திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 530 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
530நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 7
நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி யல்லாதன செய்தாய் ஊரகம் சாலவும் சேய்ததால் ஊழி எல்லாம் உணர்வானே ஆர்வம் உனக்கே யுடையோம் அம்மனைமார் காணில் ஒட்டார் போர விடாய் எங்கள் பட்டைப் பூங்குருந்து ஏறி இராதே
பதவுரை Show / Hide
ஊழி எல்லாம், Oozhi ellam - கற்பாந்த காலத்திலெல்லாம்
உணர்வானே, Unarvaane - (ஜகத் ரக்ஷண சிந்தையுடன்) உணர்ந்திருப்பவனே!
நீரிலே நின்று அயர்க்கின்றோம், Neerile ninru ayarkinrom - ஜலத்தில் நின்று கொண்டு வருத்தப்படா நின்றோம்
நீதி அல்லாதன, Neethi allaadhana - அநீதியான செயல்களை
ஆல், Aal - ஐயோ! (இப்படி நீ எங்களை வருத்தத் செய்தேயும்)
உனக்கே, Unakke - உன் விஷயத்திலேயே
ஆர்வம் உடையோம், Aarvam udaiyom - நாங்கள் அன்புள்ளவர்களா யிரா நின்றோம்
அம்மனைமார், Ammanaimaar - எங்கள் தாய்மார்
காணில், Kaanil - நீ பண்ணும் லீலைகளுக்கு நாங்கள் இணங்கி நிற்பதைக் கண்டால்
செய்தாய், Seithaai - செய்யா நின்றாய்
ஊர், Oor - (உன் விஷமங்களுக்குத் தப்பி ஓடிப் பிழைக்கப் பார்ப்போமென்றால்) எங்கள் ஊராகிய ஆய்ப் பாடியும்
அகம், Agam - மாளிகைகளும்
சாலவும், Saalavum - மிகவும்
சேய்த்து, Seithu - தூரத்தி லிரா நின்றன
ஒட்டார், Ottaar - இசைய மாட்டார்கள்
எங்கள் பட்டை, Engal pattai - எங்களுடைய சேலைகளை
போர விடாய், Pora vidaai - தந்தருளாய்
பூ குருந்து, Poo kurundhu - பூத்திரா நின்ற குருத்த மரத்தின் மேல்
ஏறி இராதே, Eri iraadhe - ஏறிக் கொண்டு தீமைகளைச் செய்யாதே