| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 533 | நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 10 | கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாட்டை பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய் மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே | எங்கள் நம்பி, Engal nambi - எமக்கு ஸ்வாமியாய் கரிய, Kariya - கார் கலந்த மேனியனான பிரான், Piran - கண்ண பிரான் கன்னிய ரோடு, Kanniyarodu - ஆயர் சிறுமியரோடே செய்த விளையாட்டை, Vilaiyatai - திவ்ய லீலைகளைக் குறித்து பொன் இயல், Pon iyal - ஸ்வர்ண மயமான மாடங்கள் சூழ்ந்த, Maadangal soozhnda - மாடங்களால் சூழப்பட்ட புதுவையர் கோன், Puthuvaiyar kon - ஸ்ரீவில்லிபுத்தூரி லுள்ளார்க்குத் தலைவரான பட்டன் கோதை, Pattan kodhai - பெரியாழ்வார்க்குத் திருமகளான ஆண்டாள் இன் இசையால், In isaiaal - இனிய இசையாலே சொன்ன, Sonna - அருளிச் செய்த மாலை, Maalai - சொல் மாலையாகிய ஈர் ஐந்தும், Eer aindhum - இப் பத்துப் பாட்டுக்களையும் வல்லவர் தாம், Vallavar thaam - கற்க வல்லவர்கள் போய், Poi - (அர்ச்சிராதி மார்க்கமாகப்) போய் வைகுந்தம் புக்கு, Vaigundham pukku - பரம பதத்தை யடைந்து (அவ் விடத்திலே) மன்னிய, Manniya - நித்ய வாஸம் செய்தருளுகிற மாதவனோடு, Madhavanodu - திருமாலோடு கூடி இருப்பார், Irupaar - நித்யா நுபவம் பண்ணிக் கொண்டு வாழ்ந்திருக்கப் பெறுவர். |