திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 507 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
507நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 4
சுவரில் புராண நின் பேர் எழுதிச் சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும் கவரிப் பிணாக்ககளும் கருப்பு வில்லும் காட்டித் தந்தேன் கண்டாய் காம தேவா அவரைப் பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள் துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றயே
பதவுரை Show / Hide
புராண, Purana - நெடுநாளாக எனக்கு உபகரிக்கு மவனே!
காம தேவா, Kama Deva - மன்மதனே!
சுவரில், Suvaril - சுவரிலே
நின் பேர், Nin Per - உனது பெயர்களை
எழுதி, Ezhuthi - எழுதி
சுறவம் நல் கொடிகளும், Suravam Nal Kodigalum - மீன்களாகிற நல்ல த்வஜங்களையும்
துரங்கங்களும், Thurangangalum - குதிரைகளையும்
கவரி பிணாக்களும், Kavari Pinaakkalum - சாமரம் வீசுகின்ற பெண்களையும்
கரும்பு வில்லும், Karumbu Villum - கரும்பாகிற தநுஸ்ஸையும்
காட்டித் தந்தேன் கண்டாய், Kaati Thandhen Kandai - உனக்கு உரியனதாகக் காட்டிக் கொடுத்தேன்
அவரைப் பிராயம் தொடங்கி, Avarai Pirayam Thodangi - இளம் பருவமே தொடங்கி
என்றும் ஆதரித்து, Endrum Aatharithu - (அக் கண்ண பிரானையே) எப்போதும் விரும்பி
எழுந்த, Ezhundhu - கிளர்ந்த
என் தடம் முலைகள், En Thadam Mulaigal - எனது பருத்த முலைகளை
துவரைப் பிரானுக்கே, Thuvarai Piranukke - த்வாரகைக்குத் தலைவனான அக் கண்ண பிரானுக்கே
சங்கற்பித்து, Sangarpithu - (அநுபவிக்கத் தக்கவை என்று) ஸங்கல்பித்து
தொழுது வைத்தேன், Thozhudhu Vaithen - (உன்னை) தண்டனிடா நின்றேன்
ஒல்லை விதிக்கிற்றி, Ollai Vithikkiri - (இந்த மநோரதத்தை) (நீ) சீக்கிரமாகத் தலைக் கட்டுவிக்க வேணும்.