| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 542 | நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 9 | கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று பண்டு மா வலி தன் -பெரு வேள்வியில் அண்டமும் நிலனும் அடி யொன்றினால் கொண்டவன் வரில் கூடிடு கூடலே | பண்டு, Pandu - முற் காலத்திலே கோலம் கொண்ட குறள் உரு ஆய், Kolam konda kural uru aai - (முப்புரி நூலும் க்ருஷ்ணாஜிநமும் முஞ்ஜியும் பவித்ரமும் தண்டுமான) கோலம் பூண்ட வாமந ரூபியாய் மாவலி தன், Maavali than - பெரு வேள்வியில் சென்று அண்டமும், Andamum - மேலுலகங்களையும் நிலனும், Nilanum - கீழுலகங்களையும் அடி ஒன்றினால், Adi ondrinaal - ஒவ்வோரடியாலே கொண்டவன், Kondavan - அளந்து கொண்ட த்ரிவிக்ரமன் வரில், Varil - வருவானாகில் கூடலே, Koodale - கூடல் தெய்வமே! நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும் |