| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 535 | நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 2 | காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர் வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன் ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும் கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே | கூடலே, Koodale - கூடல் தெய்வமே! காட்டில் வேங்கடம், Kaatil vengadam - காட்டிலுள்ள திருவேங்கடமலையில நகர் கண்ணபுரம், Nagar kannapuram - நகரமாகிய திருக்கண்ண புரத்திலும் வாட்டம் இன்றி, Vaatam indri - மனக் குறை யில்லாமல் மகிழ்ந்து, Magizhndhu - திருவுள்ளமுகந்து உறை, Urai - நித்ய வாஸம் செய்தருளுகிற வாமனன், Vaamanan - வாமநாவதாரம் செய்தருளிய எம்பெருமான் ஒட்டரா வந்து, Ottaraa vandhu - ஓடி வந்து என் கை பற்றி, En kai patri - என்னுடைய கையைப் பிடித்து தன்னொடும், Thanodum - தன்னொடு கூட்டும் ஆகில், Kootum aagil - அணைத்துக் கொள்வனாகில் நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும் |