திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 532 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
532நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 9
கஞ்சன் வலை வைத்த வன்று காரிருள் எல்லில் பிழைத்து நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற விக்கன்னியரோமை அஞ்ச யுரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டிருக்கும் – வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசுமையிலீ கூறை தாராய்
பதவுரை Show / Hide
கஞ்சன், Kanjan - கம்ஸனானவன்
வலை வைத்த அன்று, Valai vaitha andru - உன்னை அழிப்பதாக நினைத்த காலத்தில்
கார் இருள், Kaar irul - மிக்க இருளை யுடையத்தான
எல்லில், Ellil - இரவில்
பிழைத்து, Pizhaithu - பிழைத்து
நின்ற, Nindra - (அம்மணமாக) நிற்கின்ற
இக் கன்னிய ரோமை, Ik kanniya romai - இளம் பெண்களான எங்களுக்கு
நெஞ்சு துக்கம் செய்ய, Nenju thukkam seiya - மனத் துன்பத்தை உண்டாக்குவதற்காக
போந்தாய், Pondhaai - வந்து பிறந்தாய்
அசோதை, Asodhai - யசோதைப் பிராட்டியோ வென்றால்
அஞ்ச, Anja - நீ பயப்படும்படி
உரப்பாள், Urapaal - உன்னை அதட்ட மாட்டாள்
ஆணாட விட்டிட்டிருக்கும், Anaada vittitirukkum - தீம்பிலே கை வளரும் படி உன்னை விட்டிரா நின்றாள்
வஞ்சகம், Vanjakam - வஞ்சனை யுடைய
பேய்ச்சி, Peichchi - பூதனையினுடைய
பால், Paal - முலைப் பாலை
உண்ட, Unda - (அவளுயிரோடே கூட) உறிஞ்சி யுண்ட
மசுமை இலீ, Masumai ilee - லஜ்ஜை யில்லாதவனே!
கூறை தாராய், Koorai thaaraai - சேலைகளைத் தந்தருள்