Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 546 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
546நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 2
வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ள விழ் செண்பகப் பூ மலர்க் கோதிக் களித்து இசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்
கள் அவிழ், Kal avizh - தேன் பெருகா நின்றுள்ள
செண்பகம் பூ, Senpagam Poo - செண்பகப் பூவிலே
மலர் கோதி, Malar Kodhi - (அஸாரமான அம்சத்தைத் தள்ளி) ஸாரமான அம்சத்தை அநுபவித்து
களித்து, Kalithu - (அதனால்) ஆநந்தமடைந்து
இசை பாடும் குயிலே, Isai Padum Kuyile - (அந்த ஆநந்தத்திற்குப் போக்கு வீடாக) இசைகளைப் பாடா நின்றுள்ள கோகிலமே!
வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட, Vellai Vili Sangu Idangaiyil Konda - சுத்த ஸ்வபாவமாய் (கைங்கர்ய ருசி யுடையாரை) அழைக்கு மதான ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தை இடக் கையிலே ஏந்திக் கொண்டிருக்கிற
விமலன், Vimalan - பவித்ரனான பரம புருஷன்
உரு, Uru - தனது திவ்யமங்கள விக்ரஹத்தை
எனக்கு காட்டான், Enakku Kaataan - எனக்கு ஸேவை ஸாதிப்பிக்க மாட்டே னென்கிறான் (அதுவுமல்லாமல்)
உள்ளம், Ullam - என்னுடைய ஹருதயத்தினுள்ளே
புகுந்து, Pugundhu - வந்து புகுந்து
என்னை நைவித்து, Ennai Naivithu - என்னை நைந்து போம் படி பண்ணி (அவ்வளவிலே நான் முடிந்து போவதாயிருந்தால் இன்னமும் என்னை ஹிம்ஸிப் பதற்காக முடிய வொட்டாமல்)
நாளும் உயிர் பெய்து, Naalum Uyir Peidhu - நாள் தோறும் பிராணனைப் பெருக்கடித்து
கூத்தாட்டு காணும், Koothaatu Kaanum - என்னைத் தத்தளிக்கச் செய்து வேடிக்கை பாரா நின்றான்
இருந்து, Irundhu - (நீசெய்ய வேண்டிய தென்னவென்றால்) என் அருகில் இருந்துகொண்டு
மெள்ளமிழற்றி மிழற்றது, Mellamizhatri Mizhatradhu - உன் மழலைச் சொற்களைச் சொல்லி விலாஸ சேஷ்டிதங்களைப் பண்ணாமல்
என் வேங்கடவன் வர, En Vengadavan Vara - எனக்காகத் திருவேங்கடமலையிலே வந்து நிற்கிற எம்பெருமான் (இங்கே) வரும்படியாக
கூவாய், Koovai - கூப்பிடவேணும்