திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 568 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
568நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 2
கடலில் பிறந்து கருதாது பஞ்ச சனன் உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத்தலத் திடரில் குடியேறித் தீய வசுரர் நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற் சங்கே
பதவுரை Show / Hide
நல் சங்கே, Nal Sange - அழகிய சங்கே!
கடலில், Kadalil - ஸமுத்திரத்திலே
பிறந்து, Pirandhu - பிறந்து (அங்கு நின்றும்)
பஞ்சசனன் உடலில் போய் வளர்ந்து, Panjasanan Udalil Poi Valarndhu - பஞ்சஜனனென்ற அஸுரனுடைய சரீரத்திற் போய் வளர்ந்து
கருதாது, Karudhadhu - (இப்படி பிறந்த விடத்தையும் வளர்ந்த விடத்தையும்) நினையாமல்
ஊழியான், Oozhiyaan - எம்பெருமானுடைய
கை தலம் திடரில், Kai Thalam Thidaril - கைத் தலமாகிற உந்நத ஸ்தானத்திலே
குடி ஏறி, Kudi eri - குடி புகுந்து
தீய அசுரர், Theeya Asurar - கொடியவர்களான அசுரர்கள்
நடலைப் பட, Nadalai Pada - துன்பப்படும்படி
முழங்கும் தோற்றத்தாய், Muzhangum Thotrathaai - ஒலி செய்யும்படியான மேன்மை யுடையையா யிரா நின்றாய் (உன்பெருமையே பெருமை)