Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 504 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
504நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 1
தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா
உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே
அனங்க தேவா, Ananga Deva - காம தேவனே!
தைஒரு திங்களும், Thai Oru Thingalum - தை மாதம் முழுதும்
தரை விளக்கி, Tharai Vilakki - நீ எழுந்தருளவேண்டிய இடத்தைச் சோதித்து மண்டல பூஜைக்காக
தண் மண்டலம் இட்டு, Than Mandalam ittu - குளிர்ந்த (அழகிய) மண்டலாகாரத்தை இட்டு
மாசிமுன் நாள், Maasi Mun Naal - மாசி மாதத்தின் முதற்பக்ஷத்தில்
ஐய நுண்மணல் கொண்டு, Aiya Nunnmanal Kondu - அழகிய சிறிய மணல்களினால்
தெரு, Theru - (நீ எழுந்தருளும்) வீதிகளை
அழகினுக்கு அணிந்து அலங்கரித்து, Azhaginukku Anindhu Alankaridhu - அழகுண்டாவதற்காக நன்றாய் அலங்கரித்து
உய்யவும் ஆம் கொலோ என்று சொல்லி, Uyyavum Aam Kolo Endru Solli - (காமனைத் தொழுதால் நாம்) உஜ்ஜீவிக்கலாமோ? எனக் கருதி
உன்னையும், Unnaiyum - (காமனாகிய) உன்னையும்
உம்பியையும், Umbiyaiyum - உன் தம்பியான சாமனையும்
தொழுதேன், Thozhuthen - வணங்கா நின்றேன்
வெய்யது, Veiyadhu - (ப்ரதி கூலர் பக்கலில்) உக்கிரமானதும்
தழல் உமிழ், Thazhal Umizh - நெருப்புப் பொறிகளை உமிழா நிற்பதுமான
ஓர் சக்கரம், Or Chakkaram - ஒப்பற்ற திரு வழி யாழ்வானை
கை, Kai - திருக் கையில் அணிந்துள்ள
வேங்கடவற்கு, Vengadavarku - திருவேங்கடமுடையானுக்கு
என்னை, Ennai - என்னை
விதிக்கிற்றி, Vithikkiri - கைங்கரியம் பண்ணும்படி கல்பிக்க வேணும்