| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 503 | திருப்பாவை || 30 | வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவைப் பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் | வங்கம் கடல், vangam kadal - கப்பல்களை யுடைய (திருப்பாற்) கடலை கடைந்த, kadaindha - (தேவர்களுக்காகக்) கடைந்த ஸ்ரீ ய:பதியான கேசவனை, kaesavanai - கண்ண பிரானை திங்கள் திரு முகத்து சே இழையார், thingal thiru mukathu se izhaiyaar - சந்திரன் போன்ற அழகிய முகத்தையும் செவ்விய ஆபரணங்களையுமுடைய ஆய்ச்சிகள் சென்று, sendru - அடைந்து இறைஞ்சி, iraainji - வணங்கி அங்கு, angu - அத் திருவாய்ப் பாடியில் பறைகொண்ட ஆ ஆற்றை, paraikonda aa aatrai - (தங்கள்)புருஷார்த்தத்தைப் பெற்ற அந்த விருத்தாந்தத்தை. அணி புதுவை, aṇi pudhuvai - அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் (திரு வவதரித்த) பை கமலம் தண் தெரியல் பட்டர் பிரான், pai kamalam thaṇ theriyal pattar piraan - பசுமை பொருந்திய தாமரை மலர்களினாலான குளிர்ந்த மாலையை யுடைய பெரியாழ்வாருடைய (திருமகளான) கோதை, ko̱thai - ஆண்டாள் சொன்ன, sonna - அருளிச் செய்த சங்கம் தமிழ் மாலை முப்பதும், saṅkam tamizh mālai muppathum - திரள் திரளாக அநுபவிக்க வேண்டிய தமிழ் மாலையாகிய இம் முப்பது பாசுரங்களையும் தப்பாமே, thappaame - தப்பாமல் இங்கு, ingu - இந் நிலத்தில் இ பரிசு, i parisu - இவ் வண்ணமே உரைப்பார், uraippaar - ஓதுமவர்கள் ஈர் இரண்டு மால் வரை தோள், eer irandu maal varai thol - பெரிய மலை போன்ற நான்கு திருத் தோள்களை யுடையவனும் செம்கண் திருமுகத்து, semkan tirumugathu - சிவந்த திருக் கண்களை யுடைய திரு முகத்தை யுடையவனும் செல்வம், selvam - ஐஸ்வர்யத்தை யுடையனும் திருமாலால், thirumaalaal - ஸ்ரீ ய:பதியுமான எம்பெருமானாலே எங்கும், engum - எவ்விடத்தும் திருஅருள் பெற்று, thiruarul petru - (அவனுடைய) க்ருபையைப் பெற்று இன்புறுவர், inpurvar - ப்ரஹ்ம ஆனந்த சாலிகளாக ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavai - ஏல் ஓர் எம்பாவாய் |