Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: நாச்சியார் திருமொழி (143 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
504நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 1
தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா
உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே
அனங்க தேவா, Ananga Deva - காம தேவனே!
தைஒரு திங்களும், Thai Oru Thingalum - தை மாதம் முழுதும்
தரை விளக்கி, Tharai Vilakki - நீ எழுந்தருளவேண்டிய இடத்தைச் சோதித்து மண்டல பூஜைக்காக
தண் மண்டலம் இட்டு, Than Mandalam ittu - குளிர்ந்த (அழகிய) மண்டலாகாரத்தை இட்டு
மாசிமுன் நாள், Maasi Mun Naal - மாசி மாதத்தின் முதற்பக்ஷத்தில்
ஐய நுண்மணல் கொண்டு, Aiya Nunnmanal Kondu - அழகிய சிறிய மணல்களினால்
தெரு, Theru - (நீ எழுந்தருளும்) வீதிகளை
அழகினுக்கு அணிந்து அலங்கரித்து, Azhaginukku Anindhu Alankaridhu - அழகுண்டாவதற்காக நன்றாய் அலங்கரித்து
உய்யவும் ஆம் கொலோ என்று சொல்லி, Uyyavum Aam Kolo Endru Solli - (காமனைத் தொழுதால் நாம்) உஜ்ஜீவிக்கலாமோ? எனக் கருதி
உன்னையும், Unnaiyum - (காமனாகிய) உன்னையும்
உம்பியையும், Umbiyaiyum - உன் தம்பியான சாமனையும்
தொழுதேன், Thozhuthen - வணங்கா நின்றேன்
வெய்யது, Veiyadhu - (ப்ரதி கூலர் பக்கலில்) உக்கிரமானதும்
தழல் உமிழ், Thazhal Umizh - நெருப்புப் பொறிகளை உமிழா நிற்பதுமான
ஓர் சக்கரம், Or Chakkaram - ஒப்பற்ற திரு வழி யாழ்வானை
கை, Kai - திருக் கையில் அணிந்துள்ள
வேங்கடவற்கு, Vengadavarku - திருவேங்கடமுடையானுக்கு
என்னை, Ennai - என்னை
விதிக்கிற்றி, Vithikkiri - கைங்கரியம் பண்ணும்படி கல்பிக்க வேணும்
505நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 2
வெள்ளை நுண் மணல் கொண்டு தெருவணிந்து
வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து
முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து
முயன்று உன்னை நோற்கின்றேன் காம தேவா
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கடல் வண்ணன் என்பதோர் பேர் எழுதி
புள்ளினை வாய் பிளந்தான் எனபது ஓர்
இலக்கினில் புக வென்னை எய்க்கிற்றியே
காமதேவா, Kaama Deva - மன்மத தேவனே!
வெள்ளை நுண் மணல் கொண்டு, Vellai Nun Manal Kondu - வெளுத்த சிறிய மணல்களைக் கொண்டு
முள்ளும் இல்லா சுள்ளி, Mullum Illa Sulli - (எறும்பு முதலியவை இல்லாத வளவே யன்றியே) முள்ளுமில்லாத சுள்ளிகளை
எரி மடுத்து, Eri Maduthu - நெருப்பிலிட்டு
முயன்று, Muyandru - (இவ்வாறான) ப்ரயத்நங்களைச் செய்து
உன்னை நோற்கின்றேன், Unnai Norkindren - நோன்பு நோற்கா நின்றேன் (ஆன பின்பு)
கள் அவிழ், Kal Avizh - தேன் பெருகா நின்றுள்ள
பூ புஷ்பங்களாகிற கணை, Poo Pushpangalagira Kanai - அம்புகளை
தெரு அணிந்து, Theru Anindhu - வீதிகளை அலங்கரித்து,
வெள் வரைப் பதன் முன்னம், Vel Varaipathan Munnam - கிழக்கு வெளுப்பதற்கு முன்னமே
துறை படிந்து, Thurai Padindhu - நீர்த் துறைகறில் முழுகி,
தொடுத்துக் கொண்டு, Toduthu Kondu - (வில்லில்) தொடுத்துக் கொண்டு
கடல் வண்ணன் என்பது ஓர் பேர் எழுதி, Kadal Vannan Enbathu Or Per Yezhudhi - கண்ண பிரானுடைய கடல் வண்ணனென்கிற ஒரு நாமத்தை (அம்பிலே) எழுதிக் கொண்டு
புள்ளினை வாய் பிளந்தான் என்பது ஓர் இலக்கினில், Pullinai Vai Pilandhan Enbathu Or Ilakkinil - பகாஸுரனுடைய வாயைக் கீண்டெறிந்தவன், என்னும் ஓர் குறியாகிற அக்கடல்வண்ணன் பக்கலில்
புக, Puga - (நான்) சென்று சேரும்படி என்னை
என்னை, Ennai - என்னை
எய்கிற்றி, Eykitri - (நீ) சேர்ப்பிக்கவேணும்.
506நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 3
மத்த நன்னறு மலர் முருக்க மலர் கொண்டு
முப்போது முன்னடி வணங்கி
தத்துவமிலி என்று நெஞ்செரிந்து
வாசகத்தழித்து உன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கோவிந்தன் என்பதோர் பேரெழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும்
விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே
நல்நறு மத்த மலர், Nalnaru Matha Malar - நல்ல மணமிக்க ஊமத்த மலர்களையும்
முருக்கமலர்கொண்டு, Murukka Malar Kondu - முருக்க மலர்களையுங் கொண்டு
முப்போதும், Muppothum - மூன்று காலங்களிலும்
உன் அடி வணங்கி, Un Adi Vanangi - உன் அடியை வணங்கி
தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்துவாசகத்து அழித்து உன்னை வைதிடாமே ‘இவன் பொய்யான்தெய்வம், என்று, Thathuvam ili Endru Nenju Erindhu Vasakathu Azhithu Unnai Vaithidame 'Ivan Poiyan Theivam', Endru - இவன் பொய்யான்தெய்வம், என்று
சொல்லிமனங் கொதித்து அழித்து வாய்கொண்டு உன்னை நிந்திக்க வேண்டாதபடி

கொத்து அலர்ப்பூ கணைதொடுத்துக் கொண்டு, Kothu Alar poo kanai Thoduthu Kondu - கொத்துக் கொத்தாக விகஸியா நின்ற புஷ்பங்களாகிற அம்புகளை வில்லில் தொடுத்துக் கொண்டு
கோவிந்தன் என்பது ஓர் பேரெழுதி, Govindhan Enbathu Or Per Ezhuthi - கோவிந்த நாமத்தை (நெஞ்சில்) தரித்துக் கொண்டு
வித்தகன் வேங்கடம் வாணன் என்னும் விளக்கினில் புக, Vithagan Vengadam Vaanan Enum Vilakinil Puga - அற்புதனான திருவேங்கடமுடையான் என்கிற விளக்கிலே
என்னை விதிக்கிற்றி, Ennai Vithikitri - என்னை நீ செய்ய வேணும்.
507நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 4
சுவரில் புராண நின் பேர் எழுதிச்
சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்ககளும் கருப்பு வில்லும்
காட்டித் தந்தேன் கண்டாய் காம தேவா
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றயே
புராண, Purana - நெடுநாளாக எனக்கு உபகரிக்கு மவனே!
காம தேவா, Kama Deva - மன்மதனே!
சுவரில், Suvaril - சுவரிலே
நின் பேர், Nin Per - உனது பெயர்களை
எழுதி, Ezhuthi - எழுதி
சுறவம் நல் கொடிகளும், Suravam Nal Kodigalum - மீன்களாகிற நல்ல த்வஜங்களையும்
துரங்கங்களும், Thurangangalum - குதிரைகளையும்
கவரி பிணாக்களும், Kavari Pinaakkalum - சாமரம் வீசுகின்ற பெண்களையும்
கரும்பு வில்லும், Karumbu Villum - கரும்பாகிற தநுஸ்ஸையும்
காட்டித் தந்தேன் கண்டாய், Kaati Thandhen Kandai - உனக்கு உரியனதாகக் காட்டிக் கொடுத்தேன்
அவரைப் பிராயம் தொடங்கி, Avarai Pirayam Thodangi - இளம் பருவமே தொடங்கி
என்றும் ஆதரித்து, Endrum Aatharithu - (அக் கண்ண பிரானையே) எப்போதும் விரும்பி
எழுந்த, Ezhundhu - கிளர்ந்த
என் தடம் முலைகள், En Thadam Mulaigal - எனது பருத்த முலைகளை
துவரைப் பிரானுக்கே, Thuvarai Piranukke - த்வாரகைக்குத் தலைவனான அக் கண்ண பிரானுக்கே
சங்கற்பித்து, Sangarpithu - (அநுபவிக்கத் தக்கவை என்று) ஸங்கல்பித்து
தொழுது வைத்தேன், Thozhudhu Vaithen - (உன்னை) தண்டனிடா நின்றேன்
ஒல்லை விதிக்கிற்றி, Ollai Vithikkiri - (இந்த மநோரதத்தை) (நீ) சீக்கிரமாகத் தலைக் கட்டுவிக்க வேணும்.
508நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 5
வானிடை வாழும் அவ்வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த வவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று
உன்னித் தெழுந்த என் தடமுலைகள்
மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே
கண்டாய் மன்மதனே!, Kandai Manmadhane! - மன்மதனே!
வானிடை, Vaanidai - ஸ்வர்க்க லோகத்தில்
வாழும், Vaazhum - வாழுகின்ற
அவ் வானவர்க்கு, Av Vaanavarkku - விலக்ஷணரான தேவர்களுக்கென்று
மறையவர், Maraiyavar - ப்ராஹ்மணர்
வேள்வியில், Velviyil - யாகத்தில்
வகுத்த அலி, Vagutha Ali - கொடுத்த ஹவிஸ்ஸை
கானிடை திரிவது ஓர் நரி புகுந்து, Kaanidai Thirivadhu Or Nari Pugundhu - காட்டிலே திரிகின்ற ஒரு நரியானது வந்து
என் தடம் முலைகள், En Thadam Mulaigal - எனது பருத்த முலைகளானவை
மானிடவர்க்கு என்று பேச்சு படில், Maanidavarkku Endru Pechu Padil - (அப்புருஷோத்தமனை யொழியச் (சில) மநுஷ்யர்களுக்கு (உரியவை)
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப, Kadappadhum Moppathum Seivadhu Oppa - கடந்தும் மோந்து பார்த்தும் கெடுப்பது போல
ஊனிடை, Oonidai - (தனது) திருமேனியில்
ஆழி சங்கு, Aazhi Sangu - திருவாழியையும் திருச்சங்கையும் (அணிந்துள்ள)
உத்தமற்கு என்று, Uthamarku Endru - புருஷோத்தமனுக்காக
உன்னித்து எழுந்த, Unnithu Ezhundha - ஆதரவுடன் கிளர்ந்த யவை என்கிற பேச்சு (நாட்டில்) உண்டாகுமே யானால்
வாழகில்லேன், Vaazhakillen - உயிர் வாழ்ந்திருக்க மாட்டேன்
509நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 6
உருவுடையார் இளையார்கள் நல்லார் ஒத்து வல்லார்களைக் கொண்டு வைகல்
தெருவிடை எதிர் கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காம தேவா
கருவுடை முகில் வண்ணன் காயா வண்ணன் கருவிளை போல் வண்ணன் கமல வண்ணத்
திருவுடை முகத்தினில் திருக் கண்களால் திருந்தவே நோக்க எனக்கு அருள் கண்டாய்
காமதேவா, Kaama dheva - மன்மதனே!
உரு உடையார், Uru Udayaar - அழகிய வடிவையுடையராயும்
இளையார்கள், Ilaiyaarkal - யௌவன பருவமுடையராயும்
நல்லார், Nallaar - காமதந்திரத்திற் சொன்ன ஆசாரங்களை யுடையராயும்
பங்குனி நாள், Panguni Naal - பங்குனி மாதத்துப் பெரிய திருநாளில்
திருந்தவே நோற்கின்றேன், Thirundhave Norkindren - நல்ல அறிவுடனே (உன்னைக் குறித்து) நோன்பு நோற்கா நின்றேன்’
கரு உடை முகில் வண்ணன், Karu Udai Mugil Vannan - (நீரைக்) கருவிலே யுடைய மேகம் போன்ற திருநிறமுடையவனும்
காயா வண்ணன், Kaayaa Vannan - காயாம் பூப் போன்ற திரு நிறத்தை யுடையவனும்
ஒத்து வல்லார்களை கொண்டு, Othu Vallargalai Kondu - காம ஸுத்திரத்தில் வல்லமை யுடையவராயுமுள்ளவர்களை முன்னிட்டுக் கொண்டு
வைகல், Vaigal - நாள்தோறும்
தெருவிடை, Theruvidai - நீ வரும் வழியிலே
எதிர் கொண்டு, Edhir Kondu - எதிரே சென்று
கருவிளை போல் வண்ணன், Karuvilai Pol Vannan - காக்கணம் பூப் போல் பளபளப்பை யுடையனுமான கண்ண பிரான்
கமலம் வண்ணம் திரு உடை முகத்தினில் திருக் கண்களால், Kamalam Vannam Thiru Udai Mugathinil Thiru Kankalal - செந்தாமரை மலரின் நிறம் போன்ற காந்தியை யுடைய திருமுகமண்டலத்திலுண்டான திருக்கண்களினால்
எனக்கு, Enakku - என் விஷயத்தில்
திருந்தவே நோக்க, Thirundhave Nokka - விசேஷ கடாக்ஷம் செய்தருளும்படி
அருள், Arul - நீ கிருபை பண்ண வேணும்.
510நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 7
காயுடை நெல்லொடு கரும்பமைத்து கட்டி அரிசி அவல் அமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே யுன்னை வணங்குகின்றேன்
தேசமுன் அளந்தவன் திரிவிக்ரமன் திருக் கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
சாயுடை வயிறும் என் தட முலையும் தரணியில் தலைப் புகழ் தரக்கிற்றியே
மன்மதனே, Manmadhane - மன்மதனே!
காய் உடை நெல்லோடு, Kaai Udai Nellodu - பசுங்காய் நெல்லும்
கரும்பு, Karumbu - கரும்பும்
அமைத்து, Amaithu - சமைத்து
கட்டி, Katti - (அதனோடு கூட) கருப்புக் கட்டியும்
அரிசி, Arisi - பச்சரிசியும்
அவல், Aval - அவலும்
அமைத்து, Amaithu - (ஆகிய இவற்றையும்) சமைத்து
அளந்தவன், Alanthavan - (திருவடிகளால்) அளந்தருளினவனும்
திருவிக்கிரமன், Thiruvikkiraman - திருவிக்ரமனென்னும் திருநாமமுடையனுமான கண்ணபிரான்
என்னை, Ennai - என்னுடைய
சாய் உடை, Saai Udai - ஒளியை யுடைய
வயிறும், Vayirum - வயிற்றையும்
மென் தடம் முலையும், Men Thadam Mulaiyum - மென்மையும் பருமையும் பொருந்திய முலைகளையும்
வாய் உடை, Vaai Udai - நல்ல ஸ்வரத்தையுடையராயும்
மறையவர், Maraiyavar - காம சாஸ்திரத்தில் வல்லவர்களாயுமிருப்பவர்களுடைய
மந்திரத்தால், Manthirathal - மந்திரத்தினால்
உன்னை வணங்குகின்றேன், Unnai Vananguginren - உன்னை வணங்குகின்றேன்
முன், Mun - மூவுலகும் மாவலியால் அபஹரிக்கப்பட்ட காலத்தில்
தேசம், Desam - ஸகல லோகங்களையும்
திருக் கைகளால், Thirukkaigalal - (தனது) திருக்கையினால்
தீண்டும் வண்ணம், Theendum Vanam - ஸ்பர்சிக்கும்படி பண்ணி
தரணியில், Tharanaiyil - (இப்) பூமண்டலத்தில்-
தலைப் புகழ், Thalai Pugazh - நிலை நின்ற கீர்த்தியை
தர கிற்றி, Thara Kitri - (நான்பெறும்படி) தந்தருள வேணும்.
511நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 8
மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப்புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு
தேசுடைத் திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஓன்று இங்கு உண்டு எம்பெருமான் பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய்
தேச உடை, Desa Udai - (பிரிந்தாரைக் கூட்டு கையால் வந்த) புகரை யுடையவனும்
திறல் உடை, Thiral Udai - மிடுக்கை யுடையவனும்
எம்பெருமான், Emperuman - எமக்கு ஸ்வாமியுமான
காமதேவா, Kamadeva - மன்மதனே!
மாசு உடை, Maasu Udai - அழுக்குப் படிந்த
உடம்பொடு, Udampodu - உடம்போடே கூட
தலை, Thalai - தலை மயிரை
உலறி, Ulari - விரித்துக் கொண்டு
வாய்ப் புறம் வெளுத்து, Vaai Puram Veluthu - (தாம்பூல சர்வணமில்லாமையால்) உதடுகள் வெளுப்பாகப் பெற்று
ஒரு போது உண்டு, Oru Podhu Undu - ஒரு வேளை புஜித்து
நோற்கின்ற நோன்பினை, Norkindra Nonbinai - (இப்படிப்பட்ட வருத்தத்துடன்) (நான்) நோற்கின்ற நோன்பை
குறிக்கொள், Kurikkol - (நீ எப்பொழுதும்) ஞாபகத்தில் வைக்க வேணும்’
இங்கு, Ingu - இப்போது
பேசுவது ஒன்று உண்டு, Pesuvadhu Ondru Undu - சொல்ல வேண்டுவது ஒன்று உளது (அதைச் சொல்லுகிறேன் கேள்)
பெண்மையை, Penmaiyaai - (என்னுடைய) ஸத்தையை
தலை யுடையத் தாக்கும் வண்ணம், Thalai Udaiya Thaakkum Vannam - ஜீவித்திருக்கும்படி செய்வதற் குறுப்பாக
கேசவன் நம்பியை கால் பிடிப்பாள் என்னும், Kesavan Nambiyai Kaal Pidippaal Ennum - கண்ண பிரானுக்குக் கால் பிடிப்பவன் இவள் என்கிற
இப் பேறு, Ipperu - இப் புருஷார்த்தத்தை
எனக்கு அருள், Enakku Arul - எனக்கு அருளவேணும்.
512நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 9
தொழுது முப்போது முன்னடி வணங்கித் தூ மலர் தூயத் தொழுது ஏத்துகின்றேன்
பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெறா விடில் நான்
அழுது அழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது வுனக்கு உறைக்கும் கண்டாய்
உழுவது ஓர் எருத்தினை நுகங்கொடுபாய்ந்து ஊட்டமின்றித் துரந்தால் ஒக்குமே
முப்போதும், Muppothum - இரண்டு சந்தி, உச்சிப் போது ஒன்று ஆகிய மூன்று காலங்களிலும்
தொழுது வணங்கி, Thozhudhu Vanangi - ப்ரணாம பூர்வமாக (உன்னை) ஆச்ரயித்து
உன் அடி, Un Adi - உன் பாதங்களில்
தூ மலர் தூய், Thoo Malar Thooi - பரிசுத்தமான புஷ்பங்களைப் பணிமாறி
தொழுது, Thozhudhu - ஸேவித்து
ஏத்துகின்றேன் நான், Ethukindren Naan - ஸ்தோத்திரம் பண்ணுகின்ற நான்
பார் கடல் வண்ணனுக்கே, Paar Kadal Vannanukke - பூமியைச் சூழ்ந்த கடல் போன்ற திருநிறத்தையுடைய கண்ணபிரானுக்கே
பழுது இன்றி, Pazhudhu Indri - குற்றமொன்றுமில்லாமல்
பணி செய்து, Pani Seidhu - கைங்கரியம் பண்ணி
வாழப் பெறா விடில், Vaazha Peraa Vidil - உஜ்ஜீவியா தொழிவேனாகில்
அழுது அழுது, Azhudhu Azhudhu - (பின்பு நான்) பல காலும் அழுது
அலமந்து, Alamandhu - தடுமாறி
அம்மா வழங்க, Amma Vazhanga - ‘அம்மா!’ என்று கதறிக் கொண்டு திரிய
வழங்க, Vazhanga - சஞ்சரித்து
அது, Athu - அப்படி என்னைத் துடிக்க விடுவது
ஆற்றவும், Aatravum - மிகவும்
உனக்கு உறைக்கும், Unakku Uraikum - உன் தலை மேல் ஏறும் (அன்றியும், என்னை உபேஷிப்பது) வேறாதொழிவதானது
உழுவது ஓர் எருத்தினை, Uzhuvathu Oar Yeruthinai - ஏருழுகின்ற ஒரு எருதை
நுகம் கொடு பாய்ந்து, Nugam Kodu Paaindhu - நுகத் தடியால் தள்ளி
ஊட்டம் இன்றி, Oottam Indri - தீனி யில்லாமல்
துரந்தால் ஒக்கும், Thurandhaal Okkum - ஒட்டி விடுவதைப் போலாம்
513நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 10
கருப்பு வில் மலர்க்கணைக் காமவேளைக் கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற
மருப்பினை யொசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு என்னை வகுத்திடு என்று
பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை
விருப்புடையின் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே
கரும்பு வில் மலர்கணைகாமன் வேளை, Karumbu Vil Malarkanai Kaaman Velai - கரும்பாகிற வில்லையும் புஷ்பங்களாகிற அம்புகளையுமுடைய மன்மதனுடைய
கழல் இணை பணிந்து, Kazhal Inai Panindhu - இரண்டு பாதங்களையும் வணங்கி
அங்கு ஓர் கரி அலற மருப்பினை ஒசித்து புள்வாய் பிளந்த, Angu Or Kari Alara Maruppinai Oshithu Pulvaai Pilandha - கம்ஸன் மாளிகை வாசலில் (குவாலயாபீடமென்ற) ஒரு யானையானது வீரிடும்படியாக (அதன்) கொம்புகளை முறித்தவனும், பகாஸுரனுடைய வாயைக் கீண்டெறிந்தவனும்,
மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று, Manivannarku ennai Vakuthidu Endru - நீலமணி போன்ற நிறத்தானுமான கண்ணபிரானுக்கு என்னை அடிமைப்படுத்தவேணும் என்று
பொருப்பு அன்ன, Poruppu Anna - மலை போன்ற
மாடம், Maadam - மாடங்கள்
பொலிந்து தோன்றும், Polindhu Thondrum - மிகவும் விளங்கா நிற்கப் பெற்ற
புதுவையர் , Pudhuvaiyar - ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளவர்கட்கு
கோன், Kon - ஸ்வாமியான
விட்டு சித்தன், Vittu Sithan - பெரியாழ்வாருடைய (மகளாகிற)
கோதை, Kodhai - ஆண்டாள் (அருளிச் செய்த)
விருப்புடை, Viruppudai - விருப்பமடியாகப் பிறந்த
இன் தமிழ் மாலை, In Tamizh Maalai - இனிய தமிழ்மாலை யாகிய இப் பாசுரங்களை
வல்லார், Vallar - ஓத வல்லவர்கள்
விண்ணவர் கோன், Vinnavar Kon - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய
அடி, Adi - திருவடிகளை
நண்ணுவர், Nannuvar - கிட்டப் பெறுவர்
514நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 1
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை
மாமி தன மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே
காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்
தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே
நாமம் ஆயிரம், Naamam Aayiram - ஸஹஸ்ர நாமத்தினால்
ஏத்த நின்ற, Etha Nindra - (நித்ய ஸூரிகள்) துதிக்கும்படி நின்ற
நாராயணா, Narayana - நாராயணனே!
நரனே, Narane - (சக்கரவர்த்தித் திருமகனாய்ப் பிறந்து) மானிட வுடல் கொண்டவனே!
உன்னை, Unnai - (ஏற்கனவே தீம்பனான) உன்னை
மாமி தன் மகன் ஆக பெற்றால், Maami Than Magan Aaga Petral - பர்த்தாவாகவும் பெற்றால்
எமக்கு வாதை தவிருமே, Emakku Vaadhai Thavirume - நாங்கள் நலிவுபடா திருக்க முடியுமோ?’
காமன் போதரு காலம் என்று, Kaaman Potharu Kaalam Endru - மன்மதன் வருங்கால மென்று
பங்குனி நாள், Panguni Naal - பங்குனி மாதத்தில்-
கடை, Kadai - (அவன் வரும்) வழியை
பாரித்தோம், Paarithom - கோடித்தோம்’
தீமை செய்யும், Theemai Seiyum - தீம்புகளைச் செய்கின்ற
சிரீதரா, Siridhara - ஸ்ரீ பதியான கண்ண பிரானே!
எங்கள் சிற்றில், Engal sitril - நாங்களிழைக்கின்ற மணற் கொட்டகங்களை
வந்து , Vandhu - (நாங்கள் விளையாடுமிடத்தில்) வந்து
சிதையேல், Sidhayel - நீ அழிக்க வேண்டா.
515நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 2
இன்று முற்றும் முதுகு நோவ இருந்து இளைத்த விச் சிற்றிலை
நன்றும் கண்ணுற நோக்கி நாம் கொளும் ஆர்வம் தன்னைத் தணி கிடாய்
அன்று பாலகனாகி ஆலிலை மேல் துயின்ற வெம்மாதியாய்
என்றும் உன் தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே
இன்று முற்றும், Indru Mutrum - இன்றைய தினம் முழுவதும்
முதுகு நோவ, Mudhugu Nova - முதுகு நோம்படி
இருந்து, Irundhu - உட்கார்ந்து கொண்டு
இழைத்த, Izhaitha - ஸ்ருஷ்டித்த
இச் சிற்றிலை, Is Sitrilai - இந்தச் சிற்றிலை
நன்றும், Nandrum - நன்றாக
கண் உற நோக்கி, Kan Ura Nokki - (நீ) கண் பொருந்தும்படி பார்த்து,
நாம் கொள்ளும் ஆர்வம் தன்னை தணிகிடாய், Naam Kollum Aarvam Thannai Thanikidai - நாங்கள் கொண்டிருக்கிற அபிநிவேசத்தைத் தணியச் செய் கிடாய்’
அன்று, Andru - மஹா ப்ரளயம் வந்த காலத்தில்
பாலகன் ஆகி, Balakan Aagi - சிசு வடிவு கொண்டு
ஆல் இலை மேல், Aal ilai Mel - ஆலந்தளிரின் மேல்
துயின்ற, Thuyindra - கண் வளர்ந்தருளினவனும்
எம் ஆதியாய், Em Aadhiyai - எமக்குத் தலைவனுமான கண்ண பிரானே!
என்றும், Endrum - எக் காலத்திலும்
உன் தனக்கு, Un Thanakku - உனக்கு
எங்கள் மேல், Engal Mel - எம்மிடத்தில்
இரக்கம் எழாதது, Irakkam Ezhathadhu - தயவு பிறவாமலிருப்பது
எம் பாவமே, Em Paavame - நாங்கள் பண்ணின பாவத்தின் பயனேயாம்.
516நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 3
குண்டு நீர் உறை கோளரி மத யானை கோள் விடுத்தாய் உன்னைக்
கண்டு மாலுறு வோங்களைக் கடைக்கண்களால் இட்டு வாதியேல்
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம்
தெண் திரைக் கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே
குண்டு, Kundu - மிக்க ஆழத்தை யுடைத்தான
நீர், Neer - கடலிலே
உறை, Urai - சாய்ந்தருள்பவனும்
கோள் அரி!, Kol Ari! - மிடுக்கையுடைய சிங்கம் போன்றவனும்
மதம் யானை கோள் விடுத்தாய், Madham Yaanai Kol Viduthaai - மதம் மிக்க கஜேந்திராழ்வானுக்கு (முதலையால் நேர்ந்த) துன்பத்தைத் தொலைத்தருளி னவனுமான கண்ண பிரானே!
உன்னை, Unnai - (அடியார் துயரைத் தீர்க்க வல்ல) உன்னை
கண்டு, Kandu - பார்த்து
மால் உறுவோங்களை, Maal Uruvongalai - ஆசைப் படுகின்ற எங்களை
கடைக் கண்களால் இட்டு, Kadai Kangalal Ittu - கடைக் கண்களால் பார்த்து
வாதியேல், Vaadhiyel - ஹிம்ஸிக்க வேண்டா
யாம், Yaam - நாங்கள்
வண்டல், Vandal - வண்டலிலுள்ள
நுண் மணல், Nun Manal - சிறிய மணல்களை
வளை கைகளால், Valai Kaigalal - வளையல்கள் அணிந்த கைகளினால்
தெள்ளி, Thelli - புடைத்து
சிரமப்பட்டோம், Siramapattom - மிகவும் கஷ்டப் பட்டோம்
தெண் திரை, Then Thirai - தெளிந்த அலைகளை யுடைய
கடல், Kadal - திருப்பாற்கடலை
பள்ளியாய், Palliyaai - படுக்கையாக வுடையவனே!
எங்கள் சிற்றில் வந்து, Engal sitril Vandhu - நாங்களிழைக்கின்ற மணற் கொட்டகங்களை (நாங்கள் விளையாடுமிடத்தில்) வந்து
சிதையேல், Sidhaiyel - நீ அழிக்க வேண்டா.
517நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 4
பெய்யு மா முகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன்முகம் மாய மந்திரம் தான் கொலோ
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே
பெய்யும், Peiyum - வர்ஷியா நின்றுள்ள
மா முகில் போல் வண்ணா, Maa Mukil Pol Vanna - காள மேகம் போன்ற திரு நிறத்தை யுடையவனே!
உன் தன், Unn Than - உன்னுடைய
பேச்சும் செய்கையும், Pechum Seikaiyum - (தாழ்ந்த) வார்த்தைகளும், (தாழ்ந்த) வியாபாரங்களும்
எங்களை, Engalai - எங்களை
மையல் ஏற்றி, Mailal etri - பிச்சேறப் பண்ணி
மயக்க, Mayakka - அறிவு கெடுக்கைக்கு
உன் முகம், Unn Mugam - உன்னுடைய முகமானது
மாயம் மந்திரம் தான் கொலொ, Maayam Manthiram Thaankolo - சுக்குப் பொடியோ?
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு, Noiyar Pillaigal Enbatharku - அற்பத்தனமுடைய சிறுமியர் இவர்கள்’ என்று நீ சொல்லுவாய் என்று பயப்பட்டு
நாங்கள், Naangal - நாங்கள்
உன்னை, Unnai - உன்னைக் குறித்து
நோவ உரைக்கிலோம், Nova Uraikilom - நெஞ்சு புண்படும்படி (ஒன்றும்) சொல்லுகிறோமில்லை
செய்ய தாமரை கண்ணினாய், Seiya Thamarai Kanninai - புண்டாரிகாக்ஷனே!
எங்கள் சிற்றில், Engal sitril - நாங்களிழைக்கின்ற மணற் கொட்டகங்களை
வந்து , Vandhu - (நாங்கள் விளையாடுமிடத்தில்) வந்து
சிதையேல், Sidhaiyel - நீ அழிக்க வேண்டா.
518நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 5
வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இளைத்த கோலம் அழித்தி யாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே
கள்ளம், Kallam - கபடச் செய்கைகளை யுடைய
மாதவா, Madhava - கண்ண பிரானே!
கேசவா, Kesava - கேசவனே!
நாங்கள், Naangal - நாங்கள்
வெள்ளை நுண் மணல் கொண்டு, Vellai Nun Manal Kondu - வெளுத்துத் சிறுத்த மணல்களைக் கொண்டு
வீதியாய், Veethiyaai - தெருவிலே
விசித்திரப்பட, Visithirapada - (அனைவரும் கண்டு) ஆச்சாரியப்படும்படி
தெள்ளி இழைத்த, Thelli Izhaitha - தெளிந்து கட்டின
சிற்றில், Sitril - சிற்றிலாகிற
கோலம், Kolam - கோலத்தை
அழித்தி ஆகிலும், Azhithi Aagilum - நீ அழித்தாயாகிலும், (அதற்காக)
உள்ளம், Uḷḷam - (எங்களுடைய) நெஞ்சானது
ஓடி, Oḍi - உடைந்து
உருகல் அல்லால், Urugal allaal - உருகுமத்தனை யொழிய
உன்தன்மேல், Unthanmel - உன்மேலே
உரோடம் ஒன்றும் இலோம், Urodam ondrum illom - துளியும் கோபமுடையோமல்லோம்
உன்முகத்தன, Un mugathana - உன்முகத்திலுள்ளவை
கண்கள் அல்லவே, Kangal allave - கண்களன்றோ!
519நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 6
முற்றிலாத பிள்ளைகளோம் முலைபோந்திலாதோமை நாடொறும்
சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீ சிறிதுண்டு திண்ணென நாமது
கற்றிலோம் கடலை யடைத்தரக்கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசலாக்கிய சேவகா எம்மை வாதியேல்
கடலை அடைத்து, Kadalai Adaithu - ஸேது பந்தம் பண்ணி
அரக்கர் குலங்களை முற்றவும், Arakkar Kulangalai Mutravum - ராக்ஷஸருடைய குலங்களை முழுதும்
செற்று, Setru - களைந்தொழித்து
இலங்கையை, Ilangaiyai - லங்கையை
பூசல் ஆக்கிய, Pusal Aakkiya - அமர்க்களப் படுத்தின
சேவகா, Sevaka - வீரப்பாடு உடையவனே!
முற்றிலாத பிள்ளைகளோம், Mutrilatha Pillaigalom - முற்றாத இளம் பிள்ளைகளாய்
முலை போந்திலாதோமை, Mulai Pondhilaathomai - முலையும் கிளரப் பெறாத வெங்களை
நாள் தோறும், Naal Thorum - நாள் தோறும்
சிற்றில் மேல் இட்டுக் கொண்டு, Sitril Mel Ittu Kondu - சிற்றில் விஷயமாக ஒரு வியாஜத்தை வைத்துக் கொண்டு
நீ சிறிது உண்டு, Nee Siridhu Undu - நீ செய்யுஞ் செய்திகள் சில உள
அது திண்ணன நாம் கற்றிலோம், Athu Thinnana Naam Katrilom - நீ செய்யுஞ் செய்திகள் சில உள
எம்மை வாதியேல், Emmai Vaadhiyel - எங்களை (நீ) துன்பப்படுத்த வேண்டா
520நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 7
பேத நன்கறிவார்களோடு இவை பேசினால் பெரிதின் சுவை
யாதும் ஓன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன்
ஒதமா கடல் வண்ணா உன் மணவாட்டிமாரோடு சூழறும்
சேதுபந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே
பேதம், Pedham - (உன் பேச்சின்) வாசியை
நன்கு அறிவார்களோடு, Nangu Arivargalodu - நன்றாக அறிய வல்லவரோடு
இவை, Ivai - இப் பேச்சுக்களை
பேசினால், Pesinaal - பேசினால்
பெரிது இன் சுவை, Peridhu In Suvai - மிகவும் போக்யமாயிருக்கும்
யாது ஒன்றும் அறியாத, Yaadhu Ondrum Ariyaadha - எவ்வகையான பாவத்தை யுமறிய மாட்டாத
பிள்ளைகளோமை, Pillaigalomai - சிறுப் பெண்களான எங்களை
நீ நலிந்து என் பயன், Nee Nalindhu En Payan - நீ வருத்த முறுத்துவதனால் என்ன பயன்?
ஓதம், Odham - திரைக் கிளப்பத்தை யுடைய
மா கடல், Maa Kadal - பெரிய கடலை யொத்த
வண்ண, Vanna - திரு நிறத்தை யுடைய கண்ண பிரானே!
சேது பந்தம் திருந்தினாய், Sedhu Bandham Thirundhinaai - திருவணை கட்டினவனே!
உன் மணவாட்டிமாரொடு சூழறும், Un Manavaatimaarodu Soozharum - உன்னுடைய பத்தினிகளின் மேல் ஆணை
எங்கள் சிற்றில், Engal Sitril - நாங்களிழைக்கின்ற மணற் கொட்டகங்களை
வந்து, Vandhu - (நாங்கள் விளையாடுமிடத்தில்) வந்து
சிதையேல், Sidhaiyel - நீ அழிக்க வேண்டா
521நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 8
வட்ட வாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்ட மாவிளையோடு வோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன்
தொட்டுதைத்து நலியேல் கண்டாய் சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்
கட்டியும் கைத்தாலின்னாமை அறிதியே கடல் வண்ணனே
சுடர் சக்கரம் கையில் ஏந்தினாய், Sudar Sakkaram Kaiyil Aendhinaai - உன்னுடைய பத்தினிகளின் மேல் ஆணை திருக் கையில் தரித்திரா நின்றுள்ள கண்ண பிரானே!
கடல் வண்ணனே!, Kadal Vannane! - கடல் வண்ணனே!
வட்டம் வாய், Vattam Vaai - வட்ட வடிவமான வாயை யுடைய
சிறு தூரிதையோடு, Siru Thoorithaiyodu - சிறிய பானையோடு
சிறு சுளகும், Siru Sulakum - சிறிய முச்சிலையும்
மணலும் கொண்டு, Manalum Kondu - மணலையும் கொண்டு வந்து
இட்டமா, Ittamaa - இஷ்டப்படி
விளையாடுவோங்களை, Vilaiyaaduvongalai - விளையாடுகிற எங்களுடைய
சிற்றில், Sitril - சிற்றிலை
ஈடழித்து, Eedazhithu - மறுபடியும் உபயோகப் படாதபடி அழிப்பதனால்
என் பயன்?, En Payan? - என் பயன்?
தொட்டு, Thottu - கையால் தொட்டும்
உதைத்து, Udhaithu - காலால் உதைத்தும்
நலியேல் கண்டாய், Naliyel Kandaai - ஹிம்ஸியாதொழி கிடாய்
கைத்தால், Kaithaal - நெஞ்சு கசத்துப் போனால்
கட்டியும், Kattiyum - கருப்புக் கட்டியும்
இன்னாமை, Innaamai - ருசியாது என்பதை
அறிதியே, Arithiye - அறிவா யன்றோ?
522நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 9
முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன் முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மைப்
பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார்
கோவிந்தா, Govindha - கண்ணபிரானே!
முற்ற மண் இடம் தாவி, Muttra man idam thaavi - (ஒரு திருவடியினால்) பூ மண்டலம் முழுவதையும் தாவி யளந்து
விண் உற நீண்டு, Vin ura neendu - பரமபதத்தளவு ஓங்கி
அளந்து கொண்டாய், Alanthu kondai - (மற்றொரு திருவடியினால் மேலுலகங்களை) அளந்து கொண்டவனே!
முற்றத்தூடு, Mutrathoodu - (நாங்கள் ஏகாந்தமாக விளையாடுகிற) முற்றத்திலே
புகுந்து, Pugundhu - நுழைந்து
நின் முகம் காட்டி, Nin mugam kaatti - உனது திரு முகத்தை (எங்களுக்குக்) காண்பித்து
புன் முறுவல் செய்து, Pun muruval seidhu - புன் சிரிப்புச் சிரித்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும், Sitrilodu engal sindhaiyum - எங்கள் சிற்றிலையும் நெஞ்சையும்
சிதைக்கக் கடவையோ, Sithaikka kadavaiyo - அழிக்கக் கடவாயோ?
எம்மைப் பற்றி, Emmai patri - (அவ்வளவோடும் நில்லாமல்) எங்களோடே
மெய் பிணக்கு இட்டக்கால், Mei pinakku ittakaal - கலவியும் ப்ரவருத்தமானால்
இந்த பக்கம் நின்றவர், Indha pakkam nindravar - அருகில் நிற்பவர்கள்
என் சொல்லார், En sollaar - என்ன சொல்ல மாட்டார்கள்?
523நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 10
சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே
வாய் அமுதம், Vaai amudham - அதராம்ருதத்தை
உண்டாய், Undaai - பருகினவனே!
எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று, Engal sitril nee sidhaiyel endru - நாங்கள் இழைக்குஞ் சிற்றிலை நீ அழிக்கா தொழியவேணும் என்று
வீதிவாய், Veethivaai - வீதியிலே
விளையாடும், Vilaiyaadum - விளையாமாநின்ற
ஆயர் சிறுமியர், Aayar sirumiyar - இடைப் பெண்களுடைய
மழலைச் சொல்லை, Mazhalai sollai - இளம் பருவத்துக்குரிய மெல்லிய சொல்லை உட்கொண்டு
வேதம் வாய், Vedham vaai - வேதத்தை உச்சாரிக்கின்ற வாயையுடையவர்களும்
தொழிலார்கள், Thozhilaargal - வைதிகத் தொழில்களைச் செய்பவருமான (பரமை காந்திகள்
வாழ், Vaazh - வாழுமிடமான
வில்லிபுத்தூரிர், Villiputhoorir - ஸ்ரீ வில்லிபத்தூரிருக்கு
மன், Man - தலைவரான
விட்டு சித்தன் தன், Vittu chithan than - பெரியாழ்வாருடைய திருமகளான
கோதை, Kothai - ஆண்டாளுடைய
வாய் வாக்கில், Vaai vaakkil - நின்று அவதரித்த
தமிழ், Thamizh - தமிழ்ப்பாசுரங்களை
வல்லவர், Vallavar - ஓதவல்லவர்கள்
குறைவு, Kuraivu - இன்றி குறைவில்லாமல்
வைகுந்தம் சேர்வர், Vaigundham servar - பரமபதஞ் சேரப்பெறுவர்.
524நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 1
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய்
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே
அரவு அணை மேல், Aravu anai mel - திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே
பள்ளி கொண்டாய், Palli kondai - திருக் கண் வளர்ந்தருளுமவனே!
குடைந்து, Kudainthu - (குளத்தில்) அவகாஹித்து
நீர் ஆடுவான், Neer aaduvan - நீராடுவதற்காக
கோழி அழைப்பதன் முன்னம், Kozhi azhaippadhan munnam - கோழி கூவுதற்கு முன்னம்
போந்தோம், Pondhom - (இவ்விடம்) வந்தோம், (இப்போதோ வென்றால்,)
பொய்கைக்கு, Poigaikku - குளத்திற்கு
வாரோம், Vaarom - நாங்கள் வருவதில்லை
செல்வன், Selvan - (ஸ்ரீ மந்நாராயணன் தன்னிடத்து நித்ய வாஸம் பண்ணப் பெறுகையாகிற) செல்வத்தை யுடையனான
ஆழியன், Aazhiyan - சூரியன்
எழுந்தான், Ezhundhaan - உதித்தான்
ஆற்றவும் ஏழமை பட்டோம், Aatravum ezhamai pattom - (நாங்கள் உன்னாலே) மிகவும் இளிம்பு பட்டோம்
இனி, Ini - இனி மேல்
என்றும், Endrum - என்றைக்கும்
தோழியும் நானும் தொழுதோம், Thozhiyum naanum thozhudhom - தோழியும் நானுமாக (உன்னை) ஸேவியா நின்றோம்
துகிலை, Thugilai - (எங்களுடைய) சேலைகளை
பணித்தருளாய், Panitharulaai - தந்தருள வேணும்
525நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 2
இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதி கொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்
இங்கு, Ingu - இங்கே
புகுந்து இது என், Pugundhu idhu en - (நீ) வந்து சேர்ந்த விதற்குக் காரணமென்ன?
இப் பொய்கைக்கு, Ip poigaikku - இக் குளத்திற்கு
எவ்வாறு வந்தாய், Evvaaru vandhaai - எவ் வழியாலே வந்தாய்?
மது இன் துழாய் முடிமாலே, Madhu in thuzhaai mudimaale - தேன் மாறாத இனிய திருத்துழாய் மாலை சூடிய திருவபிஷேகத்தை யுடைய பெரியோனே!
மாயனே, Maayane - ஆச்சரிய சக்தி யுடையவனே!
எங்கள் அமுதே, Engal amudhe - எங்களுக்கு அம்ருதம் போல் இனியவனானவனே!
விதி இன்மையால், Vidhi inmaiyal - விதி யில்லாமையாலே
அது மாட்டோம், Adhu maattom - ஸம்ச்லேஷத்திற்கு இசைய மாட்டோம்
வித்தகப் பிள்ளாய், Vitthaka pillai - ஆச்சரிய சேஷ்டைகளையுடைய பிள்ளாய்!
விரையேல், Viraiyel - அவஸரப் பட வேண்டா
அரவில், Aravil - காளிய நாகத்தின் மேல்-
குதி கொண்டு, Kudhi kondu - குதித்துக் கொண்டு
நடித்தாய், Nadithaai - நர்த்தனஞ்செய்தவனே!
குருந்திடைக் கூறை, Kurundhidai koorai - (அக்) குருந்த மரத்தின் மேல் வைத்திருக்கிற சேலைகளை
பணியாய், Paniyaai - கொடுத்தருள்
526நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 3
எல்லே ஈது என்ன விளமை எம்மனைமார் காணில் ஒட்டார்
பொல்லாங்கு ஈது என்று கருதாய் பூங்குருந்தேறி யிருத்தி
வில்லால் இலங்கை யழித்தாய் நீ வேண்டியது எல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்து அருளாயே
வில்லால், Villaal - வில்லாலே
இலங்கை, Ilangai - லங்கையை
அழித்தாய், Azhithaai - நாசஞ் செய்தருளினவனே!
எல்லே, Elle - என்னே!
ஈது என்ன இளமை, Eethu enna ilamai - இது என்ன பிள்ளைத்தனம்!
எம் அனைமார், Em anaimaar - எங்களுடைய தாய்மார்கள்
காணில், Kaanil - கண்டால்
ஒட்டார், Ottaar - (மறுபடியும் எங்களை வீட்டின் வழி வர) ஒட்டார்கள்
ஈது, Eethu - (நீயொவென்றால்) கண்டாரடங்கலும் ஏசும்படி எங்களை அம்மணமாக்கி நிறுத்தியிருக்கிற இது
பொல்லாங்கு என்று, Pollaangu endru - பொல்லாத காரியமென்று
கருதாய், Karuthaai - நினைக்கிறாயில்லை
பூ குருந்து, Poo kurundhu - புஷ்பித்திரா நின்ற குருந்த மரத்தின் மேல்
ஏறி இருத்தி, Eri iruthi - ஏறி யிரா நின்றாய்
நீ வேண்டியது எல்லாம், Nee vendiyadhu ellaam - நீ அபேஷிக்கு மவற்றை யடங்கலும்
தருவோம், Tharuvom - கொடுக்கிறோம்
பல்லாரும், Pallaarum - (ஊரிலுள்ள) பலரும்
காணோமே, Kaanome - காணாதபடி
போவோம், Povom - போகிறோம்
பட்டை, Pattai - (எங்களுடைய) பட்டுச் சேலைகளை
பணித்தருளாய், Panitharulaai - தந்தருள வேணும்
527நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 4
பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்தாடும் சுனையில்
அரக்க நில்லாக் கண்ண நீர்கள் அலமருகின்றனவா பாராய்
இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே
குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய்
இலங்கை அழித்த பிரானே!, Ilangai azhitha pirane! - இலங்கை அழித்த பிரானே!
பலர் குடைந்து ஆடும் சுனையில், Palar kudainthu aadum sunaiyil - பல பெண்கள் படிந்து நீராடும் இப் பொய்கையின் கரையில்
கண்ண நீர்கள், Kanna neergal - கண்ணீர்த் தாரைகள்
அரக்க நில்லா, Arakka nilla - அடக்கினாலும் நிற்க மாட்டாதவைகளாய்
அலமருகின்ற, Alamarugindra - ஆ தளும்புகிறபடியை
எங்கும், Engum - நாற் புறத்திலும்
பரக்க விழித்து, Parakka vizhithu - நன்றாக விழித்து
நோக்கி பாராய், Nokki paaraai - உற்று நோக்கு
ஒன்றும் இரக்கம் இலாதாய், Ondrum irakkam ilaadhaai - கொஞ்சங்கூட தயவு இல்லாதவனே!
குரங்கு அரசு ஆவது அறிந்தோம், Kurangu arasu aavadhu arindhom - நீ மரமேற வல்லார்க்குள் தலைவன் என்பதை அறிந்து கொண்டோம்
குருந்திடை கூறை பணியாய், Kurundhidai koorai paniyaai - (ஆன பின்பு) குருந்தின் மேலுள்ள (எங்கள்) சேலைகளை கொடுத்தருள வேணும்
528நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 5
காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி
வேலைப் பிடித்து என் ஐமார்களோட்டில் என்ன விளையாட்டோ
கோலச் சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறி இராதே
கோலம் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய்
கரிய, Kariya - கறுத்த
கோலம், Kolam - திருமேனியை யுடைய
பிரானே, Pirane - கண்ண பிரானே!
கயலொடு, Kayalodu - கயல் மீன்களும்
வாளை, Vaalai - வாளை மீன்களும்
விரவி, Viravi - ஒன்றாய்க் கூடி
காலை, Kaalai - (எமது) கால்களை
கதுவிடுகின்ற, Kadhuviduginra - கடியா நின்றன
என் ஐமார்கள், En aimargal - (இப்படி நீ எங்களை வருத்தப்படுத்துவதைக் கேள்விப்பட்டு) எங்கள் தமையன்மார்கள்
வேலை பிடித்து, Velai pidithu - வேலைப் பிடித்துக் கொண்டு
ஓட்டில், Ottil - உன்னைத் துரத்திவிட்டால்
என்ன விளையாட்டு, Enna vilaiyaattu - (அது பின்னை) என்ன விளையாட்டாய் முடியும்?
நீ, Nee - நீ
கோலம், Kolam - அழகிய
சிற்றாடை பலவும் கொண்டு, Sitraadai palavum kondu - சிற்றாடைகளை யெல்லாம் வாரிக் கொண்டு
ஏறி இராது, Eri iraadhu - (மரத்தின் மேல்) ஏறி யிராமல்
குருந்திடை, Kurundhidai - குருந்த மரத்தின் மேலுள்ள
கூறை, Koorai - (எங்கள்) சேலைகளை
பணியாய், Paniyaai - தந்தருள்
529நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 6
தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ
விடத்தேள் எறிந்தாலே போலே வேதனை யாற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்ல வெங்கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்து அருளாயே
தடம், Thadam - விசாலமாயும்
அவிழ் தாமரை, Avizh thaamarai - மலர்ந்த தாமரைகளை யுடையவுமான
பொய்கை, Poigai - தடாகத்திலே
தாள்கள், Thaalgal - தாமரைத் தண்டுகளானவை
எம் காலை, Em kaalai - எங்கள் கால்களை
கதுவ, Kadhuva - கடிக்க
விடம் தேள் எறிந்தால் போல, Vidam thel erindhaal pol - விஷத்தை யுடைய தேள் கொட்டினாற்போலே
ஆற்றவும், Aatravum - மிகவும்
வேதனை பட்டோம், Vedhanai pattom - வருத்தப் படா நின்றோம்
குடத்தை, Kudathai - குடங்களை
எடுத்து, Eduthu - தூக்கி
ஏற விட்டு, Era vittu - உயர வெறித்து
கூத்து ஆட, Koothu aada - (இப்படி) குடக் கூத்தை ஆடுவதற்கு
வல்ல, Valla - ஸாமர்த்தியமுள்ள
எம் கோவே, Em kove - எம்முடைய தலைவனே!
படிற்றை எல்லாம் தவிர்ந்து, Paditrai ellaam thavirndhu - (நீ செய்கிற) தீம்புகளை யெல்லாம் விட்டு
எங்கள் பட்டை பணித்தருளாய், Engal pattai pani tharulaayi - சேலைகளை கொடுத்தருள வேணும்.
530நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 7
நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி யல்லாதன செய்தாய்
ஊரகம் சாலவும் சேய்ததால் ஊழி எல்லாம் உணர்வானே
ஆர்வம் உனக்கே யுடையோம் அம்மனைமார் காணில் ஒட்டார்
போர விடாய் எங்கள் பட்டைப் பூங்குருந்து ஏறி இராதே
ஊழி எல்லாம், Oozhi ellam - கற்பாந்த காலத்திலெல்லாம்
உணர்வானே, Unarvaane - (ஜகத் ரக்ஷண சிந்தையுடன்) உணர்ந்திருப்பவனே!
நீரிலே நின்று அயர்க்கின்றோம், Neerile ninru ayarkinrom - ஜலத்தில் நின்று கொண்டு வருத்தப்படா நின்றோம்
நீதி அல்லாதன, Neethi allaadhana - அநீதியான செயல்களை
ஆல், Aal - ஐயோ! (இப்படி நீ எங்களை வருத்தத் செய்தேயும்)
உனக்கே, Unakke - உன் விஷயத்திலேயே
ஆர்வம் உடையோம், Aarvam udaiyom - நாங்கள் அன்புள்ளவர்களா யிரா நின்றோம்
அம்மனைமார், Ammanaimaar - எங்கள் தாய்மார்
காணில், Kaanil - நீ பண்ணும் லீலைகளுக்கு நாங்கள் இணங்கி நிற்பதைக் கண்டால்
செய்தாய், Seithaai - செய்யா நின்றாய்
ஊர், Oor - (உன் விஷமங்களுக்குத் தப்பி ஓடிப் பிழைக்கப் பார்ப்போமென்றால்) எங்கள் ஊராகிய ஆய்ப் பாடியும்
அகம், Agam - மாளிகைகளும்
சாலவும், Saalavum - மிகவும்
சேய்த்து, Seithu - தூரத்தி லிரா நின்றன
ஒட்டார், Ottaar - இசைய மாட்டார்கள்
எங்கள் பட்டை, Engal pattai - எங்களுடைய சேலைகளை
போர விடாய், Pora vidaai - தந்தருளாய்
பூ குருந்து, Poo kurundhu - பூத்திரா நின்ற குருத்த மரத்தின் மேல்
ஏறி இராதே, Eri iraadhe - ஏறிக் கொண்டு தீமைகளைச் செய்யாதே
531நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 8
மாமியார் மக்களே யல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்
தூ மலர்க்கண்கள் வளரத் தொல்லை யிராத் துயில்வானே
சேமமலேன்றிது சாலச் சிக்கனே நாமிது சொன்னோம்
கோமள வாயர் கொழுந்தே குருந்திடைக் கூறை பணியாய்
தொல்லை இரா, Thollai iraa - பழைய ராத்ரிகளில்
தூ மலர் கண்கள் வளர, Thoo malar kangal valara - பரிசுத்தமான மலர் போன்ற கண்கன் நித்ரா பரவசமாம்படி
துயில்வானே,Thuyilvaane - பள்ளி கொள்பவனே!
மாமியார் மக்களே அல்லோம், Maamiyaar makkale allom - (இப் பொய்கைக் கரையிலே நிற்குமவர்கள்) உனக்குத் தேவிமாராகும் முறையிலுள்ளார் மாத்திரமல்லோம்
மற்றும் எல்லோரும், Matrum ellorum - மற்றுள்ள மாமிமார், அவர்கள் தாய்மார் முதலியவர்களும்
இங்கு, Ingu - இவ் விடத்தில்
போந்தார், Pondhaar - வந்திருக்கின்றார்கள்
இது, Idhu - நீ செய்கிற இத் தீம்பானது
சால, Saala - மிகவும்
சேமம் அன்று, Semam andru - தகுதியானதன்று
இது, Idhu - இவ் வார்த்தையை
நாம், Naam - நாங்கள்
சிக்கன, Sikana - திண்ணிதாக
சொன்னோம், sonnom - சொல்லுகின்றோம்
ஆயர், Aayar - இடையர்களுக்கு
கோமளக் கொழுந்தே, Komala kozhundhe - இளங்கொழுந்து போன்றவனே!
குருந்திடை கூறை பணியாய், Kurundhidai koorai paniyaai - குருந்தின் மேலுள்ள (எங்கள்) சேலைகளை கொடுத்தருள வேணும்.
532நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 9
கஞ்சன் வலை வைத்த வன்று காரிருள் எல்லில் பிழைத்து
நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற விக்கன்னியரோமை
அஞ்ச யுரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டிருக்கும் –
வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசுமையிலீ கூறை தாராய்
கஞ்சன், Kanjan - கம்ஸனானவன்
வலை வைத்த அன்று, Valai vaitha andru - உன்னை அழிப்பதாக நினைத்த காலத்தில்
கார் இருள், Kaar irul - மிக்க இருளை யுடையத்தான
எல்லில், Ellil - இரவில்
பிழைத்து, Pizhaithu - பிழைத்து
நின்ற, Nindra - (அம்மணமாக) நிற்கின்ற
இக் கன்னிய ரோமை, Ik kanniya romai - இளம் பெண்களான எங்களுக்கு
நெஞ்சு துக்கம் செய்ய, Nenju thukkam seiya - மனத் துன்பத்தை உண்டாக்குவதற்காக
போந்தாய், Pondhaai - வந்து பிறந்தாய்
அசோதை, Asodhai - யசோதைப் பிராட்டியோ வென்றால்
அஞ்ச, Anja - நீ பயப்படும்படி
உரப்பாள், Urapaal - உன்னை அதட்ட மாட்டாள்
ஆணாட விட்டிட்டிருக்கும், Anaada vittitirukkum - தீம்பிலே கை வளரும் படி உன்னை விட்டிரா நின்றாள்
வஞ்சகம், Vanjakam - வஞ்சனை யுடைய
பேய்ச்சி, Peichchi - பூதனையினுடைய
பால், Paal - முலைப் பாலை
உண்ட, Unda - (அவளுயிரோடே கூட) உறிஞ்சி யுண்ட
மசுமை இலீ, Masumai ilee - லஜ்ஜை யில்லாதவனே!
கூறை தாராய், Koorai thaaraai - சேலைகளைத் தந்தருள்
533நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 10
கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாட்டை
பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை
இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே
எங்கள் நம்பி, Engal nambi - எமக்கு ஸ்வாமியாய்
கரிய, Kariya - கார் கலந்த மேனியனான
பிரான், Piran - கண்ண பிரான்
கன்னிய ரோடு, Kanniyarodu - ஆயர் சிறுமியரோடே செய்த
விளையாட்டை, Vilaiyatai - திவ்ய லீலைகளைக் குறித்து
பொன் இயல், Pon iyal - ஸ்வர்ண மயமான
மாடங்கள் சூழ்ந்த, Maadangal soozhnda - மாடங்களால் சூழப்பட்ட
புதுவையர் கோன், Puthuvaiyar kon - ஸ்ரீவில்லிபுத்தூரி லுள்ளார்க்குத் தலைவரான
பட்டன் கோதை, Pattan kodhai - பெரியாழ்வார்க்குத் திருமகளான ஆண்டாள்
இன் இசையால், In isaiaal - இனிய இசையாலே
சொன்ன, Sonna - அருளிச் செய்த
மாலை, Maalai - சொல் மாலையாகிய
ஈர் ஐந்தும், Eer aindhum - இப் பத்துப் பாட்டுக்களையும்
வல்லவர் தாம், Vallavar thaam - கற்க வல்லவர்கள்
போய், Poi - (அர்ச்சிராதி மார்க்கமாகப்) போய்
வைகுந்தம் புக்கு, Vaigundham pukku - பரம பதத்தை யடைந்து (அவ் விடத்திலே)
மன்னிய, Manniya - நித்ய வாஸம் செய்தருளுகிற
மாதவனோடு, Madhavanodu - திருமாலோடு கூடி
இருப்பார், Irupaar - நித்யா நுபவம் பண்ணிக் கொண்டு வாழ்ந்திருக்கப் பெறுவர்.
534நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 1
தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
தெள்ளியார் பலர், Thelliyar palar - தெளிவுடைய பக்தர்கள் பலர்
கை தொழும், Kai thozhum - கைகளார வணங்கப் பெற்ற
தேவனார், Thevanaar - ஸ்வாமியாய்
வள்ளல், Vallal - பரமோதாரனாய்
மாலிருஞ்சோலை மணாளனார், Maalirunjolai manaalanar - திருமாலிருஞ் சோலையிலே எழுந்தருளி யிருக்கிற மணவாளப் பிள்ளையாகிய பரம புருஷன்
பள்ளி கொள்ளும் இடத்து, Palli kollum idathu - பள்ளி கொண்டருளுமிடத்திலே
அடி கொட்டிட, Adi kottit - (அவனுடைய) திருவடிகளை நான் பிடிக்கும்படியாக
கொள்ளும் ஆகில், Kollum aagil - (அவன்) திருவுள்ளம் பற்றுவனாகில்
நீ கூடிடு, Nee koodidu - நீ கூட வேணும்
535நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 2
காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர்
வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும்
கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
காட்டில் வேங்கடம், Kaatil vengadam - காட்டிலுள்ள திருவேங்கடமலையில
நகர் கண்ணபுரம், Nagar kannapuram - நகரமாகிய திருக்கண்ண புரத்திலும்
வாட்டம் இன்றி, Vaatam indri - மனக் குறை யில்லாமல்
மகிழ்ந்து, Magizhndhu - திருவுள்ளமுகந்து
உறை, Urai - நித்ய வாஸம் செய்தருளுகிற
வாமனன், Vaamanan - வாமநாவதாரம் செய்தருளிய எம்பெருமான்
ஒட்டரா வந்து, Ottaraa vandhu - ஓடி வந்து
என் கை பற்றி, En kai patri - என்னுடைய கையைப் பிடித்து
தன்னொடும், Thanodum - தன்னொடு
கூட்டும் ஆகில், Kootum aagil - அணைத்துக் கொள்வனாகில்
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
536நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 3
பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு
ஆமகன் அணி வாணுதல் தேவகி
மாமகன் மிகு சீர் வசுதேவர் தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே
பூ மகன், Poo magan - பூலிற் பிறந்த பிரமனும்
வானவர், Vaanavar - நித்யஸூரிகளும்
புகழ் போற்றுதற்கு, Pugazh potrudharku - கீர்த்தியைப் பாடித் துதிப்பதற்கு
ஆம், Aam - தகுந்த
மகன், Magan - புருஷோத்தமனாய்,
அணி வாள் நுதல் தேவகி, Ani vaal nuthal Dhevaki - மிகவும் அழகிய நெற்றியையுடைய தேவகியினுடைய
மா மகன், Maa magan - சிறந்த புத்திரனாய்,
மிகு சீர் வசுதேவர் தம், Migu seer Vasudevar tham - மிகுந்த, நற் குணங்களை யுடையரான வசுதேவருடைய
கோ மகன், Ko magan - மாட்சிமை தங்கிய புத்திரனான கண்ணபிரான்
வரில், Varil - (என்னை அணைக்க) வருவானாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
537நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 4
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன் மேல் நடமாடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே
ஆய்ச்சிமார்களும், Aaichimaargalum - இடைச்சிகளும்
ஆயரும், Aayarum - இடையரும்
அஞ்சிட, Anjida - பயப்படும்படியாக
பூத்த நீள் கடம்பு ஏறி, Pootha neel kadambu eri - புஷ்பித்ததாய் உயர்ந்திருந்த கடப்ப மரத்தின் மேல் ஏறி
புக பாய்ந்து, Puga paaindhu - அங்கு நின்றும் எழும்பிக் குதித்து
வாய்த்த காளியன் மேல் நடம் ஆடிய, Vaaitha kaaliyan mel nadam aadiya - பாக்கியசாலியான காளியநாகத்தின் மேல் நாட்ய சாஸ்த்ர நிபுணனான நர்த்தனஞ் செய்த
கூத்தனார் வரில், Koothanaar varil - கண்ணபிரான் வரக்கூடுமாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
538நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 5
மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மதயானை யுதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே
ஓடை, Odai - நெற்றிப் பட்டத்தை யுடைத்தாய்
மா மதம், Maa madham - மிக்க மதத்தை யுடைத்தான
யானை, Yaanai - (குவலயா பீடமென்னும்) யானையை
உதைத்தவன், Udhaithavan - உதைத்து முடித்த கண்ண பிரான்
மாடம் மாளிகை சூழ் மதுரை பதி, Maadam maaligai soozh mathurai pathi - மாடங்களுடைய மாளிகைகளாலே சூழப்பட்ட மதுரை மாநகரிலே
நாடி, Naadi - (நம் வீட்டைத்) தேடிக் கொண்டு
நம் தெருவின் நடுவே வந்திட்டு, Nam theruvin naduve vandhitu - நம்முடைய வீதியின் நடுவிலே வந்து
கூடும் ஆகில், Koodum aagil - (நம்மோடு) கட்டுவானாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
539நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 6
அற்றவன் மருத முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையில்
செற்றவன் திகழும் மதுரைப்பதி
கொற்றவன் வரில் கூடிடு கூடலே
அற்றவன், Attravan - (ஏற்கனவே எனக்கு) அற்றத் தீர்ந்தவனாய்
மருதம் முறிய, Marutham muriya - (யமளார்ஜுந மென்னும்) மருத மாங்களானவை முறிந்து விழும்படியாக
நடை கற்றவன், Nadai katravan - தவழ் நடை நடக்கக் கற்றவனாய்
கஞ்சனை, Kanjanai - கம்சனை
வஞ்சனையில், Vanjanaiyil - வஞ்சனையிலே
செற்றவன், Setravan - கொன்று முடித்தவனாய்
திகழும் மதுரை பதி கொற்றவன், Thigazhum mathurai pathi kotravan - விளங்குகின்ற மதுரைமா நகர்க்கு அரசனான கண்ணபிரான்
வரில், Varil - வந்திடுவானாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
540நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 7
அன்று இன்னாதான செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன்
கொன்றவன் வரில் கூடிடு கூடலே
அன்று, Andru - முற் காலத்தில்
இன்னாதன செய் சிசுபாலனும், Inaadhana sei sisubalanum - வெறுக்கக் கூடிய கெட்ட காரியங்களையே செய்து வந்த சிசுபாலனும்
நின்ற நீள் மருதும், Nindra neel marudhum - வழியிடையே நின்ற பெரிய இரட்டை மருத மரங்களும்
எருதும், Erudhum - ஏழு ரிஷபங்களும்
புள்ளும், Pullum - பகாஸுரனும்
வென்றி வேல் விறல் கஞ்சனும், Vendri vel viral kanjanum - வெற்றியை விளைவிக்க வல்ல வேலாயுத மென்ன (அதைப் பிடிக்கத்தக்க) மிடுக்ககென்ன இவற்றை யுடையவனான் கம்சனும்
வீழ, Veezha - முடிந்து விழும்படியாக
முன், Mun - எல்லார் கண்ணெதிரிலும்
கொன்றவன், Kondravan - கொன்றொழித்த கண்ண பிரான்
வரில், Varil - வரக்கூடுமாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
541நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 8
ஆவலன்புடையார் தம் மனத்தன்றி
மேவலன் விரை சூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்துவிளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே
ஆவல் அன்பு உடையார் தம், Aaval anbu udaiyaar tham - ஆவலையும் அன்பையும் உடையவர்களுடைய
மனத்து அன்றி மேவலன், Manathu andri mevalan - நெஞ்சு தவிர மற்றோரிடத்திலும் பொருந்தாதவனும்
விரை சூழ் துவராபதி காவலன், Virai soozh Dhuvaraapathi kaavalan - நல்ல வாஸனை சூழ்ந்த த்வாரகாபுரிக்கு நிர்வாஹகனும்
கன்று மேய்த்து விளையாடும் கோவலன், Kanru meithu vilaiyaadum kovalan - கன்றுகளை மேய்த்து விளையாடும் கோபாலனுமாகிய கண்ணபிரான்
வரில், Varil - வரக் கூடுமாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
542நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 9
கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று
பண்டு மா வலி தன் -பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடி யொன்றினால்
கொண்டவன் வரில் கூடிடு கூடலே
பண்டு, Pandu - முற் காலத்திலே
கோலம் கொண்ட குறள் உரு ஆய், Kolam konda kural uru aai - (முப்புரி நூலும் க்ருஷ்ணாஜிநமும் முஞ்ஜியும் பவித்ரமும் தண்டுமான) கோலம் பூண்ட வாமந ரூபியாய்
மாவலி தன், Maavali than - பெரு வேள்வியில் சென்று
அண்டமும், Andamum - மேலுலகங்களையும்
நிலனும், Nilanum - கீழுலகங்களையும்
அடி ஒன்றினால், Adi ondrinaal - ஒவ்வோரடியாலே
கொண்டவன், Kondavan - அளந்து கொண்ட த்ரிவிக்ரமன்
வரில், Varil - வருவானாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
543நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 10
பழகு நான் மறையின் பொருளாய் மத
மொழுகு வாரணம் உய்ய வளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே
பழகு நால்மறையின் பொருள் ஆய, Pazhagu naalmaraiyin porul aaya - அநாதியான சதுர் வேதங்களின் உட்பொருளாயிருக்கு மவனாய்
மதம் ஒழுகு வாரணம் உய்ய அளித்த, Madham ozhugu vaaranam uyya alitha - மத ஜலம் பெருகா நின்ற கஜேந்த்ராழ்வான் (துயர் நீங்கி) வாழும்படி க்ருபை செய்தருளினவனாய்
எம் அழகனார், Em azhaganaar - எம்மை ஈடுபடுத்த வல்ல அழகை யுடையனாய்
அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார், Ani aaichiyar sindhaiyul kuzhaganaar - அழகிய கோபிமார்களின் நெஞ்சினுள்ளே குழைந்திருக்கு மவனான கண்ணபிரான்
வரில், Varil - வரக் கூடுமாகில்
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும்
544நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 11
ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழல் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே
ஊடல் கூடல், Oodal koodal - ஊடலோடே கூடியிருக்கை யென்ன, (அதாவது ப்ரணய ரோஷஸஹிதைகளா யிருக்கை யென்ன)
உணர்தல், Uṇardhal - குறைகளை உணர்த்துகை யென்ன
புணர்தல், Puṇardhal - (பிறகு) ஸம்ச்லேஷிக்கை யென்ன (இப்படிப் பட்ட காரியங்களிலே)
முன், Muṉ - அநாதி காலமாக
நீடு நின்ற, Needu nindra - நீடித்துப் பொருந்தி நின்ற
நிறை புகழ் ஆய்ச்சியர் கூடலை, Nirai pugazh aaichiyar koodalai - நிறைந்த புகழையுடைய ஆய்ப் பெண்கள் (இழைத்த) கூடலைப் பற்றி
குழல் கோதை, Kuzhal kothai - அழகிய மயிர் முடியை யுடையனான ஆண்டாள்
கூறிய , Kooriya - அருளிச் செய்த
பாடல் பத்தும், paadal pathum - பத்துப் பாட்டுக்களையும்
வல்லார்க்கு, vallarkku - ஓத வல்லவர்களுக்கு
பாவம் இல்லை, paavam illai - (எம்பெருமானைப் பிரிந்து துக்கிக்கும்படியான) பாவம் இல்லையாம்
545நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 1
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்குண்டே
புன்னை குருக்கத்தி நாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவளவாயன் வரக் கூவாய்
புன்னை, Punnai - புன்னை மரங்களும்
குருக்கத்தி, Kurukkathi - குருக்கத்தி மரங்களும்
நாழல், Naazhal - கோங்கு மரங்களும்
செருந்தி, Serundhi - சுர புன்னை மரங்களும் (இவை முதலிய பல மரங்கள் நிறைந்த)
பொதும்பினில், Pothumpinil - சோலையிலே
வாழும், Vaazhum - வாழுகின்ற
குயிலே!, Kuyile! - கோகிலமே!
மன்னு பெரும் புகழ், Mannu Perum Pugazh - நித்யமாய் அளவில்லாத புகழை யுடையவனாய்
மாதவன், Maadhavan - ஸ்ரீ: பதியாய்
மா மணி வண்ணன், Maa Mani Vannan - நீல மணி போன்ற நிறத்தை யுடையனாய்
மணி முடி, Mani Mudi - நவ மணிகள் அழுத்திச் சமைத்த திரு வபிஷேத்தை யுடையனாய்
மைந்தன் தன்னை, Maindhan Thannai - மிடுக்கை யுடையவனான எம்பெருமானை
உகந்தது காரணம் ஆக, Ugandhadhu Kaaranam Aaga - ஆசைப் பட்டதுவே ஹேதுவாக
என் சங்கு இழக்கும் வழக்கு, En Sangu Izakkum Vazhakku - என்னுடைய கைவளைகள் கழன்றொழியும்படியான நியாயம்
உண்டே?, Unde? - (உலகத்தில்) உண்டோ (இது வெகு அநியாயமாயிருக்கிறது) (இதற்கு நான் என் செய்வேன் என்கிறாயோ)
என் பவளம் வாயன், En Pavalam Vaayan - பவளம் போற் பழுத்த திருவதரத்தை யுடையனான எனது துணைவன்
வர, Vara - (என்னிடம்) வந்து சேரும்படி
எப்போதும் , Eppothum - இரவும் பகலும்
பன்னி இருந்து , Panni Irundhu - (அவனது திருநாமங்களைக்) கத்திக் கொண்டிருந்து
விரைந்து கூவாய், Viraindhu Koovai - சீக்கிரமாகக் கூவ வேணும்.
546நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 2
வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ள விழ் செண்பகப் பூ மலர்க் கோதிக் களித்து இசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்
கள் அவிழ், Kal avizh - தேன் பெருகா நின்றுள்ள
செண்பகம் பூ, Senpagam Poo - செண்பகப் பூவிலே
மலர் கோதி, Malar Kodhi - (அஸாரமான அம்சத்தைத் தள்ளி) ஸாரமான அம்சத்தை அநுபவித்து
களித்து, Kalithu - (அதனால்) ஆநந்தமடைந்து
இசை பாடும் குயிலே, Isai Padum Kuyile - (அந்த ஆநந்தத்திற்குப் போக்கு வீடாக) இசைகளைப் பாடா நின்றுள்ள கோகிலமே!
வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட, Vellai Vili Sangu Idangaiyil Konda - சுத்த ஸ்வபாவமாய் (கைங்கர்ய ருசி யுடையாரை) அழைக்கு மதான ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தை இடக் கையிலே ஏந்திக் கொண்டிருக்கிற
விமலன், Vimalan - பவித்ரனான பரம புருஷன்
உரு, Uru - தனது திவ்யமங்கள விக்ரஹத்தை
எனக்கு காட்டான், Enakku Kaataan - எனக்கு ஸேவை ஸாதிப்பிக்க மாட்டே னென்கிறான் (அதுவுமல்லாமல்)
உள்ளம், Ullam - என்னுடைய ஹருதயத்தினுள்ளே
புகுந்து, Pugundhu - வந்து புகுந்து
என்னை நைவித்து, Ennai Naivithu - என்னை நைந்து போம் படி பண்ணி (அவ்வளவிலே நான் முடிந்து போவதாயிருந்தால் இன்னமும் என்னை ஹிம்ஸிப் பதற்காக முடிய வொட்டாமல்)
நாளும் உயிர் பெய்து, Naalum Uyir Peidhu - நாள் தோறும் பிராணனைப் பெருக்கடித்து
கூத்தாட்டு காணும், Koothaatu Kaanum - என்னைத் தத்தளிக்கச் செய்து வேடிக்கை பாரா நின்றான்
இருந்து, Irundhu - (நீசெய்ய வேண்டிய தென்னவென்றால்) என் அருகில் இருந்துகொண்டு
மெள்ளமிழற்றி மிழற்றது, Mellamizhatri Mizhatradhu - உன் மழலைச் சொற்களைச் சொல்லி விலாஸ சேஷ்டிதங்களைப் பண்ணாமல்
என் வேங்கடவன் வர, En Vengadavan Vara - எனக்காகத் திருவேங்கடமலையிலே வந்து நிற்கிற எம்பெருமான் (இங்கே) வரும்படியாக
கூவாய், Koovai - கூப்பிடவேணும்
547நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 3
மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி
தாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன்
போதலர் காவில் புதுமணம் நாறப் பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என் கரு மாணிக்கம் வரக் கூவாய்
போது அலர் காவில், Pothu Alar Kaavil - சிறந்த பூக்கள் அலர்கின்ற சோலையிலே
புது மணம், Pudhu Manam - புதிதான பரிமளமானது
நாற, Naara - வீச
பொறி வண்டின், Pori Vandin - அழகிய வண்டினுடைய
காமரம், Kaamaram - காமரம் என்கிற பண்ணை
கேட்டு, Kettu - கேட்டுக் கொண்டு
உன் காதலியோடு உடன் வாழ் குயிலே, Un Kaadhaliyodu Udan Vaazh Kuyile - உன் பேடையோடு கூட வாழ்கிற குயிலே!
மாதலி, Maadhali - மாதலியானவன்
தேர் முன்பு, Ther Munbu - (இராவணனுடைய) தேரின் முன்னே
கோல் கொள்ள, Kol Kolla - கோலைக் கொண்டு தன் தேரை நடத்த
மாயன் இராவணன் மேல், Maayan Iraavanan Mel - மாயாவியான ராவணன் மேலே
சரம் மாரி, Saram Maari - பாண வர்ஷத்தை
தாய் தலை அற்று அற்று வீழ தொடுத்த, Thaai Thalai Attru Attru Veezha Thodutha - (அவ்விராவணனுடைய ப்ரதானமான தலை (பலகால்) அற்று அற்று விழும்படி ப்ரயோகித்த
தலைவன், thalaivan - எம்பெருமானுடைய
வரவு, Varavu - வரவை
எங்கும், Engum - ஒரு திக்கிலும்
காணேன், Kaanen - காண்கிறேனில்லை (ஆதலால்)
என், En - என்னுடைய அநுபவத்துக்கு யோக்யனாய்
கரு மாணிக்கம், Karu Maanikam - நீல ரத்நம் போன்ற திருமேனியை யுடையனான அவ் வெம்பெருமான்
வர, Vara - இங்கே வரும்படியாக
கூவாய், Koovai - நீ கூவ வேணும்
548நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 4
என்புருகி இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்
குயிலே!, Kuyile! - ஓ குயிலே!
என்பு உருகி, Enbu Urugi - எலும்புகள் உருகிப் போனதுமல்லாமல்
இனம் வேல் நெடு கண்கள் இமை பொருந்தா, inam vel nedu kangal imai porundha - சிறந்த வேல் போன்ற விசாலமான கண்களும் மூடிக் கிடக்கின்றன வில்லை
பல நாளும், pala nalum - நெடுங்காலமாக
துன்பம் கடல் புக்கு, thunbam kadal pukku - விச்லேஷ வ்யஸநமாகிற கடலிலே அழுந்தி
வைகுந்தன் என்பது ஓர் தோணி பெறாது, vaikundhan enpathu or thoni perathu - ஸ்ரீவைகுண்டநாதன் என்கிற ஒரு தோணியை அடையப் பெறாமல்
உழல்கின்றேன், uzhalginren - அக்கடலுக்குள்ளேயே தட்டித் தடுமாறிக் கொண்டிராநின்றேன்
அன்பு உடையாரை பிரிவுறும் நோய் அது, anbu udaiyarai pirivurum noi adhu - அன்பர்களைப் பிரிவதனாலுண்டாகும் துக்கத்தை
நீயும் அறிதி, neeyum arithi - நீயும் அறிவாயன்றோ
பொன் புரை மேனி, pon purai meni - பொன் போன்ற மேனியை யுடையனாய்
கருளன் கொடி உடை, karulan kodi udai - கருடனைக் கொடியாக வுடையவனான
புண்ணியனை, punniyanai - “தர்மமே வடிவெடுத்தவன்” என்னப் படுகிற கண்ண பிரானை
வர கூவாய், vara koovai - இங்கே வரும்படி கூவு
549நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 5
மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்
மெல்நடை அன்னம், Melnadai Annam - மந்தகதி யுடைய அன்னப் பறவைகள்
பரந்து, Parandhu - எங்கும் பரவி
விளையாடும், Vilaiyadum - விளையாடுவதற்கு இருப்பிடமான
வில்லிபுத்தூர், Villiputhoor - ஸ்ரீவில்லிபுத்தூரிலே
உறைவான் தன், Uraivan Than - எழுந்தருளி யிருக்கிற எம்பெருமானுடைய
பொன் அடி, Pon adi - அழகிய திருவடிகளை
காண்பது ஓர் ஆசையினால்,Kanbadhu Or Aasaiyinal - காண வேணுமென்றுண்டான ஆசையினாலே
பொரு கயல் என் கண் இணை, Poru Kayal En Kan Inai - சண்டையிடும் இரண்டு கெண்டைகள் போன்ற எனது கண்கள்
துஞ்சா,Thunjaa - உறங்குகின்றனவில்லை
குயிலே, Kuyile - ஓ குயிலே!
உலகு அளந்தான், Ulagu Alandhaan - (த்ரிவிக்ரமனாய்) உலகங்களை அளந்த பெருமான்
வர, Vara - இங்கே வரும்படி
கூவாய், Koovai - கூவு (அப்படி கூவுவாயாகில்)
இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி எடுத்த என் கோலம் கிளியை, In Adisilodu Paal amudhu Ootti Edutha En Kolam Kiliyai - கன்ன லமுதையும் பாலமுதையும் ஊட்டி வளர்க்கப் பெற்ற எனது அழகிய கிளியை
உன்னோடு, Unnodu - உன்னோடே
தோழமை கொள்ளுவன், Thozhamai Kolluvan - ஸ்நேஹப் படுத்தி வைப்பேன்
550நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 6
எத்திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய
முத்தன்ன வெண் முறுவல் செய்ய வாயும் முலையும் அழகு அழிந்தேன் நான்
கொத்தலர் காவில் மணித் தடம் கண் படை கொள்ளும் இளங்குயிலே
என் தத்துவனை வரக் கூவிற்றி யாகிற்றிலை யல்லால் கைம்மாறு இலேனே
கொத்து, Kothu - பூங்கொத்தானவை
அலர், Alar - மலருமிடமான
காவில், Kaavil - சோலையிலே
மணி தடம், Mani Thadam - அழகானவொரு இடத்திலே
கண் படை கொள்ளும், Kan Padai Kollum - உறங்குகின்ற
இளங்குயிலே!, Ilanguyile! - சிறுகுயிலே!
எத் திசையும், Eththisaiyum - எல்லா திக்குகளிலும்
அமரர் பணிந்து ஏத்தும், Amarar Panindhu Ethum - தேவர்கள் வணங்கித் துதிக்கும்படியான பெருமை வாய்ந்த
செய்ய வாயும், Seiya Vaayum - சிவந்த அதரமும்
முலையும், Mulaiyum - முலைகளும் (ஆகிய இவை)
அழகு அழிந்தேன், Azhagu Azhindhen - அழகு அழிந்ததாம்படி விகாரப்பட்டேன்
என் தத்துவனை, En Thathuvanai - நான் உயிர்தரித்திருப்பதற்கு மூல காரணமான அவ் வெம்பெருமானை
இருடீகேசன், Irudeekesan - கண்டாருடைய இந்திரியங்களை யெல்லாம் கொள்ளை கொள்ளுமவனான எம்பெருமான்
வலி செய்ய, Vali Seiya - தன்னை எனக்குக் காட்டாமல் மிறுக்குக்களைப் பண்ண (அதனாலே)
நான், Naan - நான்
முத்து அன்ன வெண் முறுவல், Muthu Anna Venn Muruval - முத்துப் போல் வெளுத்த முறுவலும்
வர கூகிற்றி ஆகில், Vara Kookitri Aagil - இங்கே வரும்படி கூவ வல்லையே யானால்
தலை அல்லால், Thalai Allal - என் வாழ் நாள் உள்ளவளவும் என் தலையை உன் காலிலே வைத்திருப்பது தவிர
கைம்மாறு இலேன், Kaimaaru Ilen - வேறொரு ப்ரத்யுபகாரம் செய்ய அறியேன்
551நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 7
பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும்
அங்குயிலே உனக்கு என்ன மறைந்து உறைவு ஆழியும் சங்கும் ஒண் தண்டும்
தங்கிய கையவனை வரக் கூவில் நீ சாலத் தருமம் பெறுதி
அம் குயிலே!, Am Kuyile! - அழகிய குயிலே!
பொங்கிய பால் கடல், Pongiya Paal Kadal - அலை யெறிவை யுடைய திருப் பாற்கடலில்
பள்ளி கொள்வானை, Palli Kolvanai - பள்ளி கொண்டருளும் எம்பெருமானோடே
புணர்வது ஓர் ஆசையினால், Punarvadhu Or Aasaiyinal - ஸம்ச்லேஷிக்க வேணுமென்று உண்டான ஆசையினால்
என் கொங்கை, En Kongai - எனது முலைகள்
கிளர்ந்து, Kilarndhu - பருத்து
குதுகலித்து, Kudhukalithu - மிக்க உத்ஸாஹங் கொண்டு
ஆவியை, Aaviyai - எனது உயிரை
குமைத்து ஆகுலம் செய்யும், Kumaithu Aagulam Seiyum - உருக்கி வியாகுலப் படுத்தா நின்றன
மறைந்து உறைவு, Maraindhu Uravu - என் கண்ணுக்குப் புலப்படாமல் நீ மறைந்திருப்பதனால்
உனக்கு என்ன, Unakku Enna - உனக்கு என்ன புருஷார்த்தம்?
ஒண் ஆழியும் சங்கும் தண்டும் தங்கிய கையவனை வர, On Aazhiyum Sangum Thandum Thangiya Kaiyavanai Vara - திருவாழி திருச்சங்கும் ஸ்ரீ கதையும் பொருந்திய திருக் கைகளுடைய பெருமாள் இங்கே வரும்படி
நீ கூவில், Nee Koovil - நீ கூவுவாயாகில்
சால, Saala - மிகவும்
தருமம் பெறுதி, Tharumam Peruthi - தர்மம் செய்தாயாவாய்
552நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 8
சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தமுடையன்
நாங்கள் எம்மில் இருந்தொட்டிய கச் சங்கம் நானும் அவனும் அறிதும்
தேன்கனி மாம் பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை
ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்று யாகில் அவனை நான் செய்வன காணே
தேம் கனி, Them Kani - இனிமையான பழங்களை யுடைய
மாபொழில், Maapozhil - மாந்தோப்பிலே
செம் தளிர் கோதும், Sem Thalir Kodhum - சிவந்த துளிர்களை வாயலகால் கொந்துகிற
சிறு குயிலே!, Siru Kuyile! - இளங்குயிலே!
சார்ங்கம், Saarngam - தனது வில்லை
வளைய வலிக்கும், Valaiya Valikkum - வளைத்து வலிக்கும் சக்தியை யுடைய
தட கை, Thada Kai - பெரிய திருக் கைகளை யுடையனாய்
சதுரன், Sathuran - ஸகலவித ஸாமர்த்தியமுடையனான எம்பெருமான்
பொருத்தம் உடையன், Porutham Udaian - ப்ரணயாதியிலும் வல்லமை பெற்றவன்
நாங்கள், Naangal - அவனும் நானும் ஆக இருவரும்
இருந்து, Irundhu - சேர்ந்திருந்து
எம்மில் ஒட்டிய, Emmil Otiya - எங்களுக்குள் ரஹஸ்யமாகச் செய்து கொண்ட
கச்சங்கம், Kachangam - ஸங்கேதத்தை
நானும் அவனும் அறிதும், Naanum Avanum Aridhum - நாங்களிருவருமே அறிவோமேயன்றி வேறொருவரும் அறியார்
ஆங்கு திருமாலை, Aangu Thirumaalai - தூரஸ்தனாயிருக்கிற ஸ்ரீ: பதியை
ஒல்லை விரைந்து, Ollai Virainthu - மிகவும் சீக்கிரமாக
கூ கிற்றி ஆகில் நீ, Koo Kitri Aagil Nee - கூவ வல்லையே யானால் நீ
அவனை, Avanai - (பிறகு அவன் இங்கு வந்த பிற்பாடு) அவன் விஷயத்தில்
நான் செய்வன, Naan Seivana - நான் செய்யப் போகிற மிறுக்குக்களை
காண், Kaan - காணக் கடவை
553நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 9
பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பதோர் பாசத்தகப் பட்டிருந்தேன்
பொங்கொளி வண்டிரைக்கும் பொழில் வாழ் குயிலே குறிக் கொண்டிது நீ கேள்
சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருத்தில் இரண்டைத் தொன்றேல் திண்ணம் வேண்டும்
பொங்கு ஒளி வண்டு, Pongu Oli Vandu - மிக்க வொளியை யுடைய வண்டுகளானவை
இரைக்கும் பொழில், Iraikkum Pozhil - (மது பாந மயக்கத்தாலே) இசை பாடாநின்ற சோலையிலே
வாழ், Vaazh - களித்து விளையாடுகிற
குயிலே!, Kuyile! - கோகிலமே!
இது, Idhu - நான் சொல்லுகிற இதனை
நீ குறிக்கொண்டு கேள், Nee Kurikondu Kel - நீ பராக்கில்லாமல் ஸாவதாநமாய்க் கேள்
நான், Naan - நான்
பைங்கிளி வண்ணன் சிரி தரன் என்பது ஓர் பாசத்து, Paingili Vannan Siri Tharan Enpathu Or Pasathu - பசுங்கிளி போன்ற நிறத்தை யுடையனான ஸ்ரீ: பதி யென்கிற ஒரு வலையிலே
அகப்பட்டு இருந்தேன், Agappattu Irundhen - சிக்கிக் கொண்டு கிடக்கிறேன்
இங்கு உள்ள காவினில், Ingu Ulla Kaavinil - இந்தச் சோலையிலே
வாழ கருதில், Vaazha Karuthil - நீ வாழ நினைக்கிறாயாகில்
சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல், Sangodu Chakkarathaan Vara Koovuthal - திருவாழி திருச்சங்குடையனான எம்பெருமான் (இங்கே) வரும்படி கூவுவதென்ன
பொன் வளை கொண்டுதருதல், Pon Valai Kondu Tharuthal - (நான் இழந்த) பொன் வளைகளைக் கொண்டு வந்து கொடுப்பதென்ன
இரண்டத்து, Irandathu - இவையிரண்டுள் எதாவதொரு காரியம்
திண்ணம் வேண்டும், Thinnam Vendum - நீ கட்டாயம் செய்து தீரவேண்டும்
554நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 10
அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்
என்றும் இக்காவில் இருந்து இருந்து என்னைத் ததைத்தாதே நீயும் குயிலே
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்
அன்று, Andru - மஹாபலி கொழுத்திருந்த அக் காலத்தில்
உலகம் அளந்தானை, Ulagam Alanthaanai - மூவுலகங்களையும் அளந்து கொண்டவனான எம்பெருமான் விஷயத்திலே
உகந்து, Uganthu - நான் கைங்கர்யத்தை ஆசைப்பட
அவன், Avan - அவ் வெம்பெருமான்
அடிமைக் கண், Adimai Kan - (அந்த) கைங்கரியத்திலே
வலி செய்ய, Vali Seiya - வஞ்சனை பண்ண (அதற்கு நான் நோவு பட்டிருக்கிற சமயத்திலே)
தென்றலும், Thendralum - தென்றல் காற்றும்
திங்களும், Thingalum - பூர்ண சந்திரனும்
என்னை, Ennai - என்னை
ஊடு அறுத்து நலியும் முறைமை, Oodu Aruthu Naliyum Muraimai - உள்ளே பிளந்து கொண்டு புகுந்து ஹிம்ஸிக்கும் நியாயத்தை
அறியேன், Ariyen - அறிகின்றிலேன்
குயிலே!, Kuyile! - ஓ குயிலே!
நீயும், Neeyum - (என்னுடைய க்ஷேமத்தை விரும்புமனான) நீயும்
என்றும், Endrum - எந்நாளும்
இக் காவில், Ik Kaavil - இந்தக் சோலையிலே
இருந்து இருந்து, Irundhu Irundhu - இடைவிடாமலிருந்துகொண்டு
என்னை, Ennai - (ஏற்கனவே மெலிந்திருக்கிற) என்னை
ததைத்தாதே, Thadhaithaathe - ஹிம்ஸியாமலிரு
இன்று, Indru - இன்றைக்கு
நாராயணனை வர கூவாயேல், Narayananai Vara Koovayel - ஸ்ரீமந்நாராயணன் இங்கே வரும்படி அவனை நீ கூவாமற் போனாயாகில்
இங்குத்தை நின்றும், Inguthai Nindrum - இந்தச் சோலையிலிருந்து
துரப்பன், Thurappan - உன்னைத் துரத்தி விடுவேன்
555நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 11
விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி
கண்ணுற வென் கடல் வண்ணனைக் கூவு கரும் குயிலே என்ற மாற்றம்
பண்ணு நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன
நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே
வேல் கண், Vel Kan - வேல் போன்ற கண்களை யுடையளாய்
மடந்தை, Madanthai - பெண்மைக்கு உரிய குணங்கள் நிறைந்தவளாய்
கண் உறு நால்மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை, Kan Uru Naalmaraiyor Pudhuvai Mannan Pattar Piran Kothai - ஸ்வரூப தனமான நான்கு வேதங்களையும் ஒதின ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய மகளான ஆண்டாள்
அடி விண் உற நீண்டுதாவிய மைந்தனை, Adi Vin Ura Neenduthaaviya Maindhanai - திருவடியானது பரமாகாசத்தளவும் போய்ப் பொருந்தும் படியாக
நெடுக வளர்ந்து, Neduga Valarndhu - (உலகங்களை) வியாபித்தமிடுக்கை யுடையனான எம்பெருமானை
விரும்பி, Virumbi - ஆசைப் பட்டு
கருங் குயிலே என் கடல் வண்ணனை கண் உறகூவு என்ற மாற்றம், Karung Kuyile En Kadal Vannanai Kan Urakoovu Endra Maatram - ஓ கரியகுயிலே! கடல் போன்ற திரு நிறத்தை யுடையனான என் காதலனை நான் ஸேவிக்கும்படி நீ கூவு என்று நியமித்த பாசுரமாக
சொன்ன, Sonna - அருளிச் செய்த
நண்ணுறு வாசகம் மாலை, Nannuru Vaasakam Maalai - போக்யமான (இந்த) ஸ்ரீ ஸூக்தி மாலையை
வல்லார், Vallar - ஓத வல்லவர்கள்
‘நமோநாராயணாய்‘ என்பர், “Namo Narayanaaya” Enbar - எம்பெருமானுக்கு அந்தரங்க கிங்கரராகப் பெறுவர்கள்
556நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 1
வாரண மாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
நம்பி, Nambi - ஸகல குண பரிபூர்ணனான
நாரணன், Naaranan - ஸ்ரீமந் நாராயணன்
ஆயிரம் வாரணம் சூழ, Aayiram Vaaranam Soozha - ஆயிரம் யானைகள் சூழ்ந்து வர
வலம் செய்து நடக்கின்றான் என்று எதிர், Valam Seidhu Nadakindran Endru Edhir - பிரதக்ஷிணமாக எழுந்தருளாகிற னென்று (வாத்ய கோஷதிகளால் நிச்சயித்து)
பொன் பூரண குடம் வைத்து, Pon Poorana Kudam Vaithu - பொன் மயமான பூர்ண கும்பங்களை வைத்து
புரம் எங்கும், Puram Engum - பட்டணம் முழுதும்
தோரணம் நாட்ட, Thoranam Naata - தோரண ஸ்தம்பங்கள் நாட்ட (இந்த நிலையையை)
நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்
557நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 2
நாளை வதுவை மணம் என்று நாளிட்டு
பாளை கமுகு பரிசிடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
நாளை, Naalai - நாளைக்கு
வதுவை மணம் என்று நாள் இட்டு, Vadhuvai Manam Endru Naal Ittu - விவாஹ மஹோத்ஸவ மென்று முஹூர்த்தம் நிர்ணயித்து
பாளை கமுகு பரிசு உடை பந்தல் கீழ், Paalai Kamugu Parisu Udai Pandhal Keezh - பாளைகளோடு கூடின பாக்கு மரங்களாகிற அலங்காரங்களை யுடைத்தான மணப் பந்தலின் கீழே
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை, Kolari Maadhavan Govindhan Enbaan Or Kaalai - நரஸிம்ஹனென்றும் மாதவனென்றும் கோவிந்தனென்றும் திருநாமங்கள் பூண்ட ஒரு யுவாவானவன்
புகுத, Pugutha - பிரவேசிக்க
நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்
558நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 3
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்து இருந்து என்னை மகள் பேசி மந்திரத்து
மந்திரக் கோடி யுடுத்தி மண மாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம், Indiran Ullitta Devar Kuzham ellam - இந்திரன் முதலான தேவ ஸமூஹங்களெல்லாம்
வந்து இருந்து, Vandhu Irundhu - (இந்திலத்திலே) வந்திருந்து
என்னை மகள் பேசி, Ennai Magal Pesi - என்னைக் கல்யாணப் பெண்ணாக வார்த்தை சொல்லி
மந்திரித்து, Mandhirithu - அதற்குமேல் ஸம் பந்திகள் ஒருவர்க்கொருவர் செய்து கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் விஷயமாக யோசித்து முடிவுசெய்து கொண்டு (பிறகு)
அந்தரி, Andhari - ‘துர்க்கை‘ என்கிற நாத்தனார்
மந்திரம் கோடி உடுத்தி, Mandhiram Kodi Uduthi - கல்யாண புடைவையை எனக்கு உடுத்தி
மணம் மாலை சூட்ட, Manam Maalai Soota - பரிமளம் மிக்க புஷ்பங்களையும் சூட்ட
நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்
559நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 4
நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பாப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னை
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
பாப்பனர் சிட்டர்கள் பல்லார், Paapanar Sittargal Pallaar - சிஷ்டர்களான பல ப்ராஹ்மணர்கள்
நால் திசை, Naal Dhisai - நான்கு திசைகளிலுமிருந்து
தீர்த்தம், Theertham - தீர்த்தங்களை
கொணர்ந்து, Konarndhu - கொண்டு வந்து
நனி நல்கி, Nani Nalki - நன்றாகத் தெளிந்து
எடுத்து ஏத்தி, Eduthu Ethi - உச்ச ஸ்வரமாக வெடுத்து மங்களா சாஸநம் பண்ணி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு, Poopunai Kanni Punithanodu - (பலவகைப்) புஷ்பங்கள் புனைந்த மாலையை யுடையவனாய்ப் பரம பாவநனான கண்ண பிரானோடு
என்றன்னை, Endrannai - என்னை (இணைத்து)
காப்பு நாண் கட்ட, Kaapu Naan Katta - கங்கணங்கட்ட
நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்
560நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 5
கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி
சதிரள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
சதிர் இள மங்கையர் தாம், Sathir Ila Mangaiyar Thaam - அழகிய இளம் பெண்கள்
கதிர் ஒளி தீபம், Kathir Oli Theepam - ஸூர்யனுடைய ஒளி போன்ற ஒளியை யுடைய மங்கள தீபத்தையும்
கலசம், Kalasam - பொற் கலசங்களையும்
உடன் ஏந்தி, Udan endhi - கையில் ஏந்திக் கொண்டு
வந்து எதிர் கொள்ள, Vandhu Edhir Kolla - எதிர் கொண்டு வர
மதுரையார் மன்னன், Madhuraiyar Mannan - மதுரையிலுள்ளார்க்கு அரசனான கண்ண பிரான்
அடி நிலை தொட்டு, Adi Nilai Thottu - பாதுகைகளைச் சாத்திக் கொண்டு
எங்கும் அதிர, Engum Adhira - பூமி யெங்கும் அதிரும் படியாக
புகுத, Pugutha - எழுந்தருள
நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்
561நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 6
மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மது சூதனன் வந்து என்னை
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
மத்தளம் கொட்ட, Mathalam Kotta - மத்தளங்கள் அடிக்கவும்
வரி சங்கம் நின்று ஊத, Vari Sangam Nindru Oodha - ரேகைகளை யுடைய சங்குகளை ஊதவும்
மைத்துனன் நம்பி மதுசூதனன், Maithunan Nambi Madhusudhanan - மைத்துனமை முறையை யுடையனாய் பூர்ணனான கண்ண பிரான்
முத்து உடை தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ் வந்து, Muthu Udai Thaamam Nirai Thaazhntha Pandhal Keezh Vandhu - முத்துக்களை யுடைய மாலைத் திரள்கள் தொங்க விடப் பெற்று பந்தலின் கீழே வந்து
என்னை கைத் தலம் பற்ற, Ennai Kaithalam Patra - என்னைப் பாணி க்ரஹணம் செய்தருள
நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்
562நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 7
வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிது வைத்து
காய்சின வாய் களிறு அன்னன் என் கை பற்றி
தீ வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
வாய் நல்லார், Vai Nallaar - நன்றாக ஓதின வைதிகர்கள்
நல்ல மறை ஓதி, Nalla Marai Odhi - சிறந்த வேத வாக்கியங்களை உச்சரிக்க
மந்திரத்தால், Manthirathaal - (அந்தந்த க்ரியைகளுக்கு இசைந்த) மந்த்ரங்களைக் கொண்டு
பாசு இலை நாணல் படுத்து, Paasu Ilai Naanal Paduthu - பசுமை தங்கிய இலைகளை யுடைத்தான நாணற் புல்லைப் பரிஸ்தரணமாக அமைத்து
பரிதி வைத்து, Parithi Vaithu - ஸமித்துக்களை இட்டு
காய்சின வாய் களிறு அன்னன், Kaaichina Vaai Kaliru Annan - மிக்க சினத்தை யுடைய மத்த கஜம் போல் செருக்கனான கண்ண பிரான்
என் கை பற்றி, En Kai Patri - என் கையைப் பிடித்துக் கொண்டு
தீ வலம் செய்ய, Thee Valam Seiya - அக்நியைச் சுற்றி வர
நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்
563நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 8
இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மை யுடையவன் நாராயணன் நம்பி
செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
இம்மைக்கு, Immaikku - இப் பிறவிக்கும்
ஏழ் ஏழ் பிறவிக்கும், Ezh Ezh Piravikum - மேலுள்ள பிறவிகள் எல்லாவற்றிற்கும்
பற்று ஆவான், Patru Aavaan - சரண்யனா யிருப்பவனாய்
நம்மை உடையவன், Nammai Udaiyavan - நமக்கு சேஷியாய்
நம்பி, Nambi - ஸகல கல்யாண குண பரிபூர்ணனாய்
நாராயணன், Narayanan - நாராயணனான கண்ண பிரான்
செம்மை உடைய திரு கையால், Semmai Udaiya Thiru Kaiyaal - செவ்விய (தனது) திருக் கையினால்
தாள் பற்றி, Thaal Patri - (எனது) காலைப் பிடித்து
அம்மி மிதிக்க, Ammi Midhikka - அம்மியின் மேல் எடுத்து வைக்க
நான் கனாக் கண்டேன், naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்
564நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 9
வரிசிலை வாண் முகத்து என் ஐமார் தாம் வந்திட்டு
எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து
பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
வரி சிலை வான் முகம், Vari Silai Vaan Mugam - அழகிய வில் போன்ற புருவத்தையும் ஒளி பொருந்திய முகத்தை யுடையவர்களான
என் ஐமார் தாம், En Aimaar Thaam - எனது தமையன்மார்கள்
வந்திட்டு, Vandhittu - வந்து
எரிமுகம் பாரித்து, Erimugam Paarithu - அக்னியை நன்றாக ஜ்வலிக்கச் செய்து
முன்னே என்னை நிறுத்தி, Munne Yennai Niruthi - அந்த அக்னியின் முன்னே என்னை நிறுத்தி
அரி முகன், Ari Mugan - (ஹிரண்ய வதத்திற்காக) ஸிம்ஹ முகத்தை யுடைனாய் அவதரித்த
அச்சுதன், Achudhan - கண்ண பிரானுடைய
கை மேல், Kai Mel - திருக் கையின் மேல்
என் கை வைத்து, En Kai Vaithu - என்னுடைய கையை வைத்து
பொரி, Pori - பொரிகளை
முகந்து அட்ட, Mugandhu Atta - அள்ளிப் பரிமாற
நான் கனாக் கண்டேன், naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்
565நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 10
குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
குங்குமம், Kungumam - குங்குமக் குழம்பை
அப்பி, Appi - உடம்பெல்லாம் பூசி
குளிர் சாந்தம், Kulir Saandham - குளிர்ந்த சந்தனத்தை
மட்டித்து, Mattithu - மணக்கத் தடவி
ஆனை மேல், Aanai Mel - மத்த கஜத்தின் மேலே
அவனோடும் உடன் சென்று, Avanodum Udan Sendru - அக் கண்ண பிரானோடு கூடியிருந்து
மங்கலம் வீதி, Mangalam Veethi - (விவாஹ நிமித்தமான) அலங்காரங்கள் விளங்குகின்ற வீதிகளிலே
வலம் செய்து, Valam Seidhu - ஊர்வலம் வந்து
மணம் நீர், Manam Neer - வஸந்த ஜலத்தினால்
மஞ்சனம் ஆட்ட, Manjanam Aatta - (எங்க ளிருவரையும்) திருமஞ்சனம் பண்ணுவதாக
நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்
566நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 11
ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே
வேயர் புகழ், Veyar Pugazh - வேயர் குலத்தவரால் புகழப் பட்டவராய்
வில்லிபுத்தூர் கோன், Villiputhoor Kon - ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய (திருமகளான)
கோதை, Kodhai - ஆண்டாள்
தான் ஆயனுக்கு ஆக கண்ட கனாவினை, Thaan Aayanukaaga Kanda Kanaavinai - தான் கோபால க்ருஷ்ணனுக்கு வாழ்க்கைப் பட்டதாகக் கனாக் கண்ட படியைக் குறித்து
சொல், Sol - அருளிச் செய்த
தூய, Thooya - பரிசுத்தமான
தமிழ் மாலை ஈர் ஐந்தும், Tamizh Maalai Eer Aindhum - தமிழ் தொடையான இப் பத்துப் பாட்டுக்களையும்
வல்லவர், Vallavar - ஓத வல்லவர்கள்
வாயும், Vaayum - நற்குணகளமைந்த
நன் மக்களைப் பெற்று, Nan Makkalai Petru - விலக்ஷணரான புத்திரர்களைப் பெற்று
மகிழ்வர், Magizhvar - ஆநந்திக்கப் பெறுவர்கள்
567நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 1
கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ
திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே
ஆழி வெண் சங்கே, Aazhi Ven Sange - கம்பீரமாய் வெளுத்திரா நின்ற ஸ்ரீபாஞ்ச ஜந்யாழ்வானே
மருப்பு ஓசித்த மாதவன் தன், Marupu Ositha Madhavan Than - (குவயாபீட யானையன்) கொம்பை முறித்த கண்ண பிரானுடைய
வாய், Vaai - திரு அதரத்தினுடைய
சுவையும், Suvaiyum - ரஸத்தையும்
நாற்றமும், Naatramum - பரிமளத்தையும்
விரும்புற்று, Virumputru - ஆசையோடே
கேட்கின்றேன், Ketkinren - (உன்னைக்) கேட்கிறேன்
திருப் பவளச் செவ்வாய் தான், Thiru Pavala Chevvaai Thaan - (அப்பெருமானுடைய) அழகிய பவளம் போன்ற சிவந்த திருவதரமானது
கருப்பூரம், Karupooram - பச்சைக் கற்பூரம் போல்
நாறுமோ?, Naarumo? - பரிமளிக்குமோ? (அல்லது)
கமலப் பூ, Kamala Poo - தாமரைப் பூப் போலே
நாறுமோ?, Naarumo? - பரிமளிக்குமோ?
தித்தித்திருக்குமோ, Thithithirukkumo - மதுரமான ரஸத்தை உடைத்தாயிருக்குமோ?
சொல், Sol - இன்னபடி யிருக்குமென்று எனக்குச் சொல்
568நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 2
கடலில் பிறந்து கருதாது பஞ்ச சனன்
உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத்தலத்
திடரில் குடியேறித் தீய வசுரர்
நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற் சங்கே
நல் சங்கே, Nal Sange - அழகிய சங்கே!
கடலில், Kadalil - ஸமுத்திரத்திலே
பிறந்து, Pirandhu - பிறந்து (அங்கு நின்றும்)
பஞ்சசனன் உடலில் போய் வளர்ந்து, Panjasanan Udalil Poi Valarndhu - பஞ்சஜனனென்ற அஸுரனுடைய சரீரத்திற் போய் வளர்ந்து
கருதாது, Karudhadhu - (இப்படி பிறந்த விடத்தையும் வளர்ந்த விடத்தையும்) நினையாமல்
ஊழியான், Oozhiyaan - எம்பெருமானுடைய
கை தலம் திடரில், Kai Thalam Thidaril - கைத் தலமாகிற உந்நத ஸ்தானத்திலே
குடி ஏறி, Kudi eri - குடி புகுந்து
தீய அசுரர், Theeya Asurar - கொடியவர்களான அசுரர்கள்
நடலைப் பட, Nadalai Pada - துன்பப்படும்படி
முழங்கும் தோற்றத்தாய், Muzhangum Thotrathaai - ஒலி செய்யும்படியான மேன்மை யுடையையா யிரா நின்றாய் (உன்பெருமையே பெருமை)
569நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 3
தட வரையின் மீத சரற் கால சந்திரன்
இடை உவாவில் வந்து எழுந்தால் போலே நீயும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்று இருந்தாய் கோலப் பெரும் சங்கே
கோலம் பெரு சங்கே, Kolam Peru Sange - அழகிய பெரிய சங்கே!
சாற்காலம் சந்திரன், Saarkaalam Chandiran - சரத் கால சந்திரன்
உவா இடையில், Uvaa Idaiyil - பௌர்ணமியினன்று
தட வரையின் மீது வந்து எழுந்தால் போல, Thada Varaiyin Meedhu Vandhu Ezhunthaal Pol - பெரிய உதய கிரியிலே வந்து உதித்தாற்போல
நீயும், Neeyum - நீயும்
வடமதுரையார் மன்னன் வாசு தேவன் கையில், VadaMathuraiyaar Mannan Vasudevan Kaiyil - வடமதுரையிலுள்ளார்க்கு அரசானான கண்ணபிரானுடையத் திருக் கையில்
குடி ஏறி, Kudi eri - குடி புகுந்து
வீற்றிருந்தாய், Veetrirunthaai - உன் மேன்மையெல்லாம் தோற்ற இரா நின்றாய்
570நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 4
சந்தர மண்டலம் போல் தாமோதரன் கையில்
அந்தரம் ஓன்று இன்றி ஏறி அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம் புரியே
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே
வலம்புரியே!, Valampuriye! - வலம்புரிச் சங்கே!
தமோதரன் கையில், Dhamodharan Kaiyil - கண்ண பிரானது திருக்கையில்
சந்திர மண்டலம் போல், Chandira Mandalam Pol - சந்திர மண்டலம் போலே
அந்தரம் ஒன்று இன்றி ஏறி, Andharam Ondru Indri eri - இடைவிடாது இருந்து கொண்டு
அவன் செவியில், Avan Seviyil - அவனுடைய காதில்
மந்திரம் கொள்வாய் போலும், Mandhiram Kolvaai Polum - ஏதோ ரஹஸ்யம் பேசுகிறாய் போலிரா நின்றாய்,
இந்திரனும், Indiranum - (செல்வத்தில் மிக்கவனாகப் புகழ் பெற்ற) இந்திரனும்
செல்வத்துக்கு, Selvathuku - ஐச்வர்ய விஷயத்தில்
உன்னோடு ஏலான், Unnodu elaan - உனக்கு இணையாக மாட்டான்
571நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 5
உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்
மன்னாகி நின்ற மதுசூதன் வாய் அமுதம்
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்ச சன்னியமே
பாஞ்ச சன்னியமே!, Paanja Sanniyame! - சங்கே!
ஒரு கடலில், Oru Kadalil - ஒரே கடலில்
உன்னோடு உடனே, Unnodu Udane - உன்னோடு கூடவே
வாழ்வாரை, Vaazhvaarai - வாழப் பிறந்தவர்களான மற்றும் பலரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண், Innaar Inaiyaar Endru Ennuvaar Illai Kaan - ஒரு பதார்த்தமாகவும் மதிப்பாரில்லை காண் (நீ ஒருவன் மாத்திரம்)
மன் ஆகி நின்ற, Man Aagi Nindra - ஸர்வ ஸ்வாமியா யிரா நின்ற
மதுசூதன், Madhusoodhan - கண்ணபிரானுடைய
வாய் அமுதம், Vaai Amudham - திருவாயினமுதத்தை
பல் நாளும், Pal Naalum - பல காலமாக
உண்கின்றாய், Ungindraai - பருகா நின்றாய் (ஆகையால் நீயே பாக்யசாலி)
572நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 6
போய்த் தீர்த்தமாடாதே நின்ற புணர் மருதம்
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடி கொண்டு
சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண் மால் தன்னுடைய
வாய்த் தீர்த்தம் பாய்ந்த்தாட வல்லாய் வலம் புரியே
வலம் புரியே!, Valam Puriye! - வலம்புரிச் சங்கே!
போய், Poi - வெகு தூரம் வழி நடந்து போய்
தீர்த்தம், Theertham - கங்கை முதலிய தீர்த்தங்களிலே
ஆடாதே, Aadaadhe - நீராடுகையாகிற கஷ்டங்கள் பட வேண்டாமல்
நின்ற, Nindra - நாரத சாபத்தாலே மரமாய் நின்ற
புணர் மருதம், Punar Marutham - இரட்டை மருத மரத்தை
சாய்த்து ஈர்த்தான், Saaithu eerthaan - முறித்துத் தள்ளின கண்ணபிரானுடைய
கைத்தலத்து ஏறி, Kaithalathu eri - திருக் கைத்தலத்தின் மீதேறி
குடிகொண்டு, Kudikondu - குடியாயிருந்து
சேய்‌, Sei - மிகத்தூரமாய்‌
தீர்த்தமாய் நின்ற, Theerthamaai Nindra - பாவநமாயிருக்‌கிற
செங்கண் மால் தன்னுடைய, Sengan maal Thanudaiya - புண்டரீகாக்ஷனான அவனுடைய
வாய்த் தீர்த்தம், Vaai Theertham - வாயம்ருதத்திலே
பாய்ந்து, Paaindhu - குதித்து
ஆடவல்லாய்‌, Aadavallaai - நீராடவல்லாய்‌
573நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 7
செங்கமல நாண் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல்
செங்கண் கரு மேனி வாசுதேவன் உடைய
அங்கைத் தலமேறி அன்ன வசம் செய்யும்
சங்கரையா உன் செல்வம் சால அழகியதே
நாள், Naal - அப்போதலர்ந்த
செம் கமலம் மலர் மேல், Sem Kamalam Malar Mel - செந்தாமரைப் பூவில் படிந்து
தேன், Then - தேனை
நுகரும், Nugarum - பருகுகின்ற
அன்னம் போல், Annam Pol - அன்னப் பறவை போன்று
செம் கண் கருமேனி வாசு தேவனுடைய, Sem Kan Karumeni Vaasu Dhevanudaiya - சிவந்த திருக் கண்களையும் கறுத்த திருமேனியை யுமுடைய கண்ணபிரானது
அம் கைத்தலம் ஏறி, Am Kaithalam eri - அழகிய கைத் தலத்தின் மீதேறி
அன்ன வசம் செய்யும், Anna Vasam Seiyum - கண் வளர்கின்ற
சங்கு அரையா!, Sangu Araya! - சங்குகளிற் சிறந்த பாஞ்ச ஜந்யமே!
உன் செல்வம், Un Selvam - உன்னுடைய செல்வமானது
சால, Saala - மிகவும்
அழகியது, Azhagiyadhu - சிறந்தது காண்
574நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 8
உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம்
கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே
பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாத்துகின்றார்
பண் பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே
பாஞ்சசன்னியமே, Paanja Sanniyame - சங்கே!,
உண்பது சொல்லில், Unbadhu Sollil - நீ உண்பது என்ன வென்றால்
உலகு அளந்தான் வாய் அமுதம், Ulagu Alanthaan Vaai Amutham - உலகங்களை அளந்தவனான் எம்பெருமானுடைய திருவாயிலுள்ள அம்ருதம்
கண் படை கொள்ளில், Kan Padai Kollil - நீ படுத்துக் கொள்வது எங்கே யென்றால்
கடல் வண்ணன் கை தலத்தே, Kadal Vannan Kai Thalathe - கடல் போன்ற நிறத்தை யுடையனான அவ் வெம்பெருமானுடைய திருக் கையிலே (இப்படி உனக்கு ஊணுமுறக்கமும் அங்கேயா யிருப்பதனால்)
பெண் படையார், Pen Padaiyaar - பெண்குலத்தவர்கள் அனைவரும்
உன் மேல், Un Mel - உன் விஷயமாக
பெரு பூசல், Peru Poosal - பெரிய கோஷம் போடுகிறார்கள் (எங்கள் ஜீவனத்தை இவனே கொள்ளை கொள்ளுகிறானென்று கூச்சலிடுகிறார்கள்)
பண்பு அல செய்கின்றாய், Panbu Ala Seikiraai - (இப்படி அவர்கள் வருந்தும்படி) அநியாயமான காரியத்தைச் செய்கிறாய் (இஃது உனக்குத் தகுதி யல்ல என்கை)
575நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 9
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெரும் சங்கே
பெரு செல்வம் சங்கே, Peru Selvam Sange - பெரிய செல்வம் படைத்த சங்கமே!
பதினாறாம் ஆயிரவர் தேவிமார், Pathinaaraam Aayiravar Devimaar - பதினாறாயிரம் தேவிமார்கள்
பார்த்து இருப்ப, Paarthu Iruppa - கண்ண பிரானுடைய வாயமுதத்தை நாம் பருக வேணுமென விரும்பி எதிர்பார்த்திருக்கையில்
பொது ஆக உண்பது மாதவன் தன் வாய் அமுதத்தை, Pothu Aaga Unbadhu Madhavan than vaai Amudhathai - பகவத் ஸம்பந்திகளெல்லாரும் பொதுவாக உண்ண வேண்டியதான அவ்வெம்பெருமானது வாயமுதத்தை
நீ புக்கு, Nee Pukku - நீ யொருவனே ஆக்ரமித்து
மது வாயில் கொண்டால் போல் உண்டக்கால், Madhu Vaayil Kondaal pol Undakkaal - தேனை உண்கிறாப் போல் உண்டால்
உன்னோடு சிதையாரோ, Unnodu Sidhaiyaaro - (மற்றபேர்கள்) உன்னோடு விவாதப் பட மாட்டாரோ
576நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 10
பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும்
வாய்த்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே
பாஞ்சசன்னியத்தை, Paanjachanniyathai - சங்கை
பற்பநாபனோடும், Parpanaabanodum - எம்பெருமானோடே
வாய்ந்த பெரு சுற்றம் ஆக்கிய, Vaayndha Peru Suththam Aakkiya - கிட்டின பேருறவை யுடையதாக வார்த்தை சொன்ன
வண் புதுவை, Van Pudhuvai - அழகிய ஸ்ரீ வில்லிபுத்தூரில் திருவவதரித்தவளும்
ஏய்ந்த புகழ், Eaindha Pugazh - நிறைந்த புகழை யுடையவளும்
பட்டர் பிரான் கோதை, Pattar Piran Kodhai - பெரியாழ்வாருடைய ஆண்டாள் (அருளிச் செய்த)
தமிழ் ஈர் ஐந்தும், Thamizh Eer Aindhum - இத் தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும்
ஆய்ந்து, Aaindhu - அநுஸந்தித்து
ஏத்த வல்லார் அவரும், Aetha Vallar Avarum - (இது கொண்டு எம்பெருமானைத்) துதிக்க வல்லவர்களும்
அணுக்கர், Anukkar - பாஞ்சஜந்யம் போல் அந்தரங்கராகப் பெறுவர்கள்
577நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 1
விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்
தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திரு மாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை
பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கோர் பெருமையே
விண், Vin - ஆகாசம் முழுவதிலும்
நீலம் மேலாப்பு விரித்தால் போல், Neelam Melappu Virithaal pol - நீல நிறமான மேற் கட்டியை விரித்துக் கட்டினாற் போலிரா நின்ற
மேகங்காள்!, Megangkaal - மேகங்களே!
தெள் நீர் பாய், Thel Neer Paai - தெளிந்த தீர்த்தங்கள் பாயுமிடமான
வேங்கடத்து, Vengadathu - திருவேங்கடமலையி லெழுந்தருளி யிரா நின்ற
என் திருமாலும், En Thirumaalum - திருமாலாகிய எம்பெருமானும்
போந்தானே, Pondhaane - (உங்களோடுகூட) எழுந்தருளினானோ?
முலை குவட்டில், Mulai Kuvatil - முலை நுனியிலே
கண் நீர்கள் துளி சோர, Kan Neergal Thuli sora - கண்ணீர் அரும்ப
சோர்வேனை, Sorvenai - வருந்துகிற என்னுடைய
பெண் நீர்மை ஈடு அழிக்கு மிது, Pen Neermai eedu Azhikku mithu - பெண்மையை உருவழிக்கிறவிது
தமக்கு, Thamakku - அவர் தமக்கு
ஓர் பெருமையே, Or Perumaiye - ஒரு பெருமையர யிரா நின்றதோ?
578நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 2
மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்துச்
சாமத் திண் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே
காமத் தீயுள் புகுந்து கதுவப் பட்டிடைக் கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே
மா முத்தம் நிதி சொரியும், Maa Mutham Nidhi Soriyum - சிறந்த முத்துக்களையும் பொன்களையும் கொண்டு பொழிகிற
மா முகில்காள், Maa Mugilkaal - காள மேகங்களே!
வேங்கடத்து, Vengadathu - திருமலையிலெழுந்தருளியிரா நின்ற
உள் புகுந்து, Ull Pugundhu - உள்ளே புகுந்து
கதுவப்பட்டு, Kadhuvapattu - கவ்வ, அதனால் பாதைப்பட்டு
கங்குல், Kangul - இரவில்
இடை ஏமத்து, Idai emathu - நடு யாமத்திலே
சாமத்தின் நிறம் கொண்ட, Saamathin Niram Konda - நீலநிற முடையனான
தாளாளன், Thaalaalan - எம்பெருமானுடைய
வார்த்தை என்னே, Vaarthai Enne - ஸமாசாரம் ஏதாகிலுமுண்டோ?
காமம் தீ, Kaamam Thee - காமாக்நியானது
ஓர் தென்றலுக்கு, Or Thendralukku - ஒரு தென்றற் காற்றுக்கு
நான் இலக்கு ஆய், Naan Ilakku Aay - நான் இலக்காகி
இங்கு இருப்பேன், Ingu Irupen - இங்கு இருப்பனோ? (இது தகுதியோ?)
579நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 3
ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே
அளியத்த மேகங்காள், Aliyatha Megankaal - அருள் புரியக் கடவ மேகங்களே!
ஒளி, Oli - தேஹத்தின் காந்தியும்
வண்ணம், Vannam - நிறமும்
வளை, Valai - வளைகளும்
சிந்தை, Sindhai - நெஞ்சும்
உறக்கத்தோடு, Urakkathodu - உறக்கமும் ஆகிய இவையெல்லாம்
எளிமையால், Elimaiyal - என்னுடைய தைந்யமே காரணமாக
என்னை இட்டு, Ennai Ittu - என்னை உபேக்ஷித்து விட்டு
ஈடு அழிய, Eedu Azhiya - என் சீர் குலையும்படி
போயின, Poyina - நீங்கப் போய் விட்டன
ஆல், Aal - அந்தோ!
குளிர் அருவி, Kulir Aruvi - குளிர்ந்த அருவிகளை யுடைய
வேங்கடத்து, Vengadathu - திருமலையி லெழுந்தருளி யிருக்கிற
என் கோவிந்தன், En Govindhan - எனது கண்ண பிரானுடைய
குணம், Gunam - திருக் கல்யாண குணங்களை
பாடி, Paadi - வாயாரப் பாடிக் கொண்டு (அந்தப் பாட்டே தாரகமாக)
ஆவி, Aavi - பிராணனை
காத்திருப்பேனே, Kaathiruppene - ரக்ஷித்திருக்க என்னால் முடியுமோ?
580நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 4
மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு
என்னகத் திளம் கொங்கை விரும்பித் தாம் நாடோறும்
பொன்னகம் புல்குதற்கு என்புரிவுடைமை செப்புமினே
ஆகத்து மின் எழுகின்ற மேகங்காள், Aagathu Min Ezhuginra Megankaal - சரீரத்திலே மின்னல் தோன்றப் பெற்ற மேகங்களே!
என் ஆகத்து, En Aagathu - என் மார்விலுண்டான
இள கொங்கை, Ila Kongai - இள முலைகளை
தாம் விரும்பி, Thaam Virumbi - அவ் வெம்பெருமான் விரும்பி
பொன் ஆகம் புல்குதற்கு, Pon Aagam Pulkutharku - அழகிய தம் மார்வோடே அணைய வேணு மென்னும் விஷயத்தில்
நாள் தோறும், Naal Thorum - நித்யமும்
என் புரிவடைமை, En Purivadaimai - எனக்கு ஆசையிருக்கிறபடியை
வேங்கடத்துத் தன் ஆகம், Vengaduthu Than Aagam - திருமலையிலே தனது திருமேனியில்
திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு செப்புமினே, Thirumangai Thangiya Seer Maarvarkku cheppumine - பிராட்டி எழுந்தருளி யிருக்கப் பெற்ற திரு மார்பு படைத்த பெருமானுக்கு சொல்லுங்கள்
581நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 5
வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள் வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதறத் திரண்டு ஏறிப் பொழிவீர் காள்
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே
வேங்கடத்து, Vengadathu - திருமலையிலே
தேன் கொண்ட மலர் சிதற, Then Konda Malar Sidhara - தேன் நிறைந்துள்ள புஷ்பங்கள் சிதறும்படி
திரண்டு ஏறி பொழிலீர்காள், Thirandu Eri Pozhileerkaal - திரள் திரளாக ஆகாயத்திலேறி மழையைப் பொழிகின்றவையாயும்
வான் கொண்டு கிளர்ந்து எழுந்த, Vaan Kondhu Kilarndhu Ezhundha - ஆகாயத்தைக் கபளீகரித்துக் கொண்டு ஒங்கிக் கிளம்புகின்றவையாயுமுள்ள
மா முகில்காள்!, Maa Mugilkaal! - காள மேகங்களை!
ஊன் கொண்டவள் உகிரால், Oon Kondaval Ukiraal - வலியள்ளவையாய் கூர்மை யுடையவையான நகங்களாலே
இரணியனை உடல் இடந்தான் தான், Iraniyanai Udal Idandhaan thaan - ஹிரண்யாஸுரனுடைய உடலைப் பிளந்தெறிந்த பெருமான்
கொண்ட, Konda - என்னிடத்துக் கொள்ளை கொண்டு போன
சரி வளைகள், Sari Valaigal - கை வளைகளை
தரும் ஆகில், Tharum aagil - திருப்பிக் கொடுப்பதாக விருந்தால்
சாற்றுமின், Saatrumin - எனது அவஸ்த்தையை அவர்க்குத் தெரிவியுங்கள்
582நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 6
சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் மாவலியை
நிலம் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர் காள்
உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே
சலம் கொண்டு, Salam Kondu - ஸமுத்ர ஜலத்தை முகந்து கொண்டு
கிளர்ந்து எழுந்த, Kilarndhu Ezhundha - மேற் கிளம்பி விளங்குகின்ற
தண் முகில் காள், Than Mugilkaal - குளிர்ந்த மேகங்களே!
மா வலியை, Maa Valiyai - மஹா பலியிடமிருந்து
நிலம் கொண்டான் வேங்கடத்து, Nilam Kondaan Vengadathu - பூமியை ஸ்வாதீநப் படுத்திக் கொண்டவனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற திருமலையிலே
நிரந்து, Nirandhu - பரவி
ஏறி, Eri - உயர விருந்து
பொழிவீர் காள்!, Pozhiveer kaal! - பொழிகின்ற மேகங்களே!
உலங்கு உண்ட, Ulangu unda - பெருங்கொசுக்கள் புஜித்த
விளங்கனி போல் உள் மெலிய, Vilangani pol ul Meliya - விளாம்பழம் போல நான் உள் மெலியும் படி
புகுந்து, Pugundhu - என்னுள்ளே பிரவேசித்து
என்னை, Ennai - என்னுடைய
நலம் கொண்ட, Nalam Konda - நிறைவுகளை அபஹரித்த
நாரணற்கு, Naaranarku - நாராயணனுக்கு
என் நடலை நோய், En Nadalai noi - எனது கஷ்ட வ்யாதியை
செப்புமின், Seppumin - தெரிவியுங்கள்
583நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 7
சங்க மா கடல் கடைந்தான் த்ண் முகில்காள் வேங்கடத்துச்
செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள்
தங்கு மேல் என்னாவி தங்கும் என்றும் உரையீரே
சங்கம், Sangam - சங்குகளை யுடைத்தாயும் பெருமை வாய்ந்தது
மா, Maa - பெருமை வாய்ந்ததாயுமான
கடல், Kadal - கடலை
கடைந்தான், Kadainthaan - கடைந்தருளின பெருமான் எழுந்தருளி யிருக்கிற
வேங்கடத்து, Vengadathu - திருமலையில் திரிகிற
விண்ணப்பம், Vinnapam - விஜ்ஞாபம் யாதெனில்
கொங்கை மேல், Kongai Mel - எனது முலைகளின் மேல் (பூசப் பட்டுள்ள)
குங்குமத்தின் குழம்பு, Kungumathin Kuzhambu - குங்குமக் குழம்பானது
அழிய, Azhiya - நன்றாக அவிந்து போம்படி
தண் முகில் காள், Than Mugilkaal - குளிர்ந்த மேகங்களே!
செம் கண் மால், Sem kan maal - புண்டரீகாக்ஷனான அவ் வெம்பெருமானுடைய
சே அடி கீழ், Se Adi keezh - செவ்விய திருவடிகளின் கீழ்
அடி வீழ்ச்சி, Adi Veezhchi - அடியேனுடைய
ஒரு நாள், Oru Naal - ஒரு நாளாகிலும்
புகுந்து தங்கும் ஏல், Pugundhu Thangum Yel - அவன் வந்து ஸம்ஸ்லேஷிப்பானாகில் (அப்போது தான்)
என் ஆவி தங்கும், En Aavi Thangum - என் பிராணன் நிலை நிற்கும் என்பதாம்
உரையீரே, Uraiyire - (இவ் விண்ணப்பத்தை அப் பெருமானிடத்துச்) சொல்லுங்கள்
584நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 8
கார் காலத்து எழுகின்ற கார் முகில் காள் வேங்கடத்துப்
போர் காலத்து எழுந்து அருளிப் பொருதவனார் பேர் சொல்லி
நீர் காலத் தெருக்கில் அம்பழ விலை போல் வீழ்வேனை
வார் காலத்தொரு நாள் தம் வாசகம் தந்து அருளாரே
கார் காலத்து, Kaar Kaalathu - வர்ஷ காலத்திலே
வேங்கடத்து எழுகின்ற, Vengadathu Ezhuginra - திருமலையிலே வந்து தோற்றா நின்ற
கார் முகில்காள், Kaar Mugilkaal - காள மேகங்களே!
போர் காலத்து, Por Kaalathu - யுத்த ஸமயத்திலே
எழுந்தருளி, Ezhundharuli - (போர் களத்தில்) எழுந்தருளி
பொருதவனார், Poruthavanar - போர் செய்து வெற்றி பெற்ற இராம பிரானுடைய
பேர், Per - திரு நாமங்களை
சொல்லி, Solli - ஸங்கீர்த்தநம் பண்ணி
நீர் காலத்து எருக்கில் அம் பழ இலை போல் வீழ்வேனை, Neer Kaalathu Erukkil Am Pazha Ilai Pol Veezhvenai - மழைகாலத்தில் எருக்கம் பழுப்புக்கள் அற்று விழுவது போல் ஒசிந்து விழுகின்ற எனக்கு
வார் காலத்து ஒரு நாள், Vaar Kaalathu Oru Naal - நெடுகிச் செல்லுகிற காலத்திலே ஒரு நாளாகிலும்
தம் வாசகம் தந்தருளாரே, Tham Vasagam Thandharulare - தம்முடைய ஒரு வார்த்தையை அருளா தொழிவரோ?
585நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 9
மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே
வேங்கடத்தை, Vengadathai - திருமலையை
பதி ஆக, Pathi aaga - இருப்பிடமாகக் கொண்டு
வாழ்வீர்கள், Vazhveerkal - வாழ்கின்றவையாயும்
மதம் யானை போல் எழுந்த, Madham Yaanai pol Ezhundhu - மத்த கஜம் போலே செருக்கிக் கிளர்ந்தவை யாயுமுள்ள
மா முகில்காள், Maa Mugilkaal - காள மேகங்களே!
பாம்பு அணையான், Paambu Anaiyaan - சேஷ சாயியான எம்பெருமானுடைய
வார்த்தை, Vaarthai - வார்த்தை யானது
என்னே, Enne - இப்படி பொய்யாய் விட்டதே
தான், Thaan - அவ் வெம்பெருமான் தான்
என்றும், Endrum - எப்போதைக்கும்
கதி ஆவான், Kathi Aavaan - (ஆச்ரிதரகட்கு) ரக்ஷகனா யிருந்து வைத்து
கருதாது, Karuthaadhu - அத் தன்மையை நினையாமல்
ஓர் பெண் கொடியை, Or Pen Kodiyai - ஒரு பெண் பிள்ளையை
வதை செய்தான், Vadhai Seidhaan - கொலை பண்ணினான்
என்னும் சொல், Ennum Sol - என்கிற சொல்லை
வையகத்தார், Vaiyagathaar - இப் பூமியிலுள்ளவர்கள்
மதியாரே, Mathiyaare - மதிக்க மாட்டார்களே
586நாச்சியார் திருமொழி || 8 - விண்ணீல மேலாப்பு (மேகவிடுதூது) 10
நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவர் அடியார் ஆகுவரே
நல் நுதலாள், Nal Nudhalaal - விலக்ஷணமான முகத்தை யுடையளாய்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை, Pogathil Vazhuvadha Puthuvaiyar Kon Kodhai - பகவத நுபவத்தில் குறையாதவரான பெரியாழ்வாருடைய மகளான ஆண்டாள்
நாகத்தின் அணையான் வேங்கடக் கோனை, Naagathin Anaiyaan Vengada Konai - திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையனான திருவேங்கட முடையானை
நயந்து, Nayandhu - ஆசைப்பட்டு
உரை செய், Urai Sei - அருளிச் செய்ததாய்
மேகத்தை விட்டு அதில் விண்ணப்பம், Megathai Vittu Adhil Vinnapam - மேகத்தை தூது விடுவதாக அமைந்த லிண்ணப்பமாகிய
தமிழ், Thamizh - இத் தமிழ்ப் பாசுரங்களை
ஆகத்து வைத்து, Aagathu Vaithu - ஹ்ருதயத்திலே வைத்துக் கொண்டு
உரைப்பாரவர், Uraipaaravar - ஓத வல்லவர்கள்
அடியார் ஆகுவர், Adiyaar Aaguvar - எம்பெருமானுக்கு நித்ய கைங்கரியம் பண்ணப் பெறுவர்கள்
587நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 1
சிந்துரச் செம்பொடிப் போல் திரு மால் இருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்
மந்திரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையில் நின்றுய்தும் கொலோ
திரு மாலிருஞ்சோலை எங்கும், Thirumaalirunjolai engum - திருமாலிருஞ்சோலையில் பார்த்த விடமெங்கும்
இந்திர கோபங்கள், Indira Gopangal - பட்டுப் பூச்சிகளானவை
செம், Sem - சிவந்த
சிந்துரம் பொடி போல், Sindhuram Podi pol - ஸிந்தூரப் பொடி போல
எழுந்து, Ezhundhu - மேலெழுந்து
பரந்திட்டன, Parandhittana - பரவிக் கிடக்கின்றன
ஆல், Aal - அந்தோ!
அன்று, Andru - (கடலைக் கடைந்து அமுதமளிக்கவேணுமென்று தேவர்கள் சரணம் புகுந்து வேண்டின) அக் காலத்திலே
மந்தரம், Mandharam - மந்தர மலை
நாட்டி, Naati - (பாற் கடலில் மத்தாத) நாட்டி (கடல் கடைந்து)
கொழு மதுரம், Kozhu Madhuram - மிகவும் மதுரமான
சாறு, Saaru - அம்ருத ரஸத்தை
கொண்ட, Konda - எடுத்துக் கொண்ட
சுந்தரம் தோள் உடையான், Sundharam thol udaiyaan - ஸ்ரீ ஸுந்தர பாஹு நாதனுடைய
சுழலையில் நின்று, Suzhalaiyil nindru - சூழ் வலையில் நின்றும்
உய்தும் கொல், Uydhum kol - பிழைப்போமோ?
588நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 2
போர்க் களிறு பொரும் மாலிரும் சோலை யம்பூம் புறவில்
தார்க் கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற
கார்க்கொள் படாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் தரியேன்
ஆர்க்கிடுகோ தோழீ அவன் தார் செய்த பூசலையே
போர் களிறு, Por Kaliru - போர் செய்வதையே தொழிலாக வுடைய யானைகள்
பொரும், Porum - பொருது விளையாடுமிடமான
மாலிருஞ் சோலை, Maalirunjolai - திருமாலிருஞ் சோலை மலையினுடைய
அம்பூம் புறவில், Amboom Puravil - மிகவுமழகிய தாழ்வரைகளிலே
தார் கொடி முல்லைகளும், Thaar Kodi Mullaigalum - அரும்புகளை யுடைய கொடி முல்லைகளும்
தவளம் நகை, Thavalam Nagai - (அழகருடைய) வெளுத்த புன்சிரிப்பை
காட்டுகின்ற, Kaatukindra - நினைப்பூட்டா நின்றன (அன்றியும்)
கார் கொள், Kaar kol - சினை கொண்ட
படாக்கள், Padaakal - படா என்னுங் கொடிகள்
நின்று, Nindru - பூத்து நின்று
கழறி சிரிக்க, Kazhari Sirikka - ‘எமக்கு நீ தப்பிப் பிழைக்க முடியாது‘ என்று சொல்லிக் கொண்டே சிரிப்பது போல விகஸிக்க
தரியேன், Thariyen - (அது கண்டு) தரிக்க மாட்டுகின்றிலேன்
தோழீ, Thozhi - எனது உயிர்த் தோழியே!
அவன் தார், Avan thaar - (நாம் ஆசைப்பட்ட) அவனுடைய தோள் மாலையானது
செய்த, Seidha - உண்டு பண்ணின
பூசலை, Poosalai - பரிபவத்தை
ஆர்க்கு இடுகோ, Aarku idugo - யாரிடத்து முறையிட்டுக் கொள்வது?
589நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 3
கருவிளை யொண் மலர்காள் காயா மலர்காள் திருமால்
உரு வொளி காட்டுகின்றீர் யெனக்குய் வழக்கொன்று உரையீர்
திரு விளையாடு திண் தோள் திருமால் இரும் சோலை நம்பி
வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே
ஒண், On - அழகிய
கருவிளை மலர்காள், Karuvilai Malarkaal - காக்கணம் பூக்களே!
காயா மலர்காள், Kaayaa Malarkaal - காயாம் பூக்களே! (நீங்கள்)
திருமால், Thirumaal - எம்பெருமானுடைய
உரு ஒளி, Uru Oli - திருமேனியின் நிறத்தை
காட்டுகின்றீர், Kaatukindreer - நீனைப்பூட்டாநின்றீர்கள்
எனக்கு, Enakku - (அதனை நீனைத்து வருந்துகின்ற) எனக்கு
உய் வழக்கு ஒன்று, Uy Vazhakku ondru - பிழைக்கும் வகை யொன்றை
உரையீர், Uraiyeer - சொல்லுங்கள்
திரு விளையாடு, Thiru Vilaiyaadu - பெரிய பிராட்டியார் விளையாடுமிடமான
திண் தோள், Thin Thol - திண்ணிய திருத் தோளை யுடையரான
திருமாலிருஞ் சோலை நம்பி, Thirumaalirunjolai Nambi - அழகர்
இல் புகுந்து, il pugundhu - (எனது) வீட்டினுள் புகுந்து
வரி வளை, Vari Valai - (எனது) அழகிய வளைகளை
வந்தி பற்றும் வழக்கு உளதே, Vandhi patrum vazhaku uladhe - பலாத்காரமாகக் கொள்ளைகொண்டு போவதும் நியாயமோ?
590நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 4
பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறும் மலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள் அணி மால் இரும் சோலை நின்ற
எம்பெருமான் உடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே
பைம் பொழில் வாழ், Paim Pozhil Vaazh - பரந்த சோலையில் வாழ்கின்ற
குயில்காள், Kuyilkaal - குயில்களே!
மயில்காள், Mayilkaal - மயில்களே!
ஒண் கருவிளைகாள், On Karuvilaikaal - அழகிய காக்கணம் பூக்களே!
வம்பக் களங்கனிகாள், Vamba Kalanganikaal - புதிய களாப்பழங்களே!
வண்ணம் நறு பூவை மலர்காள், Vannam Naru Poovai Malarkaal - பரிமளத்தையுமுடைய காயாம் பூக்களே!
ஐபெரு பாதகர்காள், Aiperu Paadhakarkaal - (ஆகிய) பஞ்ச மஹா பாதகர்களே!
உங்களுக்கு, Ungaluku - உங்களுக்கு
அணி மாலிருஞ்சோலை நின்ற எம்பெருமானுடைய நிறம் என் செய்வது, Ani Maalirunjolai Nindra Emperumaanudaiya Niram En Seivadhu - திருமாலிருஞ் சோலையிலுள்ள அழகருடைய திருமேனி நிறமானது எதுக்காக? (அந்த நிறத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டது என்னை ஹிம்ஸிப்பதற்காகவே என்கை)
591நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 5
துங்க மலர்ப் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்ற
செங்கட் கருமுகிலின் திருவுருப் போல் மலர் மேல்
தொங்கிய வண்டினங்காள் தொகு பூஞ்சுனைகாள் சுனையில்
தங்கு செந்தாமரைகாள் எனக்கோர் சரண் சாற்றுமினே
துங்கம் மலர் பொழில் சூழ், Thungam Malar pozhil soozh - ஓங்கின மலர்களை யுடைய சோலைகள் சூழ்ந்த
திருமாலிருஞ் சோலை, Thirumaalirunjolai - திருமாலிருஞ்சோலையில்
நின்ற, Nindra - நின்ற திருக் கோலமாய் எழுந்தருளியிருக்கிற
செம் கண் கருமுகிலின், Sem Kan Karumukilin - செந்தாமரை போன்ற திருக் கண்களையும் காள மேகம் போன்ற வடிவையுமுடைய எம்பெருமானுடைய
திருவுருப் போல், Thiruvuru pol - அழகிய வடிவம் போலே
மலர் மேல் தொங்கிய வண்டு இனங்காள், Malar Mel Thongiya Vandu Inankaal - மலர் மேல் தங்கி யிருக்கிற வண்டுக் கூட்டங்களே!
தொகு, Thogu - நெருங்கி யிருக்கின்ற
பூஞ்சுனைகாள், Poonjunaikaal - அழகிய சுனைகளே!
சுனையில் தங்கு, Sunaiyil Thangu - அச் சுனைகளில் உள்ள
செம் தாமரைகாள், Sem Thaamaraikaal - செந்தாமரை மலர்களே!
எனக்கு, Enakku - (உங்கள் யம தூதர்களாக நினைக்கிற) எனக்கு
ஓர் சரண் சாற்றுமின், Or Charan Satrumin - ஒரு பற்றுக்கோடு சொல்லுங்கள்
592நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 6
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும் கொலோ
நறு பொழில் நாறும், Naru Pozhil Naarum - பரிமளம் மிகுந்த பொழில்கள் மணங்கமழா நிற்கப் பெற்ற
மாலிருஞ் சோலை, Maalirunjolai - திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற)
நம்பிக்கு, Nambiku - எம்பெருமானுக்கு
நான், Naan - அடியேன்
நூறு தடாவில், Nooru Tadaavil - நூறு தடாக்களில் நிறைந்த
வெண்ணெய், Vennnei - வெண்ணெயை
வாய் நேர்ந்து, Vaai Nerndhu - வாயாலே சொல்லி
பராவி வைத்தேன், Paraavi Vaithen - ஸமர்ப்பித்தேன் (இன்னமும்)
நூறு தடா நிறைந்த, Nooru Thadaa Niraindha - நூறு தடாக்களில் நிறைந்த
அக்கார அடிசில், Akkara adisil - அக்கார வடிசிலும்
சொன்னேன், Sonnen - வாசிகமாக ஸமர்ப்பித்தேன்
இவை, Ivai - இந்த வெண்ணெயையும் அக்கார வடிசிலையும்
ஏறு திரு உடையான், Eru Thiru Udaiyaan - (நாட்செல்ல நாட்செல்ல) ஏறி வருகிற ஸம்பத்தை யுடையரான அழகர்
இன்று வந்து, Indru Vandhu - இன்று எழுந்தருளி
கொள்ளும் கொல், Kollum Kol - திருவுள்ளம் பற்றுவரோ?
593நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 7
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான்
ஓன்று நூராயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன்
தென்றல் மணம் கமழும் திரு மால் இருஞ்சோலை தன்னுள்
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர் படிலே
தென்றல், Thendral - தென்றல் காற்றானது
மணம் கமழும், Manam Kamazhum - மணத்தைக் கொண்டு வீசுகின்ற
திரு மாலிருஞ் சோலை தன்னுள், Thiru Maalirunjolai thannul - திருமாலிருஞ்சோலை மலையிலே
நின்ற, Nindra - எழுந்தருளி யிருக்கிற
பிரான், Piran - ஸ்வாமியான அழகர்
இன்று, Indru - இன்றைக்கு
வந்து, Vandhu - இவ்விட மெழுந்தருளி
இத்தனையும், Ithanaiyum - நூறு தடா நிறைந்த வெண்ணெயையும் அக்கார வடிசிலையும்
அமுது செய் திட பெறில், Amuthu seithida peril - அமுது செய்தருளப் பெற்றால் (அவ்வளவுமன்றி)
அடியேன் மனத்தே வந்து நேர் படில், Adiyen manathe vandhu ner padil - அடியேனுடைய ஹ்ருதயத்திலே நித்ய வாஸம் பண்ணப் பெற்றால்
நான், Naan - அடியேன்
ஒன்று, Ondru - ஒரு தடாவுக்கு
நூறு ஆயிரம் ஆ கொடுத்து, Nooru Aayiram Aa Koduthu - நூறாயிரம் தடாக்களாக ஸமர்ப்பித்து
பின்னும், Pinnum - அதற்கு மேலும்
ஆளும் செய்வன், Aalum Seivan - ஸகல வித கைங்கரியங்களும் பண்ணுவேன்
594நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 8
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே
கரிய குருவி கணங்கள், Kariya kuruvi kanangal - கரிய குருவிக் கூட்டங்கள்
காலை, Kaalai - விடியற்காலத்திலே
எழுந்திருந்து, Ezhundhirundhu - எழுந்து
சோலைமலை பெருமான், Solaimalai Peruman - திருமாலிருஞ்சோலை மலைக்குத் தலைவனாயும்
துவராபதி எம்பெருமான், Dhuvarapathi Emperuman - துவராபுரிக்குத் தலைவனாயும்
ஆலின் இலை பெருமான் அவன், Aalin ilai Peruman avan - ஆலிலையில் வளர்ந்த பெருமானுயுமுள்ள அந்த ஸர்வேச்வரனுடைய
வார்த்தை, vaarthai - வார்த்தைகளை
உரைக்கின்ற, uraikindra - சொல்லா நின்றன (இப்படி)
மாலின், Maalin - எம்பெருமானுடைய
வரவு, Varavu - வருகையை
சொல்லி, solli - சொல்லிக் கொண்டு
மருள் பாடுதல், Marul paaduthal - மருளென்கிற பண்ணைப் பாடுவதானது
மெய்ம்மை கொல், Meimmai kol - மெய்யாகத் தலைக் கட்டுமா
595நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 9
கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்
சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ
கோங்கு அலரும் பொழில், Kongu Alarum Pozhil - கோங்கு மரங்கள் மலரப் பெற்ற சோலைகளை யுடைய
மாலிருஞ் சோலையில், Maalirunjolaiyil - திருமாலிருஞ் சோலை மலையில்
கொன்றைகள் மேல், Kondraigal Mel - கொன்றை மரங்களின் மேல்
தூங்கு, Thoongu - தொங்குகின்ற
பொன் மாலைகளோடு உடனாய் நின்று, Pon Maalaigalodu Udanay Nindru - பொன் நிறமான பூமாலை களோடு ஸமமாக
தூங்குகின்றேன், Thoongukinren - வாளா கிடக்கின்றேன்
பூ கொள், Poo kol - அழகு பொருந்திய
திரு முகத்து, Thiru Mugathu - திருப் பவளத்திலே
மடுத்து, Maduthu - வைத்து
ஊதிய, Oodhiya - ஊதப் படுகிற
சங்கு, Sangu - ஸ்ரீபாஞ்சஜந்யத்தினுடைய
ஒலியும், Oliyum - த்வநியும்
சார்ங்கம் வில்நாண் ஒலியும், Saarngam Vilnaan Oliyum - சார்ங்கமென்னும் வில்லின் நாணோசையும்
தலைப் பெய்வது, Thalai Peivadhu - ஸமீபிப்பது
எஞ்ஞான்று கொல், Yenjaandru kol - என்றைக்கோ?
596நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 10
சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே
சந்தொடு, Santhodu - சந்தனக் கட்டைகளையம்
கார் அகிலும், Kaar Agilum - காரகிற் கட்டைகளையும்
சுமந்து, Sumandhu - அடித்துக் கொண்டு
தடங்கள் பொருது வந்து, Thadangal Poruthu Vandhu - பல பல குளங்களையும் அழித்துக் கொண்டு ஓடி வந்து
இழியும், Izhiyum - பெருகுகின்ற
சிலம்பாறு உடை, Silambaaru udai - நூபுர கங்கையையுடைத்தான
மாலிருஞ் சோலை நின்ற சுந்தரனை, Maalirunjolai Nindra Sundharanai - திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளி யிருக்கிற அழகரைக் குறித்து
சுரும்பு ஆர் குழல் கோதை, Surumbu Aar Kuzhal Kodhai - வண்டுகள் படித்த கூந்தல் முடியை யுடைய ஆண்டாள்
தொகுத்து உரைத்த, Thoguthu uraitha - அழகாக அருளிச் செய்த
செம் தமிழ் பத்தும் வல்லார், Sem Thamizh Pathum Vallar - செந்தமிழிலாகிய இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்கள்
திருமால் அடி, Thirumaal Adi - ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடிகளை
சேர்வர்கள், Servarkal - அடையப் பெறுவர்கள்
597நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 1
கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணன் எம்மேல் உம்மைப்
போர்க் கோலம் செய்து போர விடுத்து அவன் எங்குற்றான்
ஆர்க்கோ வினி நாம் பூசல் இடுவது அணி துழாய்த்
தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ
கார் கோடல் பூங்காள், Kaar Kodal Poonkaal - கறுத்த காந்தள் பூக்களே!
உம்மை, Ummai - உங்களை
போர் கோலம் செய்து, Por kolam seithu - யுத்தத்திற்கு உசிதமாக அலங்கரித்து
எம் மேல், Em Mel - என் மேலே
போர விடுத்தவன், Pora Viduthavan - அனுப்பினவானான
கார் கடல் வண்ணன், Kaar Kadal Vannan - கறுத்த கடல் போன்ற வடிவை யுடையனான கண்ணபிரான்
எங்குற்றான், Engutraan - எங்கே யிருக்கிறான்?
நாம், Naam - (உங்களால் மிகவும் நலிவுபட்ட) நான்
இனி, Ini - இனி மேல்
ஆர்க்கு, Aarkku - யாரிடத்தில் போய்
பூசல் இடுவதோ, Poosal Idhuvatho - முறை யிட்டுக் கொள்வதோ (அறியேன்)
அணி, Ani - அழகிய
துழாய் தார்க்கு, Thuzhaai thaarku - திருத் துழாய் மாலையை ஆசைப்பட்டு
ஓடும் நெஞ்சம் தன்னை படைக்க வல்லேன் அந்தோ!, Odum Nenjam thannai padaikka vallen Andho! - ஓடுகின்ற நெஞ்சை யுடையவளா யிரா நின்றேனே! ஐயோ!
598நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 2
மேல் தோன்றி பூக்காள் மேல் உலகங்களின் மீது போய்
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலம் கையின்
மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றீரே
மேல் தோன்றி பூக்காள், Mel thondri pookaal - உயரப் பூத்திருக்கிற காந்தள் பூக்களே!
மேல் உலகங்களின் மீது போய் மேல் தோன்றும் சோதி, Mel Ulagankalin meedhu poi mel thondrum jothi - மேலுள்ள உலகங்களெல்லாவற்றையுங் கடந்து அவற்றுக்கு மேற்பட்டு விளங்குகின்ற ‘தன்னுடைச் சோதி‘ என்கிற பரம பதத்தில் எழுந்தருளி இருக்கிற
வேதம் முதல்வர், Vedham Mudhalvar - வேத ப்ரதிபாத்யனான பரம புருஷனுடைய
வலம் கையின் மேல் தோன்றும், Valam kaiyin mel thondrum - வலத் திருக் கையிலே விளங்கா நின்ற
ஆழியின் வெம் சுடர் போல், Aazhiyin vem sudar pol - திருவாழி யாழ்வானுடைய வெவ்விய தேஜஸ்ஸு போல
சுடாது, Sudaathu - தஹியாமல்
எம்மை, Emmai - என்னை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து, Maatrolai pattavar kootathu - இந்த பிரக்ருதி மண்டலத்தை விட்டு நீங்கினவர்களுடைய திரளில்
வைத்துக் கொள்கிற்றீரே, Vaithu kolkitreere - கொண்டு சேர்க்கவல்லீர்களோ?
599நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 3
கோவை மணாட்டி நீ யுன் கொழுங்கனி கொண்டு எம்மை
ஆவி தொலைவியேல் வாய் அழகர் தம்மை அஞ்சுதும்
பாவியேன் தோன்றிப் பாம்பணையார்க்கும் தம் பாம்பு போல்
நாவும் இரண்டுள வாய்த்து நாணியிலேனுக்கே
கோவை மானாட்டி, Kovai Maanatti - அம்மா! கோவைக் கொடியே!
நீ, Nee - நீ
உன், Un - உன்னுடைய
கொழுங்கனி கொண்டு, Kozhunkani Kondu - அழகிய பழங்களாலே
எம்மை, Emmai - என்னுடைய
ஆவி, Aavi - உயிரை
தொலைவியேல், Tholaiviyel - போக்கலாகாது
வாய் அழகர் தம்மை, Vaai Azhagar Thammai - அழகிய வாய் படைத்த பெருமான் விஷயத்திலே
அஞ்சுதும், Anjuthum - பயப்படா நின்றேன்!
பாவியேன், Paaviyen - பாவியானா நான்
தோன்றி, thondri - பிறந்த பின்பு
நாணிலியேனுக்கு, Naaniliyenukku - லஜ்ஜை யற்றவளான என் விஷயத்திலே
பாம்பு அணையார்க்கும், Paambu Anaiyaarkum - சேஷ சாயியான பெருமாளுக்கும்
தம் பாம்பு போல், Tham Paambu Pol - தமது படுக்கையான திருவனந்தாழ்வானுக்குப் போல
நாவும் இரண்டு உள ஆயிற்று, Naavum Irandu Ula Aaitru - இரண்டு நாக்குகள் உண்டாயின
600நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 4
முல்லைப் பிராட்டி நீ யுன் முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல் விளைவியேல் ஆழி நங்காய் உன் அடைக்கலம்
கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே
முல்லைப் பிராட்டி!, Mullai Piratti - அம்மா! முல்லைக் கொடியே!
ஆழி நங்காய்!, Aazhi Nangaai - கம்பீரமான இயல்வை யுடையாய்!
நீ, Ne - நீ
உன் முறுவல்கள் கொண்டு, Un muruvalgal kondu - (எம்பெருமானது முறுவல் போன்ற) உனது விகாஸத்தாலே
எம்மை, Emmai - என் விஷயத்திலே
அல்லல் விளைவியேல், Allal vilaiviyel - வருத்தத்தை உண்டாக்க வேண்டா
உன் அடைக்கலம், Un adaikalam - (இதற்காக) உன்னைச் சரணமடைகிறேன்
கொல்லை அரக்கியை, Kollai arakkiyai - வரம்பு கடந்தவளான சூர்ப்பணகையை
மூக்கு அரிந்திட்ட, Mooku arindhitta - மூக்கறுத்துத் துரத்தின
குமரனார், Kumaranaar - சக்ரவர்த்தி திருமகனாருடைய
சொல்லும், Sollum - வார்த்தையே
பொய் ஆனால், Poi aanal - பொய்யாய் விட்டால்
நான் பிறந்தமையும் பொய் அன்று, Naan pirandhamaiyum poi andru - நான் பெரியாழ்வார் வயிற்றில் பிறந்ததும் பொய்யாகக் கடவதன்றோ
601நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 5
பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் நல்வேங்கட
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடி யுடையார் வந்து அருள் செய்து
கூடுவர் ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே
பாடும், Paadum - பாடுகின்ற
குயில்காள்!, Kuyilkaal - குயில்களே!
ஈடு, Eedu - (கர்ண கடோரமான) இக் கூசல்
என்ன பாடல்?, Enna paadal? - என்ன பாட்டு
நல் வேங்கடம் நாடர், Nal Vengadam Naadar - விலக்ஷணமான திருவேங்கட மலையை இருப்பிடமாக வுடைய பெருமான்
நமக்கு, Namakku - என் விஷயத்திலே
ஒரு வாழ்வு தந்தால், Oru vaazhvu thandhaal - ஒரு வாழ்ச்சியைப் பண்ணிக் கொடுப்பனாகில் (அப்போது)
வந்து பாடுமின், Vandhu paadumin - (நீங்கள் இங்கே) வந்து பாடுங்கள்
ஆடும், Aadum - (ஆநந்தத்தாலே) ஆடுகின்ற
கருளன், Karulan - பெரிய திருவடியை
கொடி உடையார், Kodi udaiyaar - த்வஜமாகக் கொண்டிருக்கிற அப் பெருமான்
அருள் செய்து, Arul seidhu - க்ருபை பண்ணி
வந்து கூடுவர் ஆயிடில், Vandhu kooduvar aayidil - (இங்கே) வந்து சேர்வனாகில்
கூவி, Koovi - (அப்போது உங்களை) வரவழைத்து
நும் பாட்டுக்கள், Num paatukal - உங்களது பாட்டுக்களை
கேட்டுமே, Ketume - கேட்போம்
602நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 6
கண மா மயில்காள் கண்ணபிரான் திருக் கோலம் போன்று
அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்கு அடி வீழ்கின்றேன்
பண மாடரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள்
மண வாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே
கணம், Kanam - கூட்டமாயிருக்கிற
மா மயில்காள்!, Maa Mayilkaal - சிறந்த மயில்களே!
கண்ணபிரான், Kannapiraan - கண்ணபிரானுடைய
திருக்கோலம் போன்று, Thirukkolam pondru - அழகிய வடிவு போன்ற வடிவை யுடையீராய்க் கொண்டு
அணி மா நடம் பயின்று, Ani Maa Nadam Payindru - அழகிய சிறந்த நாட்டியத்திலே பழகி
ஆடுகின்றீர்க்கு, Aadukindreerku - ஆடுகின்ற உங்களுடைய
ஆடி, Aadi - திருவடிகளிலே
வீழ்கின்றேன், veezhkindren - ஸேவிக்கின்றேன் (இந்த ஆட்டத்தை நிறுத்துங்கள்)
பணம் ஆடு அரவு அணை, Panam aadu aravu anai - படமெடுத்து ஆடுகின்ற திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
பல்பல காலமும், Palpala kaalamum - காலமுள்ளதனையும்
பள்ளி கொள், Palli kol - பள்ளி கொண்டருளா நின்ற
மணவாளர், Manavaalar - அழகிய மணவாளப் பெருமாள்
நம்மை வைத்த பரிசு, Nammai vaitha parisu - எனக்கு உண்டாக்கித்தந்த லக்ஷணம்
இது காண்மின், Ithu kaanmin - இப்படி உங்கள் காலிலே விழும்படியான தாயிற்று
603நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 7
நடமாடித் தோகை விரிக்கின்ற மா மயில்காள் உம்மை
நடமாட்டம் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்
குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை
யுடைமாடு கொண்டான் உங்களுக்கு இனி ஓன்று போதுமே
நடம் ஆடி, Nadam aadi - கூத்தாடிக் கொண்டு
தோகை விரிக்கின்ற, Thokai virikkinra - தோகைகளை விரிக்கிற
மா மயில்காள், Maa Mayilkaal - சிறந்த மயில்களே!
உம்மை, Ummai - உங்களுடைய
நடம் ஆட்டம் காண, Nadam aatam kaana - கூத்தைப் பார்ப்பதற்கு
பாவியேன் நான், Paaviyen naan - பாவியேன நான்
ஓர் முதல் இலேன், Or mudhal ilen - கண்ணை யுடையேனல்லேன்
குடம் ஆடு கூத்தன், Kudam aadu koothan - குடக்கூத்தாடினவனான
கோவிந்தன், Govindhan - கோபாலக்ருஷ்ணன்
கோமிறை செய்து, Komirai seidhu - கேட்பாரற்ற மிறுக்குக்களைப் பண்ணி
எம்மை, Emmai - என்னை
உடை மாடு கொண்டான், Udai maadu kondan - ஸர்வ ஸ்வாபஹாரம் பண்ணினான்
இனி, Ini - இப்படி யிருக்க
ஒன்று, Ondru - (என் முன்னே கூத்தாடி என்னை ஹிம்ஸிக்கையாகிற) ஒரு காரியம்
உங்களுக்கு, Ungalukku - உங்களுக்கு
போதுமே, Podhume - தகுமோ?
604நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 8
மழையே மழையே மண் புறம் பேசி உள்ளாய் நின்ற
மெழுகூற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற
அழகப பிரானார் தம்மை யென்னெஞ்சகத்து அகப்பட
தழுவ நின்று என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே
மழையே மழையே!, Mazhaiye mazhaiye! - ஓ மேகமே!
புறம், Puram - மேற் புறத்திலே
ஊற்றும், ootrum - என்னை அணைந்து அந்தஸ் ஸாரமான ஆத்மாவை உருக்கி யழிப்பவராய்
நல் வேங்கடத்துள் நின்ற அழகப் பிரானார் தம்மை, Nal Vengadathul ninra azhaga piranar thammai - விலக்ஷணமான திருவேங்கடமலையிலே நிற்குமவரான அழகிய பெருமாளை
மண் பூசி, Man poosi - மண்ணைப் பூசி விட்டு
உள்ளாய் நின்ற மெழுகு ஊற்றினால் போல், Ullaai ninra mezhugu utrinaal pol - உள்ளே யிருக்கும் மெழுகை உருக்கி வெளியில் தள்ளுமா போலே
என் நெஞ்சந்து அகப்பட தழுவ நின்று, En nenjandhu agappada thazhuva ninru - என் நெஞ்சிலே ஸேவை ஸாதிக்கிறபடியே நான் அணைக்கும்படி பண்ணி
என்னை, ennai - என்னை
ததைத்துக் கொண்டு, thadhaithu kondu - அவரோடே நெருக்கி வைத்து (பிறகு)
ஊற்றவும் வல்லையே, ootravum vallaiye - வர்ஷிக்க வல்லையோ?
605நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 9
கடலே கடலே யுன்னைக் கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என்
நடலைகளை எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே
கடலே கடலே!, Kadale kadale! - ஓ கடலே!
உன்னை, Unnai - (தனக்குப் படுக்கை யிடமாக வாய்ந்த) உன்னை
கடைந்து, Kadainthu - (மலையை யிட்டுக்) கடைந்து
கலக்குறுத்து, Kalakkuruthu - கலக்கி
உடலுள் புகுந்து நின்று, Udalul pugundhu ninru - உனது சரீரத்திலே புகுந்திருந்து
ஊறல் அறுத்தவற்கு, Ooral aruthavarku - ஸாரமான அமுதத்தை அபஹரித்தவராய் (அவ்வாறாகவே)
என்னையும் உடலுள் புகுந்து நின்று, Ennaiyum udalul pugundhu ninru - என் உடலிலும் புகுந்திருந்து
ஊறல் அறுக்கின்ற, Ooral arukkinra - என் உயிரை அறுக்குமவரான
மாயற்கு, Maayarku - எம்பெருமானுக்கு (விண்ணப்பம் பண்ணும்படி)
என் நடலைகள் எல்லாம், En nadalaikal ellam - என் துக்கங்களை யெல்லாம்
நாக அணைக்கே, Naaga anaike - அவர் படுக்கையான திருவனந்தாழ்வானிடத்தில்
சென்று, Sendru - நீ போய்
உரைத்தியே, Uraithiye - சொல்லுவாயா? (சொல்ல வேணும் என்கை)
606நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 10
நல்ல வென் தோழீ நாகணை மிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே
என் நல்ல தோழி!, En nalla thozhi - எனது உயிர்த் தோழியே
நாக அணைமிசை, Naaga anaimisai - திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே சயனித்திருக்கிற
நம் பரர், Nam parar - நம் பெருமாள்
சிறு மானிடவர், Siru maanidavar - க்ஷுத்ர மநுஷ்யரா யிரா நின்றோம் (இப்படிப்பட்ட நாம்)
என் செய்வது, En seivadhu - என்ன செய்யலாம்?
வில்லி புதுவை விட்டுசித்தர், Villi pudhuvai vittuchithar - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு நிர்ஹகரான பெரியாழ்வார்
செல்வர், Selvar - பெருஞ்செல்வம் படைத்தவர்
பெரியர், Periyar - எல்லாரினும் மேற்பட்டவர்
நாம், Naam - நாமோ வென்றால்
தங்கள் தேவரை, Thangal dhevarai - தமக்கு விதேயரா யிருக்கிற அப் பெருமானை
வல்ல பரிசு, Valla parisu - தம்மால் கூடின வகைகளாலே
வருவிப்பரேல், Varuviparel - அழைப்பராகில்
அது காண்டும், Athu kaandum - அப்போது (அவனை) நாம் ஸேவிக்கப் பெறுவோம்
607நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 1
தாமுகக்கும் தங்கையில் சங்கமே போலாவோ
யாமுகக்கும் என் கையில் சங்கமும் ஏந்திழையீர்
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே
ஏந்து இழையீர்!, Endhu izhaeeyir - ஆபரணங்களை யணிந்துள்ள மாதர்களே!
யாம் உகக்கும் என் கையில் சங்கமும், Yaam ugakkum en kaiyil sangamum - நான் உகந்து தரித்துக் கொண்டிருக்கிற என் கையில் வளைகள்
தாம் உகக்கும் தம் கையில் சங்கம் போலாவோ, Thaam ugakkum tham kaiyil sangam polaavo - தான் உகந்து தரித்துக் கொண்டிருக்கிற தன்கையில் சங்கோடு ஒவ்வாதோ?
தீ முகத்து, Thee mukathu - க்ரூரமான முகங்களை யுடைய
நாக அணை மேல், Naaga anai mel - திருவனந்தாழ்வானாகிற படுகையின் மேலே
சேரும், Serum - பள்ளி கொண்டருளா நின்ற
திரு அரங்கர், Thiru arangar - ஸ்ரீரங்கநாதன்
முகத்தை, Mukathai - (என்னுடைய) முகத்தை
நோக்கார், Nokaar - நோக்குகின்றாரில்லை
ஆ!, Aa! - ஐயோ!
அம்மனே! அம்மனே!, Ammane! Ammane! - அந்தோ! அந்தோ!
608நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 2
எழில் உடைய அம்மனை மீர் என்னரங்கத்து இன்னமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர் எம்மானார் என்னுடைய
கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே
எழில் உடைய, Ezhil udaiya - அழகை யுடைய
அம்மனைமீர், Ammanaimir - தாய்மார்களே!
அரங்கத்து, Arangathu - திருவரங்கத்திலெழுந்தருளி யிருக்கிற
என் இன் அமுதர், En in Amudhar - என்னுடைய இனிய அமுதம் போன்றவராய்
குழல் அழகர், Kuzhal azhagar - அழகிய திருக் குழற் கற்றையை யுடையவராய்
வாய் அழகர், Vaay Azhagar - அழகிய திரு வதரத்தை யுடையவராய்
கண் அழகர், Kan Azhagar - அழகிய திருக் கண்களை யுடையவராய்
கொப்பூழில் எழு கமலம் பூ அழகர், Koppuzhil ezhu kamalam poo Azhagar - திருநாபியி லுண்டான தாமரைப் பூவாலே அழகு பெற்றவராய்
எம்மானார், Emmaanaar - எனக்கு ஸ்வாமியான அழகிய மணவாளர்
என்னுடைய, Ennudaiya - என்னுடைய
கழல் வளையை, kazhal valaiyai - “கழல்வளை“ என்று இடு குறிப் பெயர் பெற்ற கை வளையை
தாமும், thaamum - அவர் தாம்
கழல் வளையை ஆக்கினர், kazhal valaiyai aakinar - “கழன்றொழிகிறவளை“ என்று காரணப் பெயர் பெற்ற வளையாக ஆக்கினார்
609நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 3
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே
பொங்கு, Pongu - அலை யெறியா நின்றுள்ள
ஓதம், Odham - கடலாலே
சூழ்ந்த, Soozhndha - சூழப்பட்ட
புவனியும், Buvaniyum - இப் பூ மண்டலமும்
விண் உலகும், Vin ulagum - பரம பதமும்
ஆதும் சோராமே, Aathum sorame - சிறிதும் குறைவு படாதபடி
ஆள்கின்ற, Aalkinra - நிர்வஹித்துக் கொண்டு போருகிற
எம் பெருமான், Em perumaan - ஸ்வாமியாய்
செங்கோல் உடைய, Sengol udaiya - செங்கோல் செலுத்த வல்லவராய்
திரு அரங்கம் செல்வனார், Thiru arangam selvanaar - கோயிலிலே பள்ளி கொண்டிருப்பவரான மஹாநுபாவர்
என், En - என்னுடைய
கோல் வளையால், Kol valaiyaal - கை வளையாலே
இடர் தீர்வர் ஆகாதே, Idar theervar aagaadhe - தம் குறைகளெல்லாம் தீர்ந்து நிறைவு பெறுவரன்றோ (அப்படியே என் வளையைக் கொள்ளை கொண்டு அவர் நிறைவு பெற்று போகட்டும் என்றபடி)
610நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 4
மச்சணி மாட மதிள் அரங்கர் வாமனனார்
பச்சைப் பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற
பிச்சைக் குறையாகி என்னுடைய பெய் வளை மேல்
இச்சை யுடையரேல் இத்தெருவே போதாரே
மச்சு, Machu - மேல் தளங்களாலே
அணி, Ani - அலங்கரிக்கப் பட்ட
மாடம், Maadam - மாடங்களையும்
மதிள், Madhil - மதிள்களையுமுடைய
அரங்கர், Arangar - திருவரங்கத்திலே எழுந்தருளி யிருப்பவராய்
வாமனனார், Vaamananar - (முன்பு) வாமநாவதாரம் செய்தருளினவராய்
பச்சைப் பசுந்தேவர், Pachai Pachundhevar - பசுமை தங்கிய தேவரான பெரிய பெருமான்
தாம், Thaam - தாம்
பண்டு, Pandu - முன்பு (மஹாபலி யிடத்தில்)
நீர் ஏற்ற பிச்சை குறை ஆகி, Neer yetra Pichchai Kurai aagi - உதக தாரா பூர்வகமாகப் பெற்ற பிச்சையிலே குறை யுண்டாகி (அக்குறையைத் தீர்ப்பதற்காக)
என்னுடைய, Ennudaiya - என்னுடைய
பெய் வளை மேல், Pei Valai Mel - (கையில்) இடப்பட்டுள்ள வளை மேல்
இச்சை உடையர் ஏல், Ichai Udaiyar el - விருப்பமுடையவராகில்
இத் தெருவே, Ith Theruve - இத் தெரு வழியாக
போதாரே, Podhaare - எழுந்தருள மாட்டாரோ?
611நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 5
பொல்லாக் குறள் உருவாய் பொற் கையால்நீர் ஏற்று
எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே
பொல்லா குறள் உரு ஆய், Polla Kural Uru Aay - விலக்ஷண வாமந ருபியாய்
பொன் கையில், Pon Kaiyil - அழகிய கையாலே
நீர் ஏற்று, Neer Yetru - பிக்ஷை பெற்று
எல்லா உலகும், Ella Ulakum - ஸகல லோகங்களையும்
அளந்து கொண்ட, Alanthu Konda - தன் வசப் படுத்திக் கொண்ட
எம் பெருமான், Em Perumaan - ஸ்வாமியாய்
நல்லார்கள் வாழும், Nallaarkal Vaazhum - நன்மை மிக்க மஹான்கள் வாழ்கிற
நளிர் அரங்கம், Nalir Arangam - ஸர்வ தாப ஹரமான திருவரங்கத்தில்
நாக அணையான், Naaga Anaiyaan - திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையரான பெரிய பெருமாள்
இல்லாதோம், Illaadhom - அகிஞ்சநையான என்னுடைய
கைப் பொருளும், Kai Porulum - கைம் முதலான வஸ்துவையும் (சரீரத்தையும்)
எய்துவான் ஒத்து உளன், Eidhuvaan Othu Ulan - கொள்ளை கொள்வான் போலிரா நின்றான்
612நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 6
கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டார் காவிரிநீர்
செய் புரள வோடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே
காவிரி நீர், Kaveri Neer - காவேரியின் தீர்த்தமானது
செய் புரள ஓடும், Sey Purala oodum - பயிர் நிலங்களிலெலாம் ஓடிப் புரளும் படியான நீர் வளம் மிகுந்த
திரு அரங்கம், Thiru Arangam - திருவரங்கத்தில் எழுந்தருளி யிருக்கிற
செல்வனார், Selvanaar - ஸ்ரீமானாயும்
எப் பொருட்கும் நின்று, Epporutkum Nindru - எல்லாப் பொருள்களிலும் அந்தராத்மாவாய் நின்று
ஆர்க்கும் எய்தாது, Aarkum Eydhaadhu - ஒருவர்க்கும் கைப் படாமல்
நால் மறையின் சொல் பொருள் ஆய் நின்றார், Naal Maraiyin Sol Porul Aay Nindraar - நான்கு வேதங்களிலுள்ள சொற்களுக்கும் பொருளாய் நிற்பவருமான பெரிய பெருமாள்
முன்னமே, Munname - ஏற்கனவே
கைப் பொருள்கள், Kai Porulkal - கையிலுள்ள பொருள்களை யெல்லாம்
கைக் கொண்டார், Kaikondar - கொள்ளை கொண்டவராயிருந்து வைத்து (இப்போது)
என் மெய் பொருளும், En Mei Porulum - எனது சரீரமாகிற வஸ்துவையும்
கொண்டார், Kondaar - கொள்ளை கொண்டார்
613நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 7
உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்றபேதெல்லாம்
திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே நம்முடைய நன்மைகளே எண்ணுவரே
திண் ஆர் மதிள் சூழ, Thin Ar Mathil Soozha - (மஹா ப்ரளயத்துக்கும் அழியாதபடி) திண்மை பொருந்திய மதிள்களாலே சூழப்பட்ட
திரு அரங்கம், Thiru Arangam - கோயிலிலே எழுந்தருளியிருக்கிற
செல்வனார், Selvanaar - ச்ரிய யதியான பெருமாள் (ஸ்ரீராமனாய்த் திருவவதரித்த போது)
பெண் ஆக்கை, Pen Aakkai - சீதையென்சிற வொரு பெண்ணின் சரீரத்தில் ஆசைக்குக் கட்டுப்பட்டு
உண்ணாது, Unnaadhu - உண்ணாமலும்
உறங்காது, Urankaadhu - உறங்காமலும் (வருந்தி)
ஒலி கடலை, Oli Kadalai - (திரைக் கிளப்பத்தாலே) கோஷிக்கின்ற கடலை
ஊடு அறுத்து, Oodu Aruthu - இடையறும்படி பண்ணி (அணை கட்டி)
தாம் உற்ற, Thaam Utra - (இப்படி) தாம் அடைந்த
பேது எல்லாம், Pedhu Ellaam - பைத்தியத்தை யெல்லாம்
எண்ணாது, Ennaadhu - மறந்து போய் (இப்போது)
தம்முடைய, Thammudaiya - தம்முடைய
நன்மைகளே, Nanmaikale - பெருமைகளையே
எண்ணுவர்,Ennuvar - எண்ணா நின்றார்
614நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 8
பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே
பண்டு ஒரு நாள், Pandu Oru Naal - முன்னொரு காலத்தில்
பாசி தூர்த்து கிடந்த, Paasi Thoorthu Kidandha - பாசி படர்ந்து கிடந்த
பார் மகட்டு, Paar Magattu - ஸ்ரீ பூமிப் பிராட்டிக்காக
மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலா பன்றி ஆம், Maasu Udambil Neer Vaaraa Maanam Ila Panri Aam - அழுக்கேறின சரீரத்தில் ஜலம் ஒழுகா நிற்கும் ஹேயமான தொரு வராஹ வடிவு கொண்ட
தேசு உடைய தேவர், Dhesu Udaya Dhevar - தேஜஸ்ஸை யுடைய கடவுளாகிய
திரு அரங்கம் செல்வனார், Thiru Arangam Selvanaar - ஸ்ரீரங்கநாதன்
பேசி இருப்பனகள், Pesi Irupanakal - (முன்பு) சொல்லி யிருக்கும் பேச்சுக்களானவை
பேர்க்கவும் பேரா, Perkkavum Pera - (நெஞ்சில்நின்றும்) பேர்க்கப் பார்த்தாலும் பேர மாட்டாதவை
615நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 9
கண்ணாலம் கோடித்து கன்னி தன்னைக் கைபிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கை பிடித்து
பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே
கண்ணாலம் கோடித்து, Kannaalam Kodithu - கல்யாண ஸந்நாஹங்களை யெல்லாம் பரிஷ்காரமாகச் செய்து முடித்து
கன்னி தன்னை, Kanni Thannai - கல்யாணப் பெண்ணான ருக்மிணிப் பிராட்டியை
கை பிடிப்பான், Kai Pidipaan - பாணி க்ரஹணம் செய்து கொள்ளப் போவதாக
திண் ஆர்ந்து இருந்த, Thin Aarndhu Irundha - ஸம்சயமில்லாமல் நிச்சயமாக நினைத்திருந்த
சிசுபாலன், Sisubalan - சிசுபாலனானவன்
தேசு அழிந்து, Dhesu Azhinthu - அவமானப்பட்டு
அண்ணாந்திருக்க ஆங்கு, Annandhirukka aangu - ஆகாசத்தை நோக்கிக் கிடக்கும் படியாக நேர்ந்த அச் சமயத்திலே
அவளை, Avalai - அந்த ருக்மிணிப் பிராட்டியை
கை பிடித்த, Kai Piditha - பாணி க்ரஹணம் செய்தருளினவனாய்
பெண்ணாளன், Pennaalan - பெண்பிறந்தார்க் கெல்லாம் துணைவன் என்று ப்ரஹித்தனான பெருமான்
பேணும், Penum - விரும்பி எழுந்தருளி யிருக்கிற
ஊர், Oor - திவ்ய தேசத்தினுடைய
பேரும், Perum - திரு நாமமும்
அரங்கம், Arangam - திருவரங்கமாம்
616நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 10
செம்மை யுடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார்
தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே
செம்மை உடைய, Semmai Udaya - (மன மொழி மெய்கள் மூன்றும் ஒருபடிப் பட்டிருக்கை யாகிற) செம்மைக் குணமுடைய
திரு அரங்கர், Thiru Arangar - ஸ்ரீரங்கநாதர்
தாம் பணித்த, Thaam Panitha - (முன்பு) தம் வாயாலே அருளிச் செய்த
மெய்ம்மை, meimai - ஸத்யமானதும்
பெரு, peru - பெருமை பொருந்தியதுமான
வார்த்தை, vaarthai - சரம ச்லோக ரூபமான வார்த்தையை
விட்டு சித்தர், Vittu Chithar - (என் திருத் தகப்பனாரான) பெரியாழ்வார்
கேட்டு இருப்பர், Ketu Irupar - (குரு முகமாகக்) கேட்டுற (அதில் சொல்லி யிருக்கிறபடி) நிர்ப் பரராயிப்பர்
தம்மை உகப்பாரை தாம் உகப்பர் என்னும் சொல், Thammai Ukapaarai Thaam Ukapar Ennum Sol - “தம்மை விரும்பினவர்களைத் தாமும் விரும்புவர்“ என்ற பழமொழியனது
தம் இடையே, tham Idaiye - தம்மிடத்திலேயே
பொய் ஆனால், poi aanal - பொய்யாய்ப் போய் விட்டால்
இனி, ini - அதற்கு மேல்
சாதிப்பார் ஆர், saadhipar aar - (அவர் தம்தை) நியமிப்பார் ஆர்? (யாருமில்லை)
617நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 1
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின்
மற்று இருந்தீர்கட்கு, Matru Irundirgatku - என்னுடைய துணிவுக்கு மாறுபாடாக இருக்கின்ற உங்களுக்கு
அறியல் ஆகா, Ariyal Aaga - அறிய முடியாததாய்
மாதவன் என்பது ஓர் அன்பு தன்னை, Madhavan Enbathu Or Anbu Thannai - மாதவன் விஷயமான அபிநிவேசத்தை
உற்றிருந்தேனுக்கு, Utrirundhenuku - அடைந்திருக்கிற எனக்கு
உரைப்பது எல்லாம், Uraipathu Ellam - நீங்கள் சொல்லுவதெல்லாம்
ஊமையரோடு செவிடர் வார்த்தை, Oomaiyarodu Sevidar Vaarthai - ஊமையும் செவிடனுங் கூடி வார்த்தை சொல்லிக் கொள்வது போல் வீண் (இப்போது எனக்குச் செய்யத்தக்கது எதுவென்றால்)
புறத்து, Purathu - ஸமீப ப்ரதேசத்திலே
என்னை, Ennai - என்னை
பெற்றிருந்தாளை ஒழிய போய், Petrirunthalai Ozhiya poi - மெய் நொந்து பெற்ற தாயான தேவகியை விட்டொழிந்து
பேர்த்து ஒரு தாய் இல், Perthu oru thai il - வேறொரு தாயாகிய யசோதையின் க்ருஹத்திலே
வளர்ந்த, Valarndha - வளர்ந்தவனும்
மல் பொருந்தாமல் களம் அடைந்த, Mal Porundhaamal kalam adaindha - மல்ல யுத்த பூமியிலே மல்லர்கள் வந்து சேர்வதற்கு முன்னே தான் முற்பாடனாய்ப் போய்ச் சேர்த்திருப்பவனுமான
நம்பி, Nambi - கண்ண பிரானுடைய (நகரமாகிய)
மதுரை, Mathurai - மதுராபுரி யினுடைய
உய்த்திடுமின், Uythidumin - கொண்டு சேர்ந்து விடுங்கள்
618நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 2
நாணி யினியோர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க யுறுதிர் ஆகில்
மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்
இனி, Ini - இனி மேல்
நாணி, Naani - வெட்கப்பட்டு
ஓர் கரும்ம இல்லை, Or Karumam illai - ஒரு பயனுமில்லை (ஏனெனில்)
நால் அயலாரும், Naal ayalaarum - ஊரிலுள்ளாரெல்லாரும்
அறிந்தொழிந்தார், Arindhozhindhaar - (எனது செய்தியை) அறிந்து கொண்டார்கள்
பாணியாது, Paaniyadhu - காலதாமத மின்றி
மருந்து செய்து, Marundhu seidhu - வேண்டும் பரிஹாரங்களைச் செய்து
என்னை, Ennai - என்னை
பண்டு பண்டு ஆக்க உறுதிர் ஆகில், Pandu pandu aaka uruthir aakil - இப்போதைய விரஹாவஸ்தைக்கு முற்பட்டதான ஸம்ச்லேஷ தசைக்கும் முற்பட்டதான பகவத் விஷய வாஸனையையே அறியாத தசையிலிருந்த நிறத்தைப் பெற்றவளாகச் செய்ய நினைப்பீர்களாகில்
நீர், Neer - நீங்கள்
என்னை, Ennai - என்னை
ஆணையால், Aanaiyaal - ஸத்யமாக
காக்க வேண்டில் , Kaakka vendil - காப்பாற்ற விரும்புகிறீர்களாகில்
என்னை, Ennai - என்னை
ஆய்ப்பாடிக்கே, Aaypaadike - திருவாய்ப்பாடியிலே
உய்த்திடுமின், Uythidumin - கொண்டு சேர்த்து விடுங்கள்
மாணி உரு ஆய் உலகு அளந்த மாயனை காணில், Maani uru aay ulagu alandha maayanai kaanil - (மாவலியினிடத்தில்) வாமகரூபியாய்ச் சென்று (த்ரிவிக்ரமனாகி) உலகங்களை யெல்லாம் அளந்து கொண்ட பெருமானை ஸேவிக்கப்பெற்றால்
தலை மறியும், thalai mariyum - (இந்த நோயானது) தலை மடங்கும்
619நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 3
தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனி வழி போயினாள் என்னும் சொல்லு
வந்த பின்னைப் பழி காப்பரிது மாயவன் வந்து உருக்காட்டுகின்றான்
கொந்தளமாக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற
நந்த கோபாலன் கடைத் தலைக்கே நள்ளிருட்கண் என்னை யுய்த்திடுமின்
தந்தையும், Thandhaiyum - தகப்பனாரும்
தாயும், Thaayum - தாய்மாரும்
உற்றாரும், Utraarum - மற்றுமுள்ள உறவினரும்
நிற்க, Nirka - இருக்கும் போது
தனி வழி, Thani vazhi - (இவள்) தான் தோன்றியாகத் தெருவிலே புறப்பட்டாள் என்கிற வார்த்தையானது
வந்த பின்னை, Vandha pinnai - உலகில் பரவின பிறகு
பழிகாப்பு அரிது, Pazhikaapu aridhu - அப் பழியைத் தடுப்பது முடியாது (நான் தனி வழி போகாதிருக்கவும் முடியவில்லை ஏனென்றால்)
நந்த கோபாலன், Nandha Gopalan - நந்த கோபருடைய
கடைத் தலைக்கே, Kadai thalaikke - திரு மாளிகை வாசலிலே
மாயவன், Maayavan - ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையனான கண்ண பிரான்
வந்து, Vandhu - எதிரே வந்து
உரு காட்டுகின்றான், Uru kaatukinraan - தன் வடிவைக் காட்டி இழுக்கின்றானே (இப்போது நீங்கள் செய்ய வேண்டிய தென்ன வென்றால்)
கொந்தளம் ஆக்கி பரக்கழித்து குறும்பு செய்வான் ஓர் மகனை பெற்ற, Kondhalam aaki parakazhithu kurumbu seivaan or maganai petra - (பெண்களைக்) குடிகெடுத்துக் குறும்பு செய்யும் பிள்ளையைப் பெற்றவனான
நள்ளிருட் கண், Nallirut kan - நடு நிசியிலே
என்னை உய்த்திடுமின், Ennai uythidumin - என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள்
620நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 4
அங்கைத் தலத்திடை யாழி கொண்டானவன் முகத்தன்றி விழியேன் என்று
செங்கச்சுக் கொண்டு கண்ணாடை யார்த்துச் சிறு மானிடவரைக் காணில் நாணும்
கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்
அம் கைத்தலத்திடை, Am kaithalathidai - அழகிய திருக்கைத் தலத்திலே
ஆழி கொண்டானவன், Aazhi kondaanavan - திரு வாழியை ஏந்தி யிருப்பவனான பிரானுடைய
முகத்து அன்றி விழியேன் என்று, Mugathu andri vizhiyen endru - முகத்தில் தவிர (மற்ற பேருடைய முகத்தில்) விழிக்க மாட்டேனென்று
செம் கச்சு ஆடை கொண்டு, Sem kachu aadai kondu - நல்ல கஞ்சுகமாகிற ஆடையினாலே
கண் ஆர்த்து, Kan aarthu - கண்களை மூடிக் கொண்டு
சிறு மானிட வரை காணில் நானும், Siru maanida varai kaanil naanum - க்ஷுத்ர மநுஷ்யர்களைக் கண்டால் வெட்கப்படா நின்ற
கொங்கைத் தலம் இவை, Kongai thalam ivai - இக் கொங்கைகளை
நோக்கி காணீர், Nokki kaaneer - (தாய்மார்களே!) நீங்கள் உற்று நோக்குங்கள் (இக் கொங்கைகளானவை)
கோவிந்தனுக்கு அல்லால், Govindhanuku allaal - கண்ண பிரானைத் தவிர்த்து
வாயில் போகா, Vaayil pogaa - மற்றொருவடைய வீட்டு வாசலை நோக்க மாட்டா (ஆகையாலே)
இங்குத்தை வாழ்வை ஒழிய போய், Inguthai vaazhvai ozhiya poi - நான் இவ்விடத்திலே வாழ்வதை யொழித்து
என்னை எமுனை கரைக்கு உய்த்திடுமின், Ennai Yamunai karaiku uythidumin - என்னை யமுநா நதிக் கரையிலே கொண்டு போட்டு விடுங்கள்
621நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 5
ஆர்க்கும் என் நோய் இது அறியல் ஆகாது அம்மனைமீர் துழிதிப் படாதே
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் கைக் கண்ட யோகம் தடவத் தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்
அம்மனைமீர், Ammanaimir - தாய்மார்களே!
என், En - என்னுடைய
இது நோய், Idhu noi - இந்த வியாதியானது
ஆர்க்கும், Aarkum - எப்படிப்பட்ட ஞானிகளுக்கும்
அறியல் ஆகாது, Ariyal aagadhu - அறிய முடியாது (ஆனால்)
துழதிப்படாதே, Thuzathipadaathe - (இது அப்படிப்பட்ட நோயா! என்று) நீங்கள் துக்கப்படாமல்
நீர் கரை நின்ற, Neer karai nindra - காளிங்க மடுவின் கரையிலிருந்த
கடம்பை ஏறி, Kadampai eri - கடம்ப மரத்தின் மேல் ஏறி (அங்கிருந்து)
காளியன் உச்சியில், Kaaliyan uchchiyil - காளிய நாகத்தின் படத்தின் மேலே
நட்டம் பாய்ந்து, Nattam paainthu - ஒரு நர்த்தன வகையாகப் பாய்ந்து
போர் களம் ஆக, Por kalam aaga - அப்பொய்கை தானே யுத்தக் களமாம்படியாக
நிருத்தம் செய்த, Niruththam seydha - நர்த்தனம் செய்யப் பெற்ற
பொய்கை கரைக்கு, Poigai karaikku - மடுவின் கரையிலே
என்னை உய்த்திடுமின், Ennai uythidumin - என்னைக் கொண்டு போய்ப் போடுங்கள்
கார் கடல் வண்ணன் என்பான் ஒருவன், Kaar kadal vannan enbaan oruvan - நீலக் கடல் போன்ற திரு நிறத்தனான கண்ணபிரான்
தடவ, Thadava - (தனது திருக் கைகளால் என்னைத்) தடவுவானாகில்
தீரும், theerum - (இந் நோய்) தீர்ந்து விடும்
கை கண்ட யோகம், Kai kanda yogam - (இது தான்) கை மேலே பலிக்கக் கூடிய உபாயம்
622நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 6
கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடுகின்றன வென்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே யென்று
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின்
கார், Kaar - வர்ஷா காலத்தி லுண்டான
தண், Than - குளிர்ந்த
முகிலும், Mukilum - மேகமும்
கருவிளையும், Karuvilaiyum - கருவிளைப் பூவும்
காயா மலரும், Kaayaa malarum - காயம் பூவும்
கமலம் பூவும், Kamalam poovum - தாமரைப் பூவுமாகிற இவைகள்
வந்திட்டு, Vanditu - எதிரே வந்து நின்று
இருடீகேசன் பக்கல் போகு என்று என்னை ஈர்த்திடுகின்றன, Irudeekesan pakkal poku endru ennai eerthidukirana - “கண்ணபிரான் பக்கலில் நீயும்போ“ என்று என்னை வலிக்கின்றன (ஆகையாலே)
வேர்த்து, Verthu - பசுமேயக்கிற ச்ரமத்தாலே வேர்வை யடைந்து
பசித்து, Pasithu - பசியினால் வருந்தி
வயிறு அசைந்து, Vayiru asaindhu - வயிறு தளர்ந்து
வேண்டு அடிசில் உண்ணும் போது ஈது என்று, Vendu adisil unnum podhu eethu endru - வேண்டிய ப்ரஸாதம் உண்ண வேண்டிய காலம் இது என்று
பார்த்திருந்து, Parthirundhu - (ரிஷி பத்னிகளின் வரவை) எதிர்பார்த்திருந்து
நெடு நோக்குக் கொள்ளும், Nedu nokku kollum - நெடுங்காலம் கடாக்ஷித்துக் கொண்டிருக்குமிடமான
பத்தவிலோசனத்து, Pathavilosanathu - பக்தவிலோச்நமென்கிற ஸ்தானத்திலே
உய்த்திடுமின், Uythidumin - (என்னைக்) கொண்டு சேர்த்து விடுங்கள்
623நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 7
வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானமிலாமையும் வாய் வெளுப்பும்
உண்ணல உறாமையும் உள் மெலிவும் ஓத வண்ணன் என்பான் ஒருவன்
தண்ணம் துழாய் எனும் மாலை கொண்டு சூட்டத் தணியும் பிலம்பன் தன்னை
பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை யுய்த்திடுமின்
வண்ணம் திரிவும், Vannam thirivum - (என்னுடைய) மேனி நிறத்தின் மாறுபாடும்
மனம் குழைவும், Manam kuzhaivum - மனத் தளர்ச்சியும்
உண்ணல் உறாமையும், Unnal uraamaiyum - ஆஹாரம் வேண்டியிராமையுமும்
உள் மெலிவும், Ul melivum - அறிவு சுருங்கிப் போனதுமாகிய இவை யெல்லாம் (எப்போது தணியுமென்றால்)
ஓதம் நீர் வண்ணன் என்பான் ஒருவன், Odham neer vannan enbaan oruvan - கடல் வண்ண னென்று ப்ரஸித்தனாய் விலக்ஷணனான கண்ண பிரானுடைய
தண் அம்துழாய் என்னும் மாலை கொண்டு சூட்ட, Than amthuzhai enum maalai kondu soota - குளிர்ந்து அழகிய திருத்துழாய் மாலையைக் கொண்டு வந்து சூட்டுமளவில்
தணியும், Thaniyum - நீங்கும் (அத்திருத்துழாய் மாலை உங்களால் இங்கே கொண்டு வந்து கொடுக்க முடியாதாகில்)
மானம் இலாமையும், Maanam ilaamaiyum - மானம் கெட்டுப் போனபடியும்
வாய் வெளுப்பும், Vaai veluppum - வாய் வெளுத்துப் போனபடியும்
பலதேவன், Paladhevan - பலராமன்
பிலம்பன் தன்னை, Pilamban thanai - ப்ரலம்பாஸுரனை
பண் அழிய, pan azhiya - ஸந்தி பந்தங்கள் உருக் குலையும்படி
வென்ற, Vendra - கொன்று முடித்த இடமாகிய
பாண்டீரமென்னும், paandiramenum - பாண்டி வடத்து ஆலமரத்தினருகில்
என்னை உய்த்துடுமின், Ennai uythidumin - என்னைக் கொண்டு போய்ச் சேர்த்திடுங்கள்
624நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 8
கற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
பற்றி உரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கோலோ
கற்றன பேசி வசவு உணாதே காலிகளுய்ய மழை தடுத்த
கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின்
கன்று இனம், Kanru inam - கன்றுகளின் திரள்கைள
மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான், Meykkalum meykka petran - மேய்ப்பதையே தொழிலாகப் பெற்றவனுமானான
காடு வாழ் சாதியும் ஆக பெற்றான், Kaadu vaazh saathiyum aaga petran - (வீட்டை விட்டுக் கழிந்து) காட்டிலேயே தங்கி வாழும்படியான சாதியிலும் பிறக்கப் பெற்றான்
பற்றி, patri - வெண்ணெய் களவில் பிடிபட்டு
உரலிடை, Uralidai - உரலிலே
ஆப்பும் உண்டான், aapum undaan - கட்டுப்படவும் பெற்றான் (ஸௌலப்ய காஷ்டையான இச் செயல்கள்)
பாலிகாள், Paalikaal - குணத்தையும் குற்றமாகக் கொள்ளும் பாவிகளே!
உங்களுக்கு, Ungalukku - உங்களுக்கு
ஏச்சுக் கொலோ, echchu kolo - தூஷணத்துக்கோ உடலாயிற்று? (இதுவரையில் நீங்கள் இழிவாகச் சொன்னவை நிற்க இனியாகிலும்)
கற்றன பேசி வசவு உணாதே, Katrana pesi vasavu unaadhe - நீங்கள் கற்ற கல்விகளைப் பேசி (என்னிடத்தில்) வசவு கேட்டுக் கொள்ளாமல்
காலிகள் உய்ய மழை தடுத்து, Kaaligal uyya mazhai thaduthu - பசுக்கள் பிழைக்கும்படி பெரு மழையைத் தடை செய்து
கொற்றம் குடை ஆக, Kotram kudai aaga - வெற்றிக் குடையாக
ஏந்தி நின்ற, endhi nindra - (கண்ண பிரனால்) தரிக்கப்பட்ட
கோவர்தனத்து, Govardhanathu - கோவர்த்தன மலையினருகே
என்னை உய்த்திடுமின், Ennai uythidumin - என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள்
625நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 9
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் தலைப் பழி எய்தி உங்கள் நமனை இழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்
கிளி, kili - (நான் வளர்த்த) கிளியானது
கூட்டில் இருந்து, kootil irundhu - கூட்டில் இருந்து கொண்டு
எப்போதும், epodhum6 - ஸதா காலமும்
கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும், Govindhaa govindhaa endru azhaikkum - கோவிந்தா கோவிந்தா வென்று கூவா நின்றது
ஊட்டு கொடாது, Ootu kodaadhu - உணவு கெடாமல் (பட்டினி கிடக்கும்படி)
செறுப்பன் ஆகில், Serupan aagil - துன்பப் படுத்தினேனாகில்
உலகு அளந்தான் என்று, Ulagu alandhaan endru - உலகளந்த பெருமானே! என்று
உயர கூவும், Uyara koovum - உரக்கக் கூவா நின்றது! (இந்தத் திருநாமங்கள் என் காதில் விழும் போதே என் சரீரம் புறப்படக் கிளம்புகின்றது ஆகையால்)
நாட்டில், Naatil - இவ் வுலகில்
தலை பழி எய்தி, Thalai pazhi eythi - பெருத்த அபவாதத்தை ஸம்பாதித்து
உங்கள் நன்மை இழந்து, Ungal nanmai izhandhu - உங்களுடைய நல்ல பேரைக் கெடுத்துக் கொண்டு
தலை இடாதே, Thalai idaathe - (பிறகு ஒருவரையும் முகம் நோக்க மாட்டாமல்) தலை கவிழ்ந்து நிற்க வேண்டாதபடி
சூடு உயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும், Soodu uyar maadangal soozhndhu thondrum - தலை யுயர்ந்த மாடங்களால் சூழப்பட்டு விளங்குகின்ற
துவராபதிக்கு, Thuvarapadhikku - த்வாரகையிலே
என்னை உய்த்திடுமின், Ennai uythidumin - என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள்
626நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 10
மன்னு மதுரை தொடக்கமாக வண் துவாராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சிதன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே
தாழ் குழலாள், Thaazh kuzhalaal - தாழ்ந்த கூந்தலை யுடையளாய்
பொன் இயல்மாடம் பொலிந்துதோன்றும் புதுவையாகோன் விட்டு சித்தன் கோதை, Pon iyalmaadam polindhu thondrum Pudhuvaiyaakon Vittu chithan kodhai - பொன் மயமான மாடங்களினால் விளங்கித் தோன்றுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளார்க்குத் தலைவராகிய பெரியாழ்வாருடைய (திருமகளான) ஆண்டாள்
மன்னு மதுரை தொடக்கம் ஆக வண் துவராபதி தன் அளவும் தன்னை, Mannu mathurai thodakkam aaga van Thuvarapathi than alavum thanai - ஸ்ரீமதுரை முதற்கொண்டு ஸ்ரீத்வாரகை வரைக்கும் (சொல்லப்பட்ட சில திவ்யதேசங்களில்) தன்னை (ஆண்டாளை)
தமர், Thamar - தன் உறவினர்
உய்த்து பெய்ய வேண்டி, Uythu peiya vendi - கொண்டு போய்ச் சேர்க்க வேண்டி
துணிந்த துணிவை, Thunindha thunivai - கொண்ட அத்யவஸாயம் விஷயமாக
இன் இசையால் சொன்ன, In isaiyaal sonna - இனிய இசையுடன் அருளிச் செய்த
செம் சொல் மாலை, Sem sol maalai - அழகிய சொல்மாலை யாகிய இத்திருமொழியை
ஏத்த வல்லார்க்கு, Etha vallaarku - ஓத வல்லவர்களுக்கு
இடம், Idam - வாழுமிடம்
வைகுந்தம், Vaikundham - பரமபதமேயாம்
627நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 1
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப் பெய்தால் போலப் புறநின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே
கண்ணன் என்னும், Kannan enum - ஸ்ரீக்ருஷ்ணனென்கிற
கரு தெய்வம், Karu dheivam - கரியதொரு பரதேவதையினுடைய
காட்சி, Kaatchi - காட்சியிலே
பழகி கிடப்பேனே, Pazhagi kidapene - பழகிக் கிடக்கிற என்னைக் குறித்து (ஓ! தாய்மார்களே! நீங்கள்)
புறம் நின்று, Puram nindru - அசலாக இருந்து கொண்டு
புண்ணில் புளி பெய்தால் போல, Punnil puli peidhal pol - புண்ணிலே புளி ரஸத்தைச் சொரிந்தாற்போல்
அழகுபேசாதே, Azhagu pesadhe - பணிக்கை சொல்வதைத் தவிர்ந்து,
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில், Pennin varutham ariyaadha Perumaan araiyil - பெண் பிறந்தாருடைய வருத்தத்தை அறியாதவனான கண்ணபெருமானுடைய திருவரையில் சாத்திய
பீதக வண்ணம் ஆடை கொண்டு, Peedhaga vannam aadai kondu - பீதாம்பரத்தைக் கொண்டுவந்து
வாட்டம் தணிய, Vaatam thaniya - (என்னுடைய) விரஹ தாபம் தீரும்படி
என்னை வீசீரே, Ennai veeseere - என்மேல் வீசுங்கள்
628நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 2
பாலாலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனை
வேலால் துன்பம் பெய்தால் போல் வேண்டிற்றெல்லாம் பேசாதே
கோலால் நிரை மேய்ந்தாயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி
நீலார் தண்ணம் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டீரே
பால் ஆலிலையில், Paal aalilaiyil - பால் பாயும் பருவத்தை யுடைய ஆலந்தளிரிலே
துயில் கொண்ட, Thuyil konda - கண் வளர்ந்தருளின
பரமன், Paraman - பெருமானுடைய
வலை, Valai - வலையிலே
பட்டிருந்தேனை, Patirundhenai - அகப்பட்டுக் கொண்டிருக்கிற என்னைக் குறித்து
வேலால் துன்னம் பெய்தால் போல், Velaal thunnam peydhal pol - வேலாயுதத்தை யிட்டுத் துளைத்தாற்போல் (கொடுமையாக)
வேண்டிற்று எல்லாம் பேசாதே, Venditru elam pesadhe - உங்களுக்குத் தோன்றின படி யெல்லாம் சொல்வதைத் தவிர்ந்து
ஆயன் ஆய், Aayan aay - இடைப் பிள்ளையாய்
கோலால், Kolaal - (இடைச் சாதிக்கு உரிய) கோலைக் கொண்டு
நிரை மேய்த்து, Nirai meithu - பசுக் கூட்டங்களை மேய்த்தவனாய்
குடந்தை கிடந்த, Kudandhai kidandha - திருக் குடந்தையில் திருக் கண்வளர்ந்தருளுமவனாய்
குடம் ஆடி, Kudam aadi - குடக் கூடத்தாடினவனுமான கண்ணபிரானுடைய
நீல்ஆர் தண்அம் துழாய் கொண்டு, Neelaar thanam thuzhaai kondu - பசுமை பொருந்திக் குளிர்ந்து அழகிய திருத் துழாயைக் கொண்டு வந்து
நெறி மென், Neri men - நெறிப்புக் கொண்டதாயும் மிருதுவாயு மிருந்துள்ள
என் குழல்மேல், En kuzhalmel - என் கூந்தலிலே
சூட்டீர், Chooteer - சூட்டுங்கள்
629நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 3
கஞ்சைக் காய்ந்த கரு வில்லி கடைக் கண்ணி என்னும் சிறைக் கோலால்
நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வணிந்த வனமாலை
வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே
கஞ்சை, Kanjai - கம்ஸனை
காய்ந்த, Kaayndha - தொலைத்தவனாயும்
கரு வில்லி, Karu villi - பெரியவில் போன்ற புருவத்தை யுடைனாயு மிருக்கிற கண்ண பிரானுடைய
கடைக்கண் என்னும், Kadaikkan enum - கடைக் கண்ணாகிற
சிறை கோலால், Sirai kolaal - சிறகையுடைய அம்பாலே
நெஞ்சு ஊடுருவ, Nenju ooduruva - நெஞ்சமுழுதும்
வேவுண்டு, Vevundu - வெந்து போம்படியாகப் பெற்று
நிலையும் தளர்ந்து, Nilaiyum thalarndhu - நிலைமை குலைந்து
நைவேனை, Naivenai - வருந்துகின்ற என்னை நோக்கி
அஞசேல் என்னானவன் ஒருவன், Anjel enaanavan oruvan - “பயப்படாதே“ என்றொரு வார்த்தையும் சொல்லாதவனாய் விஜாதீயனான
அவன், Avan - அப்பெருமான்
மார்வு அணிந்த, Maarvu anindha - (தனது) திருமார்பில் சாத்தி யருளின
வன மாலை, Vana maalai - வன மாலையை
வஞ்சியாதே, Vanjiyaadhe - மோசம் பண்ணாமல்
தரும் ஆகில், Tharum aagil - கொடுத்தருள்வனாகில்
கொணர்ந்து, Konarndhu - (அம் மாலையைக்) கொண்டு வந்து
மார்வில், Maarvil - (என்னுடைய) மார்பிலே
புரட்டீர், purateer - (நெஞ்சினுள் வெப்பம் தீருமாறு) புரட்டுங்கள்
630நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 4
ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
காரேறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய
நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே
ஆயர்பாடி, Aayarpaadi - திருவாய்ப்பாடி முழுவதையும்
கவர்ந்து உண்ணும், Kavarnthu unnum - கொள்ளை கொண்டு அநுபவிக்கிற
கார் ஏறு, Kaar yeru - ஒரு கறுத்த காளை போன்ற கண்ணன்
உழக்க, Uzhakka - ஹிம்ஸிக்க
உழக்குண்டு, Uzhakkundu - (அதனால்) துன்பப்பட்டு
தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை, Thalarndhum murindhum kidapenai - பலவகையான் சைதில்யங்களை யடைந்து நொந்து கிடக்கிற என்னை
உலகத்து, Ulagathu - இவ் வுலகத்திலே
ஆற்றுவர், Aatruvar - தேறுதல் சொல்லி ஆறச் செய்பவர்
ஆரே, Aare - ஆருண்டு (யாருமில்லை)
ஆரா அமுதம் அனையான் தன், Aara amutham anaiyaan than - எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி பிறவாத
அம்ருதம் போன்ற கண்ணபிரான் உடைய

அமுதம் வாயில், Amutham vaayil - அம்ருதம் சுரக்கிற திரு வாயிலே
ஊறிய, ooriya - ஊறிக் கிடக்கிற
நீர் தான், neer thaan - ரசத்தை யாவது
புலராமே கொணர்ந்து, Pularaame konarndhu - உலராமல் பசையோடு கொண்டு வந்து
பருக்கி, Parukki - அதை நான் பருகும்படி பண்ணி
இளைப்பை நீக்கீரே, ilaippai neekeere - எனது ஆயாசத்தை பரிஹரிக்கப் பாருங்கோள் (என்கிறாள்)
631நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 5
அழிலும் தொழிலும் உருக்காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
தழுவி முழுகிப் புகுந்து என்னைச் சுற்றுச் சுழன்று போகானால்
தழையின் பொழில் வாய் நிரைப்பின்னே நெடுமாலூதி வருகின்ற
குழலின் துளை வாய் நீர் கொண்டு குளிர முகத்துத் தடவீரே
அழிலும் , Azhilum - அழுதாலும்
தொழிலும் , Thozhilum - தொழுதாலும்
உருக்காட்டான் , Urukatan - தன் வடிவைக் காட்டாதவனாயும்
அஞ்சேல் என்னானவன், Anjel Ennaanavan - உருவைக் காட்டாவிடினும் “அஞ்சேல்“ என்ற சொல்லும் சொல்லாதவனாயுமுன்ள
ஒருவன் , Oruvan - ஒரு மஹாநுபாவன் (கண்ணன்)
புகுந்து , Pugundhu - இங்கே வந்து
என்னை தழுவி முழுசி , Ennai thazhuvi muzhusi - என்னை நெருக்கி யணைத்து
சுற்றி சுழன்று , Sutri suzhandru - முன்னும் பின்னும் சூழ்ந்து கொண்டிருந்து
போகான், Pogaan - போகாமலிருக்கான்
ஆல்!, aal! - இது உண்மையான அநுபவமல்லாமல் மாநஸாநுபவ மாத்ரமான உரு வெளிப்பாடாகையாலே துக்கம்
தழையின் பொழில் வாய் , Thazhayin pozhil vaai - பீலிக் குடைகளாகிற சோலையின் கீழே
நிரை பின்னே ,nirai pinne - பசுக் கூட்டங்களின் பின் புறத்திலே
நெடு மால் , Nedu maal - வ்யாமுத்தனான கண்ண பிரான்
ஊதி வருகின்ற , Oodhi varuginra - ஊதிக் கொண்டு வரப் பெற்ற
குழலின் துளைவாய் , Kuzhalin thulaivai - புல்லாங்குழலின் த்வாரங்களிலுண்டாகிற
நீர் கொண்டு , Neer kondu - நீரைக் கொணர்ந்து
முகத்து, Mukathu - என்னுடைய முகத்திலே
குளிர தடவீர், kulira tadaveer - குளிர்த்தியாகத் தடவுங்கள்
632நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 6
நடை யொன்றில்லா வுலகத்து நந்த கோபன் மகன் என்னும்
கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு
புடையும் பெயரகில்லேன் நான் போட்கன் மிதித்த வடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா யுயிர் என்னுடம்பையே
நடை ஒன்று இல்லா உலகத்து , Nadai ondru illa ulagathu - (ஏற்கனவே) மரியாதைகளெல்லாம் குலைந்து கிடக்கிற இவ் வுலகத்தில்
நந்தகோபன் மகன் என்னும் , Nandhagopan magan ennum - ஸ்ரீநந்த கோபர் மகன் என்று ப்ரஸித்தனாய்
கொடி ,Kodi - இரக்க மற்றவனாய்
கடிய , Kadiya - ஸ்வார்த்த பரனான
திருமாலால் , Thirumaalaal - ச்ரிய: பதியாலே (கண்ணனாலே)
நான் , Naan - அபலையான நான்
குளப்புக்கூறு கொளப்பட்டு , Kulapukkuru kolapattu - மிகவும் துன்பப் படுத்தப் பட்டு
புடை பெயரவும் கில்லேன் , Pudai peyaravum kilen - அப்படி இப்படி அசைவதற்கும் அசக்தை யாயிரா நின்றேன் (ஆன பின்பு)
போட்கன் , Potkan - சுணை கேடனான அக் கண்ண பிரான்
மிதித்த அடிப்பாட்டில் , Midhitha adipaatil - திருவடி பட்டு மிதித்த இடத்திலுண்டான
பொடி தான் , Podi thaan - ஸ்ரீபாத தூளியை யாவது
கொணர்ந்து , Konarndhu - கொண்டு வந்து
போகா உயிர் என் உடம்பை பூசீர்கள் , Poga uyir en udambai pooseergal - வீட்டுப் பிரியாத வுயிரை யுடைய என் உடம்பிலே பூசுங்கள்
633நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 7
வெற்றிக் கருளக் கொடியான் தன் மீ மீ தாடா வுலகத்து
வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பேயாக வளர்த்தாளே
குற்றமற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு
அற்ற குற்றமவை தீர அணைய வமுக்கிக் கட்டீரே
கருளன் வெற்றி கொடியான் தன் மீது ஆடா உலகத்து , Karulan vetri kodiyaan than meedhu aadaa ulagathu - பெரிய திருவடியை வெற்றிக் கொடியாக வுடைய எம்பெருமானுடைய ஆணையை மீறிச் செல்லக் கடவதல்லாத இவ்வுலகத்தில் (எம்பெருமானுடைய ஆணைக்கு உட்பட்டதான இவ்வுலகத்தில்)
பெற்ற தாய் , Petra thaai - அவனைப் பெற்ற தாயாகிய யசோதையானவள் (தனது புத்திரனை)
வெற்ற வெறிதே , Vetra verithe - ஒருவர்க்கும் பயனின்றியே (பயனில்லை யென்கிற மாத்திரமேயோ?)
வேம்பு ஆகவே , Vembu aagave - வேப்பங்காய் போல் வைக்கும் படியாகவே
வளர்த்தான் , Valarthaan - வளர்த்து வாரா நின்றான்
குற்றம் அற்ற , Kutram atra - (அவனைத் தவிர்த்து வேறொருவன் விரும்புகையாகிற) குற்றம் இல்லாத
முலை தன்னை , Mulai thannai - (என்னுடைய) ஸ்தநங்களை
குமரன் , Kumaran - யௌவனத்தோடு தோள் தீண்டியான அப் பெருமானுடைய
கோலம் பணைதோளோடு , Kolam panaitholodu - அழகியதாயும் கற்பகக்கிளை போன்ற தாயுமுள்ள திருத் தோள்களோடே
அற்ற குற்றம் அவை தீர , Atra kutram avai theera - (என்னைக் கை விட்டு) அவற்றுக்கே அற்றுத் தீர்ந்த குற்றம் தீரும்படி
அணைய அமுக்கி கட்டீர் , Anaiya amuki kateer - அமுக்கி யணைத்துக் கட்டி விடுங்கள்
634நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 8
உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனை கோவர்த்த நனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என்னழலைத் தீர்வேனே
உள்ளே உருகி நைவேனை, ulle Urugi Naivenai - உள்ளுக்குள்ளேயே கரைந்து நைந்து போகிற என்னைப் பற்றி
உளளோ இலளோ என்னாத, Ullalo Ilalo Enadha - “இருக்கிறாளா? செத்தாளா?“ என்றும் கேளாதவனாய்
கொள்ளை கொள்ளி, Kollai Kolli - என் ஸர்வஸ்வத்தையும் அபஹரித்துக் கொண்டவனாய்
குறும்பனை, Kurumbanai - (பெண்கள் திறத்திலே) பொல்லாங்கு செய்யுமவனான
கோவர்த்தனனை, Govarthananai - கண்ணபிரானை
கண்டக்கால், Kandakkaal - (ஒருகால்) நான் காணப் பெற்றேனாகில்
கொள்ளும் பயன் ஒன்று இல்லாத, Kollum Payan Ondru Illadha - (ஆட்டுக் கழுத்தல் முலை போலே) உபயோக மற்றதான
கொங்கை தன்னை, Kongai Thannai - (என்னுடைய இந்த) முலையை
கிழங்கோடும் அள்ளி பறித்திட்டு, Kizhangodum Alli Parithitu - வேர் முதலோடே பற்றிப் பிடுங்கி
அவன் மார்வில் எறிந்து, Avan Maarvil Erindhu - அந்த க்ருஷ்ணனுடைய மார்பிலே எறிந்து விட்டு
என் அழலை, En Azhalai - என் துக்கத்தை
தீர்வேன், theerven - போக்கிக் கொள்ளப் பெறுவேன்
635நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 9
கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் செய்யும் தவம் தான் என்
செம்மையுடைய திருமார்வில் சேர்த்தான் ஏலும் ஒரு நான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே
கொம்மை முலைகள், Kommai Mulaigal - (எனது) கிளர்ந்த பருத்த முலைகளினுடைய
இடர் தீர கோவிந்தற்கு ஓர குற்றவேல், Idar Theera Govindharku Ora Kutravel - குமைச்சல் தீரும்படி கண்ணபிரானுக்கு அந்தரங்கமான கைங்கரியத்தை
செம்மை உடைய திருமார்விலே, Semmai Udaiya Thirumaarvile - (அன்பர்கள் அணைவதற்கென்றே ஏற்பட்டிருக்கையாகிற) செவ்வையை யுடைத்தான் (தனது) திருமார்பிலே
சேர்த்தானேலும், Serthaanelum - (என்னை அவன்) சேர்த்துக் கொண்டானாகில்
நன்று, Nandru - நல்லது
ஒரு நான்று, Oru Naandru - ஒரு நாள்
இம்மைப் பிறவி செய்யாதே இனி போய், Immai Piravi Seyaadhe Ini Poi - இந்த ஜன்மத்திலே செய்யப் பெறாமல் இந்தப் பிறவி கழிந்த பின்பு வேறொரு தேச விசேஷத்திலே போய்
செய்யும், Seiyum - செய்யக் கூடியதான
தவந்தான் ஏன்?, Thavandhaan Yen? - தபஸ்ஸு ஏதுக்கு?
முகம் நோக்கி, Mugam Nokki - என் முகத்தைப் பார்த்து
மெய்ம்மை சொல்லி, Meimmai Solli - மெய்யே சொல்லி
விடை தான் தருமேல், Vidai Thaan Tharumel - “நீ எனக்கு வேண்டாம்போ“ எனறு தள்ளி விட்டமை தோன்ற விடை கொடுப்பானாகில்
மிக நன்று, Miga Nandru - அது உத்தமோத்தமம்
636நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 10
அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே
வில்லை துலைத்த, Villai Thulaitha - வில்லைத் தோற்கடித்த
புருவத்தாள், Puruvathaal - புருவங்களை யுடையளாய்
வில்லி புதுவை நகர் நம்பி விட்டு சித்தன் வியன் கோதை, Villi Puthuvai nagar Nambi Vittu Chithan Viyan Kodhai - ஸ்ரீவில்லி புத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய மகளாய் ஆச்சர்ய குணசாலிநியான ஆண்டாள்
அல்லல் விளைத்த பெருமானை, Allal Vilaitha Perumaanai - (திருவாய்ப் பாடி முழுதும்) தீங்கு விளைத்து அதனால் பெருமை பெற்றவனும்
ஆயர் பாடிக்கு அணி விளக்கை, Aayar Paadikku Ani Vilakkai - திருவாய்ப் பாடிக்கு மங்கள தீபம் போன்று ப்ரகாசகனுமான கண்ண பிரானை
வேட்கை உற்று, Vetkai Utru - ஆசைப் பட்டு
மிக விரும்பும் சொல்லை, Miga Virumbum Sollai - மிக்க அபிநிவேசம் தோற்ற அருளிச் செய்த இப் பாசுரங்களை
துதிக்க வல்லார்கள், Thuthika Vallargal - புகழ்ந்து ஓத வல்லவர்கள்
துன்பம் கடலுள், Thunbam Kadalul - ஸம்ஸார ஸமுத்ரத்தில்
துவளார், Thuvalaar - துவண்டு நோவு படமாட்டார்கள்
637நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 1
பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே
ஓர் கார் ஏறு, Oor Kaar eru - (கண்ண பிரானென்கிற) கறுத்த காளை யொன்று
பட்டி மேய்ந்து, Patti Meindhu - காவலில்லாமல் யதேச்சமாய்த் திரிந்து கொண்டும்
பல தேவற்கு, Pala Dhevarku - பல ராமனுக்கு
ஓர் கீழ் கன்று ஆய், Oor Keezh Kanru Aay - ஒப்பற்ற தம்பியாய்
இட்டீறிட்டு, Itteeritu - ஸந்தோஷத்துக்குப் போக்கு வீடாகப் பலவகையான கோலா ஹலங்களைப் பண்ணி
விளையாடி, Vilaiyaadi - விளையாடிக் கொண்டு
இங்கே போத, Inge Podha - இப்படி வர
கண்டீரே, Kandire - பார்த்தீர்களோ?
இட்டம் ஆன, Ittam Aana - (தனக்கு) இஷ்டமான
பசுக்களை, Pasukalai - பசுக்களை
இனிது, Inidhu - த்ருப்தியாக
மறித்து, Marithu - மடக்கி மேயத்து
நீர் ஊட்டி, Neer Ootti - தண்ணீர் குடிப்பித்து
விட்டுக் கொண்டு, Vittu Kondu - (இப்படியாக) அவற்றை மேய விட்டுக் கொண்டு
விளையாட, Vilaiyaada - (அப் பெருமான்) விளையாட நிற்க
விருந்தாவனத்தே, Virundhavanathe - ப்ருந்தாவனத்திலே
கண்டோம், Kandom - ஸேவித்தோம்
638நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 2
அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போலே வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே
அனுங்க, Anunga - நான் வருந்தும்படியாக
என்னை பிரிவு செய்து, Ennai Pirivu Seydhu - என்னைப் பிரிய விட்டுப் போய்
ஆயர்பாடி, Aayarpaadi - திருவாய்ப் பாடியை
கவர்ந்து, Kavarnthu - ஆக்ரமித்து
உண்ணும், Unnum - அநுபவிக்கின்றவனாய்
குணுங்கு நாளி, Kunungu Naali - வெண்ணெய் மொச்ச நாள்ளம் நாறுமவனாய்
குட்டேற்றை, Kutetrai - இளைய ரிஷபம் போன்றவனான
கோவர்த்தனனை, Govardhananai - கண்ண பிரானை
கண்டீரே, Kandire - கண்டீரே
மின் மேகம், Min Megam - மின்னலும் மேகமும்
கலந்தால் போல், Kalanthaal Pol - ஒன்றோடொன்று சேர்ந்தாற்போலே
வனமாலை மினுங்க நின்று, Vanamaalai Minunga Nindru - (கறுத்த திருமேனியிலே மின்னல் போன்ற) வனமாலை திகழப் பெற்று
கணங்களோடு, Kanangalodu - (தோழன்மாருடைய) கூட்டங்களோடு கூட
விளையாட, Vilaiyaada - விளையாடா நிற்க
விருந்தாவனத்தே கண்டோம், Virundhavanathe Kandom - விருந்தாவனத்தே கண்டோம்
639நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 3
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே
மால் ஆய் பிறந்த நம்பியை, Maal aay Pirandha Nambiyai - பெண்கள் பக்கலுண்டான வ்யாமோஹமே ஒரு வடிவாய்க் கொண்டு பிறந்த தென்னலாம்படியான பெருமானாய்
மாலே செய்யும் மணாளனை, Maale Seiyum Manalanai - வ்யாமோஹத்தையே செய்கிற மணவாளப் பிள்ளையாய்
ஏலா பொய்கள் உரைப்பானை, Eala poikal uraipanai - பொருந்தாத பொய்களைச் சொல்லுமவனான கண்ண பிரானை
இங்கே போதக் கண்டீரே?, Inge Podha Kandire? - இங்கே போதக் கண்டீரே?
மேலால், Melaal - மேலே
பரந்த, Parandha - பரவின
வெயில், veyil - வெய்யிலை
காப்பான், kapan - (திருமேனியில் படாமல்) தடுப்பதற்காக
வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின்கீழ் வருவானை, Vinathai Siruvan Siragu Enum Melapinkeezh Varuvaanai - கருடனுடைய சிறகாகிற விதானத்தின் கீழ் எழுந்தருளா நின்ற அப் பெருமானை
விருந்தாவனத்தே கண்டோம், Virundhavanathe Kandom - விருந்தாவனத்தே கண்டோம்
640நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 4
காரத்தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்து என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே
கார், Kaar - காளமேகத்திலே
தண், Than - குளிர்ந்த
கமலம், Kamalam - தாமரை பூத்தாற் போன்றுள்ள
கண் என்றும், Kan Endrum - திருக் கண்கள் என்கிற
நெடு கயிறு, Nedu Kayiru - பெரிய பாசத்திலே
என்னை படுத்தி, Ennai Paduthi - என்னை அசப்படுத்தி
ஈர்த்துக் கொண்டு, Eerthu Kondu - (தான் போமிடமெங்கும் என்னெஞ்சையும் கூடவே) இழுத்துக் கொண்டு போய்
விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே?, Vilaiyaadum Eesan Thannai Kandire? - விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே?
போர்த்த முத்தின் குப்பாயம், Portha Muthin Kuppayam - போர்வையாகப் போர்த்த முத்துச் சட்டையை யுடையதாய்
புகர், Pugar - தேஜஸ்ஸை யுடையதாய்
மால், Maal - பெரிதான
யானை கன்று போல், Yaanai Kanru Pol - யானைக் குட்டி போலே
வேர்த்து நின்று விளையாட, Verthu Nindru Vilaiyaada - வேர்வையுற்று நின்று விளையாட
விருந்தாவனத்தே கண்டோம், Virundhavanathe Kandom - விருந்தாவனத்தே கண்டோம்
641நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 5
மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல்
ஏதுமொன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரோ
பீதக வாடை யுடை தாழப் பெருங்கார் மேகக் கன்றே போல்
வீதியார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே
மாதவன், Madhavan - ஸ்ரீய: பதியாய்
என் மணியினை, En Maniyinai - எனக்கு நீல ரத்னம் போலே பரம போக்யனாய்
வலையில் பிழைத்த பன்றி போல், Valaiyil Pizhaitha Panri Pol - வலையில் நின்றும் தப்பிப் பிழைதத்தொரு பன்றி போலே (செருக்குற்று)
ஏதும் ஒன்றும், Edhum Ondrum - (தன் பக்கலுள்ள) யாதொன்றையும்
கொள தாரா, Kola Thaaraa - பிறர் கொள்ளும்படி தாராதவனான (ஒருவர் கைக்கும் எட்டாதவனான)
ஈசன் தன்னை கண்டீரே?, Eesan Thannai Kandire? - ஈசன் தன்னை கண்டீரே?
பீதகம் ஆடை, Peedhagam Aadai - திருப் பீதாம்பரமாகிற
உடை, Udai - திருப் பரிவட்டமானது
தாழ, Thaazha - தொங்கத் தொங்க விளங்க
பெரு கார் மேகம் கன்று போல், Peru Kaar Megam Kanru Pol - பெருத்துக் கறுத்துதொரு மேகக் குட்டி போலே
வீதி ஆர வருவானை, Veethi Aara Varuvaanai - திரு வீதி நிறைய எழுந்தருளும் பெருமானை
விருந்தாவனத்தே கண்டோம், Virundhavanathe Kandom - விருந்தாவனத்தே கண்டோம்
642நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 6
தருமம் அறியா குறும்பனைத் தன கைச் சார்ங்கமதுவே போல்
புருவம் வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே
வுருவு கரிதாய் முகம் செய்தாய் உதய பருப் பதத்தின் மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே
தருமம் அறியா, Tharumam Ariyaa - இரக்கமென்பது அறியாதவனாய்
குறும்பனை, Kurumbanai - குறும்புகளையே செய்யுமவனாய்
தன் கை சார்ங்கம் அதுவே போல், Than Kai Saarngam Athuve Pol - தனது திருக்கையிலுள்ள சார்ங்க வில்லைப் போன்ற
புருவ வட்டம், Puruva Vattam - திருப் புருவ வட்டங்களாலே
அழகிய, Azhagiya - அழகு பெற்றவனாய்
பொருத்தம் இலியை, Porutham Iliyai - (அவ்விழகை அன்பர்கட்டு அநுபவிக்கக் கொடுத்து) பொருந்தி வாழப் பெறாதவனான பெருமானை
கண்டீரே?, kandeere? - கண்டீரே?
உருது கரிது ஆய், Uruthu Karidhu Aay - திருமேனியில் கருமை பெற்றும்
முகம் செய்து ஆய், Mukam Seidhu Aay - திரு முகத்தில் செம்மை பெற்றும் இருப்பதாலே
உதயம் பருப்பதத்தின் மேல் விரியும் கதிர் போல்வானை, Udhayam Parupathathin Mel Viriyum Kathir Polvaanai - உதய பர்வதத்தின் மேலே விரிகின்ற சூரியன் போல் விளங்கும் அப்பெருமானை
விருந்தாவனத்தே கண்டோமே, Virundhavanathe Kandome - விருந்தாவனத்தே கண்டோமே
643நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 7
பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற அக்கரு மா முகிலைக் கண்டீரே
அருத்தி தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே
பொருத்தம் உடைய நம்பியை, Porutham Udaya Nambiyai - பொருத்தமுடைய ஸ்வாமியாய்
புறம் போல் உள்ளும் கரியானை, Puram Pol Ullum Kariyaanai - உடம்பு போலே உள்ளமும் கறுத்திரா நின்றவனாய்
கருத்தை பிழைத்து நின்ற, Karuthai Pizhaithu Nindra - நான் எண்ணும் எண்ணத்தைத் தப்பி நிற்பவனாய்
அக் கரு மா முகிலை, ak karu maa mukilai - கறுத்துப் பெருத்த முகில் போன்றவனான அக் கண்ணபிரானை
கண்டீரே?, Kandire? - கண்டீரே?
அருத்தி, Aruthi - விரும்பப் பெறுகின்ற
தாரா கணங்களால், Thaaraa Kanangalal - நக்ஷத்ர ஸமூஹங்களாலே
ஆர பெருகு, Aara Perugu - மிகவும் நிறைந்திருந்துள்ள
வானம் போல், vanam pol - ஆகாசம் போல்
வானம் போல் விருத்தம் பெரிது ஆய், Virutham Peridhu Aay - பெருங்கூட்டமாய்
வருவானை, varuvanai - எழுந்தருளா நின்ற அப் பெருமானை
விருந்தாவனத்தே கண்டோமே, Virundhavanathe Kandome - விருந்தாவனத்தே கண்டோமே
644நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 8
வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதவாடை யுடையானை
அளி நன்குடை திருமாலை ஆழியானைக் கண்டீரே
களி வண்டும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே
வெளிய சங்கு ஒன்று உடையானை, Veliya Sangu Ondru Udaiyaanai - வெளுத்த ஸ்ரீபாஞசயன மொன்றை வுடையனாய்
பீதகம் ஆடை உடையானை, Peethagam Aadai Udaiyaanai - பீதாம்பரத்தை உடையாகக் கொண்டவனாய்
நன்கு அளி உடைய, Nangu Ali Udaya - நன்றாகக் கிருபை யுடையவனாய்
ஆழியானை, Aazhiyaanai - திருவாழியாழ்வானை யுடையவனாய்
திருமாலை, Thirumaalai - ஸ்ரீய: பதியான கண்ணனை
கண்டீரே?, kandeere? - கண்டீரே?
களி வண்டு, Kali Vandu - (மதுபானத்தாலே) களித்துள்ள வண்டுகளானவை
எங்கும், engum - எப் புறத்திலும்
கலந்தால், kalandhal - பரம்பினாற்போலே
கமழ் பூங்குழல்கள், Kamazh Poonguzhalkal - பரிமளிக்கின்ற அழகிய திருக் குழல்களானவை
தடதோள்மேல், Thada thol mel - பெரிய திருத் தோள்களின் மேலே
மிளிர நின்று விளையாட, Milira Nindru Vilaiyaada - (தாழ்ந்து) விளங்க நின்று விளையாட
விருந்தாவனத்தே கண்டோமே, Virundhavanathe Kandome - விருந்தாவனத்தே கண்டோமே
645நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 9
நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே
நாட்டை படை என்று, Natai Padai Endru - உலகங்களை ஸ்ருஷ்டி என்று
அயன் முதலா, Ayan Mudhalaa - பிரமன் முதலான பிரஜாபதிகளை
தந்த, thandha - உண்டாக்கின
நளிர் மா மலர் உந்தி வீட்டை பண்ணி, Nalir Maa malar Undhi Veetai Panni - குளிர்ந்த பெரிய மலரை யுடைத்தான திருநாபி யாகிற வீட்டை யுண்டாக்கி
விளையாடும், vilaiyaadum - இப்படியாக லீலா ரஸம் அநுபவிக்கிற
விமலன் தன்னை, Vimalan Thannai - பரம பாவனனான பெருமானை
கண்டீரே?, kandire? - கண்டீரே?
தேனுகனும், Thenukanum - தேநுகாஸுரனும்
களிறும், kalirum - குவலயாபீட யானையும்
புள்ளும், pullum - பகாஸுரனும்
உடன் மடிய, udan madiya - உடனே மாளும்படியாக
காட்டை நாடி வேட்டை ஆடி வருவானை, kaatai naadi vettai aadi varuvaanai - காட்டிற் சென்று வேட்டையாடி வரும் அப் பெருமானை
விருந்தாவனத்தே கண்டோமே, Virundhavanathe Kandome - விருந்தாவனத்தே கண்டோமே
646நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 10
பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே
பரு தாள் களிற்றுக்கு, Paru Thaal Kalitruku - பருத்த கால்களை யுடைய கஜேந்திராழ்வானுக்கு
அருள் செய்த, Arul Seidha - க்ருபை பண்ணின
பரமன் தன்னை, Paraman thannai - திருமாலை
பாரின் மேல், paarin mel - இந் நிலத்திலே
விருந்தாவனத்தே கண்டமை, Virundaavanathe Kandamai - ஸ்ரீ ப்ருந்தாவனத்திலே ஸேவிக்கப் பெற்றமையைப் பற்றி
விட்டு சித்தன் கோதை சொல், Vittu Chithan Kodhai sol - பெரியாழ்வார் திருமகளான ஆண்டாளருளிச் செய்த இப் பாசுரங்களை
மருந்து ஆம் என்று, Marundhu aam endru - (பிறவி நோய்க்கு) மருந்தாகக் கொண்டு
தம் மனத்தே, tham Manathe - தங்கள் சிந்தையிலே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள், Vaithu kondu Vaazhvaarkal - அநுஸந்தித்துக் கொண்டு வாழுமவர்கள்
பெரு தாள் உடைய பிரான் அடி கீழ், Peru Thaal Udaya Piran Adi Keezh - பெருமை பொருந்திய திருவடிகளை யுடைய எம்பெருமானுடைய திருவடிகளின் கீழே
என்றும், Endrum - எந்நாளும்
பிரியாது இருப்பார், Piriyadhu Iruppar - பிரியாமலிருந்து நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்கள்