திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 550 | நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 6 | எத்திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய
முத்தன்ன வெண் முறுவல் செய்ய வாயும் முலையும் அழகு அழிந்தேன் நான்
கொத்தலர் காவில் மணித் தடம் கண் படை கொள்ளும் இளங்குயிலே
என் தத்துவனை வரக் கூவிற்றி யாகிற்றிலை யல்லால் கைம்மாறு இலேனே | பதவுரை Show / Hideகொத்து, Kothu - பூங்கொத்தானவை அலர், Alar - மலருமிடமான காவில், Kaavil - சோலையிலே மணி தடம், Mani Thadam - அழகானவொரு இடத்திலே கண் படை கொள்ளும், Kan Padai Kollum - உறங்குகின்ற இளங்குயிலே!, Ilanguyile! - சிறுகுயிலே! எத் திசையும், Eththisaiyum - எல்லா திக்குகளிலும் அமரர் பணிந்து ஏத்தும், Amarar Panindhu Ethum - தேவர்கள் வணங்கித் துதிக்கும்படியான பெருமை வாய்ந்த செய்ய வாயும், Seiya Vaayum - சிவந்த அதரமும் முலையும், Mulaiyum - முலைகளும் (ஆகிய இவை) அழகு அழிந்தேன், Azhagu Azhindhen - அழகு அழிந்ததாம்படி விகாரப்பட்டேன் என் தத்துவனை, En Thathuvanai - நான் உயிர்தரித்திருப்பதற்கு மூல காரணமான அவ் வெம்பெருமானை இருடீகேசன், Irudeekesan - கண்டாருடைய இந்திரியங்களை யெல்லாம் கொள்ளை கொள்ளுமவனான எம்பெருமான் வலி செய்ய, Vali Seiya - தன்னை எனக்குக் காட்டாமல் மிறுக்குக்களைப் பண்ண (அதனாலே) நான், Naan - நான் முத்து அன்ன வெண் முறுவல், Muthu Anna Venn Muruval - முத்துப் போல் வெளுத்த முறுவலும் வர கூகிற்றி ஆகில், Vara Kookitri Aagil - இங்கே வரும்படி கூவ வல்லையே யானால் தலை அல்லால், Thalai Allal - என் வாழ் நாள் உள்ளவளவும் என் தலையை உன் காலிலே வைத்திருப்பது தவிர கைம்மாறு இலேன், Kaimaaru Ilen - வேறொரு ப்ரத்யுபகாரம் செய்ய அறியேன் |