Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 554 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
554நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 10
அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்
என்றும் இக்காவில் இருந்து இருந்து என்னைத் ததைத்தாதே நீயும் குயிலே
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்
அன்று, Andru - மஹாபலி கொழுத்திருந்த அக் காலத்தில்
உலகம் அளந்தானை, Ulagam Alanthaanai - மூவுலகங்களையும் அளந்து கொண்டவனான எம்பெருமான் விஷயத்திலே
உகந்து, Uganthu - நான் கைங்கர்யத்தை ஆசைப்பட
அவன், Avan - அவ் வெம்பெருமான்
அடிமைக் கண், Adimai Kan - (அந்த) கைங்கரியத்திலே
வலி செய்ய, Vali Seiya - வஞ்சனை பண்ண (அதற்கு நான் நோவு பட்டிருக்கிற சமயத்திலே)
தென்றலும், Thendralum - தென்றல் காற்றும்
திங்களும், Thingalum - பூர்ண சந்திரனும்
என்னை, Ennai - என்னை
ஊடு அறுத்து நலியும் முறைமை, Oodu Aruthu Naliyum Muraimai - உள்ளே பிளந்து கொண்டு புகுந்து ஹிம்ஸிக்கும் நியாயத்தை
அறியேன், Ariyen - அறிகின்றிலேன்
குயிலே!, Kuyile! - ஓ குயிலே!
நீயும், Neeyum - (என்னுடைய க்ஷேமத்தை விரும்புமனான) நீயும்
என்றும், Endrum - எந்நாளும்
இக் காவில், Ik Kaavil - இந்தக் சோலையிலே
இருந்து இருந்து, Irundhu Irundhu - இடைவிடாமலிருந்துகொண்டு
என்னை, Ennai - (ஏற்கனவே மெலிந்திருக்கிற) என்னை
ததைத்தாதே, Thadhaithaathe - ஹிம்ஸியாமலிரு
இன்று, Indru - இன்றைக்கு
நாராயணனை வர கூவாயேல், Narayananai Vara Koovayel - ஸ்ரீமந்நாராயணன் இங்கே வரும்படி அவனை நீ கூவாமற் போனாயாகில்
இங்குத்தை நின்றும், Inguthai Nindrum - இந்தச் சோலையிலிருந்து
துரப்பன், Thurappan - உன்னைத் துரத்தி விடுவேன்