திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 534 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
534நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 1
தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார் வள்ளல் மாலிரும் சோலை மணாளனார் பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே
பதவுரை Show / Hide
கூடலே, Koodale - கூடல் தெய்வமே!
தெள்ளியார் பலர், Thelliyar palar - தெளிவுடைய பக்தர்கள் பலர்
கை தொழும், Kai thozhum - கைகளார வணங்கப் பெற்ற
தேவனார், Thevanaar - ஸ்வாமியாய்
வள்ளல், Vallal - பரமோதாரனாய்
மாலிருஞ்சோலை மணாளனார், Maalirunjolai manaalanar - திருமாலிருஞ் சோலையிலே எழுந்தருளி யிருக்கிற மணவாளப் பிள்ளையாகிய பரம புருஷன்
பள்ளி கொள்ளும் இடத்து, Palli kollum idathu - பள்ளி கொண்டருளுமிடத்திலே
அடி கொட்டிட, Adi kottit - (அவனுடைய) திருவடிகளை நான் பிடிக்கும்படியாக
கொள்ளும் ஆகில், Kollum aagil - (அவன்) திருவுள்ளம் பற்றுவனாகில்
நீ கூடிடு, Nee koodidu - நீ கூட வேணும்