Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 502 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
502திருப்பாவை || 29
சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து
நீ குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும்
உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்
கோவிந்தா, govindhaa - கண்ண பிரானே!
சிற்றம் சிறுகாலை, sitram sirukalai - விடி காலத்திலே
வந்து, vandhu - (இவ் விடத்தேற) வந்து
உன்னை சேவித்து, unnai sevithu - உன்னைத் தண்டனிட்டு
உன் பொன் தாமரை அடி போற்றும் பொருள், un pon thaamarai adi potrum porul - உனது அழகிய திருவடித் தாமரைகளை மங்களாசாஸநம் பண்ணுவதற்குப் பிரயோஜனத்தை
கேளாய், kelaay - கேட்டருள வேணும்;
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ, perum meydhu unnum kulathil pirandha nee - பசுக்களை மேய்த்து உண்ணும் இடைக்குலத்தில் பிறந்த நீ
எங்களை, engalai - எங்களிடத்தில்
குற்றேவல், kutraeval - அந்தரங்க கைங்கரியத்தை
கொள்ளாமல் போகாது, kollaamal pogadhu - திருவுள்ளம் பற்றாதொழிய வொண்ணாது;
இற்றை பறை கொள்வான் அன்று காண், itrai parai kolvaan andru kaan - இன்று (கொடுக்கப்படுகிற இப்) பறையைப் பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் வந்தோமல்லோம்;
எற்றைக்கும், ettraikum - காலமுள்ளவளவும்
ஏழ் ஏழ் பிறவிக்கும், ez ez piravigkum - (உன்னுடைய) எவ் வவதாரங்களிலும்
உன் தன்னோடு, un thannodu - உன்னோடு
உற்றோமே ஆவோம், utrome aavom - உறவு உடையவர்களாகக் கடவோம்;
உனக்கே, unakke - உனக்கு மாத்திரமே
நாம், naam - நாங்கள்
ஆள் செய்வோம், aal seyvom - அடிமை செய்யக் கடவோம்;
எம், em - எங்களுடைய
மற்றை காமங்கள், matrai kaamangal - இதர விஷய விருப்பங்களை
மாற்று, maartru - தவிர்க்கருள வேணும்;
ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavai - ஏல் ஓர் எம் பாவாய்