Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 553 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
553நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 9
பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பதோர் பாசத்தகப் பட்டிருந்தேன்
பொங்கொளி வண்டிரைக்கும் பொழில் வாழ் குயிலே குறிக் கொண்டிது நீ கேள்
சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருத்தில் இரண்டைத் தொன்றேல் திண்ணம் வேண்டும்
பொங்கு ஒளி வண்டு, Pongu Oli Vandu - மிக்க வொளியை யுடைய வண்டுகளானவை
இரைக்கும் பொழில், Iraikkum Pozhil - (மது பாந மயக்கத்தாலே) இசை பாடாநின்ற சோலையிலே
வாழ், Vaazh - களித்து விளையாடுகிற
குயிலே!, Kuyile! - கோகிலமே!
இது, Idhu - நான் சொல்லுகிற இதனை
நீ குறிக்கொண்டு கேள், Nee Kurikondu Kel - நீ பராக்கில்லாமல் ஸாவதாநமாய்க் கேள்
நான், Naan - நான்
பைங்கிளி வண்ணன் சிரி தரன் என்பது ஓர் பாசத்து, Paingili Vannan Siri Tharan Enpathu Or Pasathu - பசுங்கிளி போன்ற நிறத்தை யுடையனான ஸ்ரீ: பதி யென்கிற ஒரு வலையிலே
அகப்பட்டு இருந்தேன், Agappattu Irundhen - சிக்கிக் கொண்டு கிடக்கிறேன்
இங்கு உள்ள காவினில், Ingu Ulla Kaavinil - இந்தச் சோலையிலே
வாழ கருதில், Vaazha Karuthil - நீ வாழ நினைக்கிறாயாகில்
சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல், Sangodu Chakkarathaan Vara Koovuthal - திருவாழி திருச்சங்குடையனான எம்பெருமான் (இங்கே) வரும்படி கூவுவதென்ன
பொன் வளை கொண்டுதருதல், Pon Valai Kondu Tharuthal - (நான் இழந்த) பொன் வளைகளைக் கொண்டு வந்து கொடுப்பதென்ன
இரண்டத்து, Irandathu - இவையிரண்டுள் எதாவதொரு காரியம்
திண்ணம் வேண்டும், Thinnam Vendum - நீ கட்டாயம் செய்து தீரவேண்டும்