திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 567 | நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 1 | கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ
திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே | பதவுரை Show / Hideஆழி வெண் சங்கே, Aazhi Ven Sange - கம்பீரமாய் வெளுத்திரா நின்ற ஸ்ரீபாஞ்ச ஜந்யாழ்வானே மருப்பு ஓசித்த மாதவன் தன், Marupu Ositha Madhavan Than - (குவயாபீட யானையன்) கொம்பை முறித்த கண்ண பிரானுடைய வாய், Vaai - திரு அதரத்தினுடைய சுவையும், Suvaiyum - ரஸத்தையும் நாற்றமும், Naatramum - பரிமளத்தையும் விரும்புற்று, Virumputru - ஆசையோடே கேட்கின்றேன், Ketkinren - (உன்னைக்) கேட்கிறேன் திருப் பவளச் செவ்வாய் தான், Thiru Pavala Chevvaai Thaan - (அப்பெருமானுடைய) அழகிய பவளம் போன்ற சிவந்த திருவதரமானது கருப்பூரம், Karupooram - பச்சைக் கற்பூரம் போல் நாறுமோ?, Naarumo? - பரிமளிக்குமோ? (அல்லது) கமலப் பூ, Kamala Poo - தாமரைப் பூப் போலே நாறுமோ?, Naarumo? - பரிமளிக்குமோ? தித்தித்திருக்குமோ, Thithithirukkumo - மதுரமான ரஸத்தை உடைத்தாயிருக்குமோ? சொல், Sol - இன்னபடி யிருக்குமென்று எனக்குச் சொல் |