திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 549 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
549நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 5
மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன் பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்
பதவுரை Show / Hide
மெல்நடை அன்னம், Melnadai Annam - மந்தகதி யுடைய அன்னப் பறவைகள்
பரந்து, Parandhu - எங்கும் பரவி
விளையாடும், Vilaiyadum - விளையாடுவதற்கு இருப்பிடமான
வில்லிபுத்தூர், Villiputhoor - ஸ்ரீவில்லிபுத்தூரிலே
உறைவான் தன், Uraivan Than - எழுந்தருளி யிருக்கிற எம்பெருமானுடைய
பொன் அடி, Pon adi - அழகிய திருவடிகளை
காண்பது ஓர் ஆசையினால்,Kanbadhu Or Aasaiyinal - காண வேணுமென்றுண்டான ஆசையினாலே
பொரு கயல் என் கண் இணை, Poru Kayal En Kan Inai - சண்டையிடும் இரண்டு கெண்டைகள் போன்ற எனது கண்கள்
துஞ்சா,Thunjaa - உறங்குகின்றனவில்லை
குயிலே, Kuyile - ஓ குயிலே!
உலகு அளந்தான், Ulagu Alandhaan - (த்ரிவிக்ரமனாய்) உலகங்களை அளந்த பெருமான்
வர, Vara - இங்கே வரும்படி
கூவாய், Koovai - கூவு (அப்படி கூவுவாயாகில்)
இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி எடுத்த என் கோலம் கிளியை, In Adisilodu Paal amudhu Ootti Edutha En Kolam Kiliyai - கன்ன லமுதையும் பாலமுதையும் ஊட்டி வளர்க்கப் பெற்ற எனது அழகிய கிளியை
உன்னோடு, Unnodu - உன்னோடே
தோழமை கொள்ளுவன், Thozhamai Kolluvan - ஸ்நேஹப் படுத்தி வைப்பேன்