Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 501 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
501திருப்பாவை || 28
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து
உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறைஒன்றும் இல்லாத கோவிந்தா
உந்தன்னோடு உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால்
உந்தன்னை சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா!, kuraiyu ondruum illaadha govindhaa! - உனக்கொரு குறையுண்டாகிலன்றோ எங்களுக்கொரு குறையுண்டாவது என்ற கருத்தைக் காட்டும்
யாம், yaam - நாங்கள்
கறவைகள் பின் சென்று, karavaigal pin sendru - பசுக்களின் பின்னே போய்
கானம் சேந்து, gaanam sendhu - காடு சேர்ந்து
உண்போம், unbom - சரீர போஷணமே பண்ணித் திரியு மவர்களாயும்
அறிவு ஒன்றும் இல்லாத, arivu ondruum illaadha - சிறிதளவும் அறிவில்லாத
ஆண் குலத்து, aan kulathu - இடைக் குலத்தில்
உன் தன்னை, un thannai - உன்னை
பிறவி பெறும்தனை புண்ணியம் உடையோம், piravi perumthannai punniyam udaiyom - (ஸஜாதீயனாகப்) பெறுவதற்குத் தக்க புண்ணியமுடையவர்களாயுமிரா நின்றோம்
இறைவா, iraiva - ஸ்வாமியான கண்ண பிரானே
உன் தன்னோகி உறவு, un thannogi uravu - உன்னோடு (எங்களுக்குண்டான) உறவானது
இங்கு தமக்கு ஒழிக்க ஒழியாது, ingu thamakku ozhikka ozhiyadhu - இங்கு உன்னாலும் எம்மாலும் ஒழிக்க ஒழிய மாட்டாது
அறியாத பிள்ளைகளோம், ariyadha pillai kaalom - (லோக மரியாதை ஒன்றும்) அறியாத சிறு பெண்களான நாங்கள்
உன் தன்னை, un thannai - உன்னை
அன்பினால், anbinal - ப்ரீதியினாலே
சிறு பேர் அழைத்தனவும், siru per azhaithanavum - சிறிய பேராலே (நாங்கள்) அழைத்ததைக் குறித்தும்
நீ, nee - (ஆச்ரித வத்ஸலனான) நீ
சீறி அருளாதே, seeri arulaadhe - கோபித்தருளாமல்
பறை தாராய், parai thaaraay - பறை தந்தருளவேணும்;
எல் ஓர் எம் பாவாய், el or em paavai - எல் ஓர் எம்பாவாய்