| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 551 | நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 7 | பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும் அங்குயிலே உனக்கு என்ன மறைந்து உறைவு ஆழியும் சங்கும் ஒண் தண்டும் தங்கிய கையவனை வரக் கூவில் நீ சாலத் தருமம் பெறுதி | அம் குயிலே!, Am Kuyile! - அழகிய குயிலே! பொங்கிய பால் கடல், Pongiya Paal Kadal - அலை யெறிவை யுடைய திருப் பாற்கடலில் பள்ளி கொள்வானை, Palli Kolvanai - பள்ளி கொண்டருளும் எம்பெருமானோடே புணர்வது ஓர் ஆசையினால், Punarvadhu Or Aasaiyinal - ஸம்ச்லேஷிக்க வேணுமென்று உண்டான ஆசையினால் என் கொங்கை, En Kongai - எனது முலைகள் கிளர்ந்து, Kilarndhu - பருத்து குதுகலித்து, Kudhukalithu - மிக்க உத்ஸாஹங் கொண்டு ஆவியை, Aaviyai - எனது உயிரை குமைத்து ஆகுலம் செய்யும், Kumaithu Aagulam Seiyum - உருக்கி வியாகுலப் படுத்தா நின்றன மறைந்து உறைவு, Maraindhu Uravu - என் கண்ணுக்குப் புலப்படாமல் நீ மறைந்திருப்பதனால் உனக்கு என்ன, Unakku Enna - உனக்கு என்ன புருஷார்த்தம்? ஒண் ஆழியும் சங்கும் தண்டும் தங்கிய கையவனை வர, On Aazhiyum Sangum Thandum Thangiya Kaiyavanai Vara - திருவாழி திருச்சங்கும் ஸ்ரீ கதையும் பொருந்திய திருக் கைகளுடைய பெருமாள் இங்கே வரும்படி நீ கூவில், Nee Koovil - நீ கூவுவாயாகில் சால, Saala - மிகவும் தருமம் பெறுதி, Tharumam Peruthi - தர்மம் செய்தாயாவாய் |