| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 536 | நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 3 | பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு ஆமகன் அணி வாணுதல் தேவகி மாமகன் மிகு சீர் வசுதேவர் தம் கோமகன் வரில் கூடிடு கூடலே | பூ மகன், Poo magan - பூலிற் பிறந்த பிரமனும் வானவர், Vaanavar - நித்யஸூரிகளும் புகழ் போற்றுதற்கு, Pugazh potrudharku - கீர்த்தியைப் பாடித் துதிப்பதற்கு ஆம், Aam - தகுந்த மகன், Magan - புருஷோத்தமனாய், அணி வாள் நுதல் தேவகி, Ani vaal nuthal Dhevaki - மிகவும் அழகிய நெற்றியையுடைய தேவகியினுடைய மா மகன், Maa magan - சிறந்த புத்திரனாய், மிகு சீர் வசுதேவர் தம், Migu seer Vasudevar tham - மிகுந்த, நற் குணங்களை யுடையரான வசுதேவருடைய கோ மகன், Ko magan - மாட்சிமை தங்கிய புத்திரனான கண்ணபிரான் வரில், Varil - (என்னை அணைக்க) வருவானாகில் கூடலே, Koodale - கூடல் தெய்வமே! நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும் |