திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 508 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
508நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 5
வானிடை வாழும் அவ்வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த வவி கானிடைத் திரிவதோர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித் தெழுந்த என் தடமுலைகள் மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே
பதவுரை Show / Hide
கண்டாய் மன்மதனே!, Kandai Manmadhane! - மன்மதனே!
வானிடை, Vaanidai - ஸ்வர்க்க லோகத்தில்
வாழும், Vaazhum - வாழுகின்ற
அவ் வானவர்க்கு, Av Vaanavarkku - விலக்ஷணரான தேவர்களுக்கென்று
மறையவர், Maraiyavar - ப்ராஹ்மணர்
வேள்வியில், Velviyil - யாகத்தில்
வகுத்த அலி, Vagutha Ali - கொடுத்த ஹவிஸ்ஸை
கானிடை திரிவது ஓர் நரி புகுந்து, Kaanidai Thirivadhu Or Nari Pugundhu - காட்டிலே திரிகின்ற ஒரு நரியானது வந்து
என் தடம் முலைகள், En Thadam Mulaigal - எனது பருத்த முலைகளானவை
மானிடவர்க்கு என்று பேச்சு படில், Maanidavarkku Endru Pechu Padil - (அப்புருஷோத்தமனை யொழியச் (சில) மநுஷ்யர்களுக்கு (உரியவை)
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப, Kadappadhum Moppathum Seivadhu Oppa - கடந்தும் மோந்து பார்த்தும் கெடுப்பது போல
ஊனிடை, Oonidai - (தனது) திருமேனியில்
ஆழி சங்கு, Aazhi Sangu - திருவாழியையும் திருச்சங்கையும் (அணிந்துள்ள)
உத்தமற்கு என்று, Uthamarku Endru - புருஷோத்தமனுக்காக
உன்னித்து எழுந்த, Unnithu Ezhundha - ஆதரவுடன் கிளர்ந்த யவை என்கிற பேச்சு (நாட்டில்) உண்டாகுமே யானால்
வாழகில்லேன், Vaazhakillen - உயிர் வாழ்ந்திருக்க மாட்டேன்