| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 538 | நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 5 | மாட மாளிகை சூழ் மதுரைப் பதி நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு ஓடை மா மதயானை யுதைத்தவன் கூடுமாகில் நீ கூடிடு கூடலே | ஓடை, Odai - நெற்றிப் பட்டத்தை யுடைத்தாய் மா மதம், Maa madham - மிக்க மதத்தை யுடைத்தான யானை, Yaanai - (குவலயா பீடமென்னும்) யானையை உதைத்தவன், Udhaithavan - உதைத்து முடித்த கண்ண பிரான் மாடம் மாளிகை சூழ் மதுரை பதி, Maadam maaligai soozh mathurai pathi - மாடங்களுடைய மாளிகைகளாலே சூழப்பட்ட மதுரை மாநகரிலே நாடி, Naadi - (நம் வீட்டைத்) தேடிக் கொண்டு நம் தெருவின் நடுவே வந்திட்டு, Nam theruvin naduve vandhitu - நம்முடைய வீதியின் நடுவிலே வந்து கூடும் ஆகில், Koodum aagil - (நம்மோடு) கட்டுவானாகில் கூடலே, Koodale - கூடல் தெய்வமே! நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும் |