திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 505 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
505நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 2
வெள்ளை நுண் மணல் கொண்டு தெருவணிந்து வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து முயன்று உன்னை நோற்கின்றேன் காம தேவா கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு கடல் வண்ணன் என்பதோர் பேர் எழுதி புள்ளினை வாய் பிளந்தான் எனபது ஓர் இலக்கினில் புக வென்னை எய்க்கிற்றியே
பதவுரை Show / Hide
காமதேவா, Kaama Deva - மன்மத தேவனே!
வெள்ளை நுண் மணல் கொண்டு, Vellai Nun Manal Kondu - வெளுத்த சிறிய மணல்களைக் கொண்டு
முள்ளும் இல்லா சுள்ளி, Mullum Illa Sulli - (எறும்பு முதலியவை இல்லாத வளவே யன்றியே) முள்ளுமில்லாத சுள்ளிகளை
எரி மடுத்து, Eri Maduthu - நெருப்பிலிட்டு
முயன்று, Muyandru - (இவ்வாறான) ப்ரயத்நங்களைச் செய்து
உன்னை நோற்கின்றேன், Unnai Norkindren - நோன்பு நோற்கா நின்றேன் (ஆன பின்பு)
கள் அவிழ், Kal Avizh - தேன் பெருகா நின்றுள்ள
பூ புஷ்பங்களாகிற கணை, Poo Pushpangalagira Kanai - அம்புகளை
தெரு அணிந்து, Theru Anindhu - வீதிகளை அலங்கரித்து,
வெள் வரைப் பதன் முன்னம், Vel Varaipathan Munnam - கிழக்கு வெளுப்பதற்கு முன்னமே
துறை படிந்து, Thurai Padindhu - நீர்த் துறைகறில் முழுகி,
தொடுத்துக் கொண்டு, Toduthu Kondu - (வில்லில்) தொடுத்துக் கொண்டு
கடல் வண்ணன் என்பது ஓர் பேர் எழுதி, Kadal Vannan Enbathu Or Per Yezhudhi - கண்ண பிரானுடைய கடல் வண்ணனென்கிற ஒரு நாமத்தை (அம்பிலே) எழுதிக் கொண்டு
புள்ளினை வாய் பிளந்தான் என்பது ஓர் இலக்கினில், Pullinai Vai Pilandhan Enbathu Or Ilakkinil - பகாஸுரனுடைய வாயைக் கீண்டெறிந்தவன், என்னும் ஓர் குறியாகிற அக்கடல்வண்ணன் பக்கலில்
புக, Puga - (நான்) சென்று சேரும்படி என்னை
என்னை, Ennai - என்னை
எய்கிற்றி, Eykitri - (நீ) சேர்ப்பிக்கவேணும்.