| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 539 | நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 6 | அற்றவன் மருத முறிய நடை கற்றவன் கஞ்சனை வஞ்சனையில் செற்றவன் திகழும் மதுரைப்பதி கொற்றவன் வரில் கூடிடு கூடலே | அற்றவன், Attravan - (ஏற்கனவே எனக்கு) அற்றத் தீர்ந்தவனாய் மருதம் முறிய, Marutham muriya - (யமளார்ஜுந மென்னும்) மருத மாங்களானவை முறிந்து விழும்படியாக நடை கற்றவன், Nadai katravan - தவழ் நடை நடக்கக் கற்றவனாய் கஞ்சனை, Kanjanai - கம்சனை வஞ்சனையில், Vanjanaiyil - வஞ்சனையிலே செற்றவன், Setravan - கொன்று முடித்தவனாய் திகழும் மதுரை பதி கொற்றவன், Thigazhum mathurai pathi kotravan - விளங்குகின்ற மதுரைமா நகர்க்கு அரசனான கண்ணபிரான் வரில், Varil - வந்திடுவானாகில் கூடலே, Koodale - கூடல் தெய்வமே! நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும் |