Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 514 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
514நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 1
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை
மாமி தன மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே
காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்
தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே
நாமம் ஆயிரம், Naamam Aayiram - ஸஹஸ்ர நாமத்தினால்
ஏத்த நின்ற, Etha Nindra - (நித்ய ஸூரிகள்) துதிக்கும்படி நின்ற
நாராயணா, Narayana - நாராயணனே!
நரனே, Narane - (சக்கரவர்த்தித் திருமகனாய்ப் பிறந்து) மானிட வுடல் கொண்டவனே!
உன்னை, Unnai - (ஏற்கனவே தீம்பனான) உன்னை
மாமி தன் மகன் ஆக பெற்றால், Maami Than Magan Aaga Petral - பர்த்தாவாகவும் பெற்றால்
எமக்கு வாதை தவிருமே, Emakku Vaadhai Thavirume - நாங்கள் நலிவுபடா திருக்க முடியுமோ?’
காமன் போதரு காலம் என்று, Kaaman Potharu Kaalam Endru - மன்மதன் வருங்கால மென்று
பங்குனி நாள், Panguni Naal - பங்குனி மாதத்தில்-
கடை, Kadai - (அவன் வரும்) வழியை
பாரித்தோம், Paarithom - கோடித்தோம்’
தீமை செய்யும், Theemai Seiyum - தீம்புகளைச் செய்கின்ற
சிரீதரா, Siridhara - ஸ்ரீ பதியான கண்ண பிரானே!
எங்கள் சிற்றில், Engal sitril - நாங்களிழைக்கின்ற மணற் கொட்டகங்களை
வந்து , Vandhu - (நாங்கள் விளையாடுமிடத்தில்) வந்து
சிதையேல், Sidhayel - நீ அழிக்க வேண்டா.