திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 506 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
506நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 3
மத்த நன்னறு மலர் முருக்க மலர் கொண்டு முப்போது முன்னடி வணங்கி தத்துவமிலி என்று நெஞ்செரிந்து வாசகத்தழித்து உன்னை வைதிடாமே கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு கோவிந்தன் என்பதோர் பேரெழுதி வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே
பதவுரை Show / Hide
நல்நறு மத்த மலர், Nalnaru Matha Malar - நல்ல மணமிக்க ஊமத்த மலர்களையும்
முருக்கமலர்கொண்டு, Murukka Malar Kondu - முருக்க மலர்களையுங் கொண்டு
முப்போதும், Muppothum - மூன்று காலங்களிலும்
உன் அடி வணங்கி, Un Adi Vanangi - உன் அடியை வணங்கி
தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்துவாசகத்து அழித்து உன்னை வைதிடாமே ‘இவன் பொய்யான்தெய்வம், என்று, Thathuvam ili Endru Nenju Erindhu Vasakathu Azhithu Unnai Vaithidame 'Ivan Poiyan Theivam', Endru - இவன் பொய்யான்தெய்வம், என்று
சொல்லிமனங் கொதித்து அழித்து வாய்கொண்டு உன்னை நிந்திக்க வேண்டாதபடி

கொத்து அலர்ப்பூ கணைதொடுத்துக் கொண்டு, Kothu Alar poo kanai Thoduthu Kondu - கொத்துக் கொத்தாக விகஸியா நின்ற புஷ்பங்களாகிற அம்புகளை வில்லில் தொடுத்துக் கொண்டு
கோவிந்தன் என்பது ஓர் பேரெழுதி, Govindhan Enbathu Or Per Ezhuthi - கோவிந்த நாமத்தை (நெஞ்சில்) தரித்துக் கொண்டு
வித்தகன் வேங்கடம் வாணன் என்னும் விளக்கினில் புக, Vithagan Vengadam Vaanan Enum Vilakinil Puga - அற்புதனான திருவேங்கடமுடையான் என்கிற விளக்கிலே
என்னை விதிக்கிற்றி, Ennai Vithikitri - என்னை நீ செய்ய வேணும்.