திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 525 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
525நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 2
இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல் குதி கொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்
பதவுரை Show / Hide
இங்கு, Ingu - இங்கே
புகுந்து இது என், Pugundhu idhu en - (நீ) வந்து சேர்ந்த விதற்குக் காரணமென்ன?
இப் பொய்கைக்கு, Ip poigaikku - இக் குளத்திற்கு
எவ்வாறு வந்தாய், Evvaaru vandhaai - எவ் வழியாலே வந்தாய்?
மது இன் துழாய் முடிமாலே, Madhu in thuzhaai mudimaale - தேன் மாறாத இனிய திருத்துழாய் மாலை சூடிய திருவபிஷேகத்தை யுடைய பெரியோனே!
மாயனே, Maayane - ஆச்சரிய சக்தி யுடையவனே!
எங்கள் அமுதே, Engal amudhe - எங்களுக்கு அம்ருதம் போல் இனியவனானவனே!
விதி இன்மையால், Vidhi inmaiyal - விதி யில்லாமையாலே
அது மாட்டோம், Adhu maattom - ஸம்ச்லேஷத்திற்கு இசைய மாட்டோம்
வித்தகப் பிள்ளாய், Vitthaka pillai - ஆச்சரிய சேஷ்டைகளையுடைய பிள்ளாய்!
விரையேல், Viraiyel - அவஸரப் பட வேண்டா
அரவில், Aravil - காளிய நாகத்தின் மேல்-
குதி கொண்டு, Kudhi kondu - குதித்துக் கொண்டு
நடித்தாய், Nadithaai - நர்த்தனஞ்செய்தவனே!
குருந்திடைக் கூறை, Kurundhidai koorai - (அக்) குருந்த மரத்தின் மேல் வைத்திருக்கிற சேலைகளை
பணியாய், Paniyaai - கொடுத்தருள்