திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 569 | நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 3 | தட வரையின் மீத சரற் கால சந்திரன்
இடை உவாவில் வந்து எழுந்தால் போலே நீயும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்று இருந்தாய் கோலப் பெரும் சங்கே | பதவுரை Show / Hideகோலம் பெரு சங்கே, Kolam Peru Sange - அழகிய பெரிய சங்கே! சாற்காலம் சந்திரன், Saarkaalam Chandiran - சரத் கால சந்திரன் உவா இடையில், Uvaa Idaiyil - பௌர்ணமியினன்று தட வரையின் மீது வந்து எழுந்தால் போல, Thada Varaiyin Meedhu Vandhu Ezhunthaal Pol - பெரிய உதய கிரியிலே வந்து உதித்தாற்போல நீயும், Neeyum - நீயும் வடமதுரையார் மன்னன் வாசு தேவன் கையில், VadaMathuraiyaar Mannan Vasudevan Kaiyil - வடமதுரையிலுள்ளார்க்கு அரசானான கண்ணபிரானுடையத் திருக் கையில் குடி ஏறி, Kudi eri - குடி புகுந்து வீற்றிருந்தாய், Veetrirunthaai - உன் மேன்மையெல்லாம் தோற்ற இரா நின்றாய் |