| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 558 | நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 3 | இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் வந்து இருந்து என்னை மகள் பேசி மந்திரத்து மந்திரக் கோடி யுடுத்தி மண மாலை அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் | தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே! இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம், Indiran Ullitta Devar Kuzham ellam - இந்திரன் முதலான தேவ ஸமூஹங்களெல்லாம் வந்து இருந்து, Vandhu Irundhu - (இந்திலத்திலே) வந்திருந்து என்னை மகள் பேசி, Ennai Magal Pesi - என்னைக் கல்யாணப் பெண்ணாக வார்த்தை சொல்லி மந்திரித்து, Mandhirithu - அதற்குமேல் ஸம் பந்திகள் ஒருவர்க்கொருவர் செய்து கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் விஷயமாக யோசித்து முடிவுசெய்து கொண்டு (பிறகு) அந்தரி, Andhari - ‘துர்க்கை‘ என்கிற நாத்தனார் மந்திரம் கோடி உடுத்தி, Mandhiram Kodi Uduthi - கல்யாண புடைவையை எனக்கு உடுத்தி மணம் மாலை சூட்ட, Manam Maalai Soota - பரிமளம் மிக்க புஷ்பங்களையும் சூட்ட நான் கனாக் கண்டேன், Naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன் |