| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 540 | நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 7 | அன்று இன்னாதான செய் சிசுபாலனும் நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும் வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன் கொன்றவன் வரில் கூடிடு கூடலே | அன்று, Andru - முற் காலத்தில் இன்னாதன செய் சிசுபாலனும், Inaadhana sei sisubalanum - வெறுக்கக் கூடிய கெட்ட காரியங்களையே செய்து வந்த சிசுபாலனும் நின்ற நீள் மருதும், Nindra neel marudhum - வழியிடையே நின்ற பெரிய இரட்டை மருத மரங்களும் எருதும், Erudhum - ஏழு ரிஷபங்களும் புள்ளும், Pullum - பகாஸுரனும் வென்றி வேல் விறல் கஞ்சனும், Vendri vel viral kanjanum - வெற்றியை விளைவிக்க வல்ல வேலாயுத மென்ன (அதைப் பிடிக்கத்தக்க) மிடுக்ககென்ன இவற்றை யுடையவனான் கம்சனும் வீழ, Veezha - முடிந்து விழும்படியாக முன், Mun - எல்லார் கண்ணெதிரிலும் கொன்றவன், Kondravan - கொன்றொழித்த கண்ண பிரான் வரில், Varil - வரக்கூடுமாகில் கூடலே, Koodale - கூடல் தெய்வமே! நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும் |