திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 509 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
509நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 6
உருவுடையார் இளையார்கள் நல்லார் ஒத்து வல்லார்களைக் கொண்டு வைகல் தெருவிடை எதிர் கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காம தேவா கருவுடை முகில் வண்ணன் காயா வண்ணன் கருவிளை போல் வண்ணன் கமல வண்ணத் திருவுடை முகத்தினில் திருக் கண்களால் திருந்தவே நோக்க எனக்கு அருள் கண்டாய்
பதவுரை Show / Hide
காமதேவா, Kaama dheva - மன்மதனே!
உரு உடையார், Uru Udayaar - அழகிய வடிவையுடையராயும்
இளையார்கள், Ilaiyaarkal - யௌவன பருவமுடையராயும்
நல்லார், Nallaar - காமதந்திரத்திற் சொன்ன ஆசாரங்களை யுடையராயும்
பங்குனி நாள், Panguni Naal - பங்குனி மாதத்துப் பெரிய திருநாளில்
திருந்தவே நோற்கின்றேன், Thirundhave Norkindren - நல்ல அறிவுடனே (உன்னைக் குறித்து) நோன்பு நோற்கா நின்றேன்’
கரு உடை முகில் வண்ணன், Karu Udai Mugil Vannan - (நீரைக்) கருவிலே யுடைய மேகம் போன்ற திருநிறமுடையவனும்
காயா வண்ணன், Kaayaa Vannan - காயாம் பூப் போன்ற திரு நிறத்தை யுடையவனும்
ஒத்து வல்லார்களை கொண்டு, Othu Vallargalai Kondu - காம ஸுத்திரத்தில் வல்லமை யுடையவராயுமுள்ளவர்களை முன்னிட்டுக் கொண்டு
வைகல், Vaigal - நாள்தோறும்
தெருவிடை, Theruvidai - நீ வரும் வழியிலே
எதிர் கொண்டு, Edhir Kondu - எதிரே சென்று
கருவிளை போல் வண்ணன், Karuvilai Pol Vannan - காக்கணம் பூப் போல் பளபளப்பை யுடையனுமான கண்ண பிரான்
கமலம் வண்ணம் திரு உடை முகத்தினில் திருக் கண்களால், Kamalam Vannam Thiru Udai Mugathinil Thiru Kankalal - செந்தாமரை மலரின் நிறம் போன்ற காந்தியை யுடைய திருமுகமண்டலத்திலுண்டான திருக்கண்களினால்
எனக்கு, Enakku - என் விஷயத்தில்
திருந்தவே நோக்க, Thirundhave Nokka - விசேஷ கடாக்ஷம் செய்தருளும்படி
அருள், Arul - நீ கிருபை பண்ண வேணும்.