| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 520 | நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 7 | பேத நன்கறிவார்களோடு இவை பேசினால் பெரிதின் சுவை யாதும் ஓன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன் ஒதமா கடல் வண்ணா உன் மணவாட்டிமாரோடு சூழறும் சேதுபந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே | பேதம், Pedham - (உன் பேச்சின்) வாசியை நன்கு அறிவார்களோடு, Nangu Arivargalodu - நன்றாக அறிய வல்லவரோடு இவை, Ivai - இப் பேச்சுக்களை பேசினால், Pesinaal - பேசினால் பெரிது இன் சுவை, Peridhu In Suvai - மிகவும் போக்யமாயிருக்கும் யாது ஒன்றும் அறியாத, Yaadhu Ondrum Ariyaadha - எவ்வகையான பாவத்தை யுமறிய மாட்டாத பிள்ளைகளோமை, Pillaigalomai - சிறுப் பெண்களான எங்களை நீ நலிந்து என் பயன், Nee Nalindhu En Payan - நீ வருத்த முறுத்துவதனால் என்ன பயன்? ஓதம், Odham - திரைக் கிளப்பத்தை யுடைய மா கடல், Maa Kadal - பெரிய கடலை யொத்த வண்ண, Vanna - திரு நிறத்தை யுடைய கண்ண பிரானே! சேது பந்தம் திருந்தினாய், Sedhu Bandham Thirundhinaai - திருவணை கட்டினவனே! உன் மணவாட்டிமாரொடு சூழறும், Un Manavaatimaarodu Soozharum - உன்னுடைய பத்தினிகளின் மேல் ஆணை எங்கள் சிற்றில், Engal Sitril - நாங்களிழைக்கின்ற மணற் கொட்டகங்களை வந்து, Vandhu - (நாங்கள் விளையாடுமிடத்தில்) வந்து சிதையேல், Sidhaiyel - நீ அழிக்க வேண்டா |