திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 557 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
557நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 2
நாளை வதுவை மணம் என்று நாளிட்டு பாளை கமுகு பரிசிடைப் பந்தல் கீழ் கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர் காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்
பதவுரை Show / Hide
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
நாளை, Naalai - நாளைக்கு
வதுவை மணம் என்று நாள் இட்டு, Vadhuvai Manam Endru Naal Ittu - விவாஹ மஹோத்ஸவ மென்று முஹூர்த்தம் நிர்ணயித்து
பாளை கமுகு பரிசு உடை பந்தல் கீழ், Paalai Kamugu Parisu Udai Pandhal Keezh - பாளைகளோடு கூடின பாக்கு மரங்களாகிற அலங்காரங்களை யுடைத்தான மணப் பந்தலின் கீழே
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை, Kolari Maadhavan Govindhan Enbaan Or Kaalai - நரஸிம்ஹனென்றும் மாதவனென்றும் கோவிந்தனென்றும் திருநாமங்கள் பூண்ட ஒரு யுவாவானவன்
புகுத, Pugutha - பிரவேசிக்க
நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்