திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 512 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
512நாச்சியார் திருமொழி || 1 - தையொரு திங்களும் (கண்ணனோடு கூட்டும்படி காமனைத் தொழுதல்) 9
தொழுது முப்போது முன்னடி வணங்கித் தூ மலர் தூயத் தொழுது ஏத்துகின்றேன் பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெறா விடில் நான் அழுது அழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது வுனக்கு உறைக்கும் கண்டாய் உழுவது ஓர் எருத்தினை நுகங்கொடுபாய்ந்து ஊட்டமின்றித் துரந்தால் ஒக்குமே
பதவுரை Show / Hide
முப்போதும், Muppothum - இரண்டு சந்தி, உச்சிப் போது ஒன்று ஆகிய மூன்று காலங்களிலும்
தொழுது வணங்கி, Thozhudhu Vanangi - ப்ரணாம பூர்வமாக (உன்னை) ஆச்ரயித்து
உன் அடி, Un Adi - உன் பாதங்களில்
தூ மலர் தூய், Thoo Malar Thooi - பரிசுத்தமான புஷ்பங்களைப் பணிமாறி
தொழுது, Thozhudhu - ஸேவித்து
ஏத்துகின்றேன் நான், Ethukindren Naan - ஸ்தோத்திரம் பண்ணுகின்ற நான்
பார் கடல் வண்ணனுக்கே, Paar Kadal Vannanukke - பூமியைச் சூழ்ந்த கடல் போன்ற திருநிறத்தையுடைய கண்ணபிரானுக்கே
பழுது இன்றி, Pazhudhu Indri - குற்றமொன்றுமில்லாமல்
பணி செய்து, Pani Seidhu - கைங்கரியம் பண்ணி
வாழப் பெறா விடில், Vaazha Peraa Vidil - உஜ்ஜீவியா தொழிவேனாகில்
அழுது அழுது, Azhudhu Azhudhu - (பின்பு நான்) பல காலும் அழுது
அலமந்து, Alamandhu - தடுமாறி
அம்மா வழங்க, Amma Vazhanga - ‘அம்மா!’ என்று கதறிக் கொண்டு திரிய
வழங்க, Vazhanga - சஞ்சரித்து
அது, Athu - அப்படி என்னைத் துடிக்க விடுவது
ஆற்றவும், Aatravum - மிகவும்
உனக்கு உறைக்கும், Unakku Uraikum - உன் தலை மேல் ஏறும் (அன்றியும், என்னை உபேஷிப்பது) வேறாதொழிவதானது
உழுவது ஓர் எருத்தினை, Uzhuvathu Oar Yeruthinai - ஏருழுகின்ற ஒரு எருதை
நுகம் கொடு பாய்ந்து, Nugam Kodu Paaindhu - நுகத் தடியால் தள்ளி
ஊட்டம் இன்றி, Oottam Indri - தீனி யில்லாமல்
துரந்தால் ஒக்கும், Thurandhaal Okkum - ஒட்டி விடுவதைப் போலாம்