| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 543 | நாச்சியார் திருமொழி || 4 - தெள்ளியார் (கூடலிழைத்தல்) 10 | பழகு நான் மறையின் பொருளாய் மத மொழுகு வாரணம் உய்ய வளித்த எம் அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார் வரில் கூடிடு கூடலே | பழகு நால்மறையின் பொருள் ஆய, Pazhagu naalmaraiyin porul aaya - அநாதியான சதுர் வேதங்களின் உட்பொருளாயிருக்கு மவனாய் மதம் ஒழுகு வாரணம் உய்ய அளித்த, Madham ozhugu vaaranam uyya alitha - மத ஜலம் பெருகா நின்ற கஜேந்த்ராழ்வான் (துயர் நீங்கி) வாழும்படி க்ருபை செய்தருளினவனாய் எம் அழகனார், Em azhaganaar - எம்மை ஈடுபடுத்த வல்ல அழகை யுடையனாய் அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார், Ani aaichiyar sindhaiyul kuzhaganaar - அழகிய கோபிமார்களின் நெஞ்சினுள்ளே குழைந்திருக்கு மவனான கண்ணபிரான் வரில், Varil - வரக் கூடுமாகில் கூடலே, Koodale - கூடல் தெய்வமே! நீ கூடிடு, Nee koodidu - நீ கூடவேணும் |