நாங்களுமாகக்) கூடியிருந்து குளிர்ந்து, kulirndhu - குளிர வேணும்: ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavai - ஏல் ஓர் எம்பாவாய் |