| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 541 | நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 8 | ஆவலன்புடையார் தம் மனத்தன்றி மேவலன் விரை சூழ் துவராபதிக் காவலன் கன்று மேய்த்துவிளையாடும் கோவலன் வரில் கூடிடு கூடலே | ஆவல் அன்பு உடையார் தம், Aaval anbu udaiyaar tham - ஆவலையும் அன்பையும் உடையவர்களுடைய மனத்து அன்றி மேவலன், Manathu andri mevalan - நெஞ்சு தவிர மற்றோரிடத்திலும் பொருந்தாதவனும் விரை சூழ் துவராபதி காவலன், Virai soozh Dhuvaraapathi kaavalan - நல்ல வாஸனை சூழ்ந்த த்வாரகாபுரிக்கு நிர்வாஹகனும் கன்று மேய்த்து விளையாடும் கோவலன், Kanru meithu vilaiyaadum kovalan - கன்றுகளை மேய்த்து விளையாடும் கோபாலனுமாகிய கண்ணபிரான் வரில், Varil - வரக் கூடுமாகில் கூடலே, Koodale - கூடல் தெய்வமே! நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும் |