திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 570 | நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 4 | சந்தர மண்டலம் போல் தாமோதரன் கையில்
அந்தரம் ஓன்று இன்றி ஏறி அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம் புரியே
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே | பதவுரை Show / Hideவலம்புரியே!, Valampuriye! - வலம்புரிச் சங்கே! தமோதரன் கையில், Dhamodharan Kaiyil - கண்ண பிரானது திருக்கையில் சந்திர மண்டலம் போல், Chandira Mandalam Pol - சந்திர மண்டலம் போலே அந்தரம் ஒன்று இன்றி ஏறி, Andharam Ondru Indri eri - இடைவிடாது இருந்து கொண்டு அவன் செவியில், Avan Seviyil - அவனுடைய காதில் மந்திரம் கொள்வாய் போலும், Mandhiram Kolvaai Polum - ஏதோ ரஹஸ்யம் பேசுகிறாய் போலிரா நின்றாய், இந்திரனும், Indiranum - (செல்வத்தில் மிக்கவனாகப் புகழ் பெற்ற) இந்திரனும் செல்வத்துக்கு, Selvathuku - ஐச்வர்ய விஷயத்தில் உன்னோடு ஏலான், Unnodu elaan - உனக்கு இணையாக மாட்டான் |