திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 564 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
564நாச்சியார் திருமொழி || 6 - வாரணம் ஆயிரம் (ஆயனை மணம் செய்து கொள்வதாகத் தான் கண்ட கனாவைத் தலைவி தோழிக்கு கூறுதல்) 9
வரிசிலை வாண் முகத்து என் ஐமார் தாம் வந்திட்டு எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
பதவுரை Show / Hide
தோழீ, Thozhi - என் உயிர்த் தோழியே!
வரி சிலை வான் முகம், Vari Silai Vaan Mugam - அழகிய வில் போன்ற புருவத்தையும் ஒளி பொருந்திய முகத்தை யுடையவர்களான
என் ஐமார் தாம், En Aimaar Thaam - எனது தமையன்மார்கள்
வந்திட்டு, Vandhittu - வந்து
எரிமுகம் பாரித்து, Erimugam Paarithu - அக்னியை நன்றாக ஜ்வலிக்கச் செய்து
முன்னே என்னை நிறுத்தி, Munne Yennai Niruthi - அந்த அக்னியின் முன்னே என்னை நிறுத்தி
அரி முகன், Ari Mugan - (ஹிரண்ய வதத்திற்காக) ஸிம்ஹ முகத்தை யுடைனாய் அவதரித்த
அச்சுதன், Achudhan - கண்ண பிரானுடைய
கை மேல், Kai Mel - திருக் கையின் மேல்
என் கை வைத்து, En Kai Vaithu - என்னுடைய கையை வைத்து
பொரி, Pori - பொரிகளை
முகந்து அட்ட, Mugandhu Atta - அள்ளிப் பரிமாற
நான் கனாக் கண்டேன், naan Kanaa Kanden - நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்