| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 537 | நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 4 | ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து வாய்த்த காளியன் மேல் நடமாடிய கூத்தனார் வரில் கூடிடு கூடலே | ஆய்ச்சிமார்களும், Aaichimaargalum - இடைச்சிகளும் ஆயரும், Aayarum - இடையரும் அஞ்சிட, Anjida - பயப்படும்படியாக பூத்த நீள் கடம்பு ஏறி, Pootha neel kadambu eri - புஷ்பித்ததாய் உயர்ந்திருந்த கடப்ப மரத்தின் மேல் ஏறி புக பாய்ந்து, Puga paaindhu - அங்கு நின்றும் எழும்பிக் குதித்து வாய்த்த காளியன் மேல் நடம் ஆடிய, Vaaitha kaaliyan mel nadam aadiya - பாக்கியசாலியான காளியநாகத்தின் மேல் நாட்ய சாஸ்த்ர நிபுணனான நர்த்தனஞ் செய்த கூத்தனார் வரில், Koothanaar varil - கண்ணபிரான் வரக்கூடுமாகில் கூடலே, Koodale - கூடல் தெய்வமே! நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும் |